Tuesday, January 1, 2013

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே-மூன்று பேர் மூன்று காதல்


படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: நந்தினி ஸ்ரீகர்
பாடல்:நா.முத்துக்குமார்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே
வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே

நதியில் விழும் இலை இந்த காதலா
கரையை தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா எழுந்திடுவேனா
எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா
உன்னை பார்ப்பதை நான் அறியேன்
உன்னை பார்கிறேன் வேறறியேன்
என்னுடன் நீயா உன்னுடன் நானா நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே

எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா
கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசை அரியாது திரும்பிடுவேனா
காதலின் பொன் ஊஞ்சலில்
அசைவது சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
(ஆஹா காதல்)

No comments:

Post a Comment