Friday, November 30, 2012

தீயில் விழுந்த தேனா-வரலாறு


படம் : வரலாறு
இசை : A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : A.R.ரஹ்மான்

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

மழையின் நீர் வாங்கி
மலையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி
தனயன் அழுவானோ
உயிரை தந்தவளின்
உயிரை காப்பானா
கடனை தீர்ப்பானா

ஏஏஏ......
தங்கம் போலே இருந்தவள் தான்
சருகை போலே ஆனதனால்
சிங்கம் போல இருந்த மகன்
செவிலியை போல ஆவானா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா
நீ சுமந்த பிள்ளையாய்
நான் இருந்தேன் அம்மா
நான் சுமக்கும் பிள்ளையாய்
நீ ஆனாய்….அம்மா

எனக்கு எதும் ஆனதுனா
உனக்கு வேறு பிள்ளை உண்டு
உனக்கு எதும் ஆனதுனா
எனக்கு வேறு தாய் இருக்கா

ஏஏஏ......
நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை
கண்ணில் மணியாய் சுமந்தவளை
மண்ணில் விட்டு விடுவானா
மனதில் மட்டும் சுமப்பானா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

தாயின் மடி தானே
உலகம் தொடங்கும் இடம்
தாயின் காலடியே
உலகம் முடியும் இடம்
உயிரை தந்தவளின்
உயிரை காப்பானா
கடனை தீர்ப்பானா

ஏஏஏ......
கருணை தாயின் நினைவினிலே
கல்லும் கொஞ்சம் அழுது விடும்
கண்ணீர் துளிகள் விழுந்த பின்னே
கண்ணின் மணியும் விழுந்துவிடும்

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

இல்லை தாயுமனவனா
இல்லை தாயுமனவனா

காதல் நெருப்பின் நடனம்-வெயில்


திரைப்படம்: வெயில்
பாடியவர்கள் : சின்மயி , கார்த்திக், நிதிஷ்
இசை: G.V.பிரகாஷ்
வரிகள் : நா.முத்துக்குமார்

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

கனவுகள் பூக்கின்ற செடி என
கண்கள் மாறுதுன்னாலே
வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம் வழியிதுன்னாலே

உனது வளையாடும் அழகான
கை சீண்டவே
தலையில் இலை ஒன்று விழ வேண்டுமே

குடைகள் இல்லாத நேரத்து
மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே
உனது முத்ததில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சோடி நதி பாயுதே

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயனம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

வானத்தின் மறுபுறம்
பறவையாய் நீயும் நானும் போவோமே
பூமியின் அடிப்புறம்
வேர்களாய் நீண்ட தூரம் போவோமே

கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே
நூறு நூற்றாண்டு காணாத பூவாசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே
என்உள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

பிறை தேடும் இரவிலே உயிரே-மயக்கம் என்ன


திரைப்படம் : மயக்கம் என்ன
இசை : G.V. பிரகாஷ்,
பாடியவர்கள் :G.V. பிரகாஷ்,சைந்தவி
வரிகள் : தனுஷ்

பிறை தேடும் இரவிலே உயிரே
எtதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
(பிறை)

இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
(பிறை)

அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
(பிறை)

விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதைக் காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொல்லும் இந்த பூமியில்,
நீ வரம் தரும் இதம்.

நான் சொன்னதும் மழை வந்துச்சா-மயக்கம் என்ன




படம்: மயக்கம் என்ன
சை: G.V பிரகாஷ்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,சைந்தவி
வரிகள்: செல்வராகவன்

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன தூக்கி போக தான் வருவேனுன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா
கரு நாக்கு கார புள்ள
கருப்பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி
ஓஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

ஆடு ... ஆடு ...

ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கன்னி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ணை மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவுல தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்
நீ வர்றியாடி
கருவாட்டு கொழம்பா ஆ ஆ... நீயும்... ருசி ஏத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது.

ஓட ஓட ஓட தூரம் கொறயல- மயக்கம் என்ன


படம்: மயக்கம் என்ன
இசை: G.V பிரகாஷ்
பாடியவர்: தனுஷ்
வரிகள்: செல்வராகவன்,தனுஷ்

ஓட ஓட ஓட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல

ஃப்ரியா சுத்தும் போது ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்சு கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது

கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கர் ஆயிட்டேன்
குண்டு சட்டியில
ரெண்டு குதிர வண்டி ஓட்டுறேன்

ஒரு பீச்சுல தனியா அலைஞ்சேன் அலைஞ்சேன்
நடு ரோட்டுல அழுதேன் புரண்டேன் கிழிஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல கழுதை நான் இல்லையே
ஜாணும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே
கிராக்கா மாறிட்டேன் ஜோக்கர் ஆயிட்டேன்
பீயூசு போன பின் பல்புக்கான சுவிட்ச்ச தேடுறேன்

ஓட ஓட ஓட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல

:ஃப்ரியா சுத்தும் போது ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

நடு ராத்திரி எழுந்தேன் படுத்தேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்

மீனா நீந்தறேன் நீந்தறேன்
கடலும் சேரலையே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் ஏறலையே

கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கர் ஆயிட்டேன்
கேள்வி கேட்டு கேட்டு
கேள்விகுறி போல நிக்குறேன்

ஓட ஓட ஓட தூரம் கொறயல
தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல
ஃப்ரியா சுத்தும் போது
ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப
ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்சு கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது

காதல் எங் காதல் அது கண்ணீருல


படம்: மயக்கம் என்ன
இசை: G.V பிரகாஷ்
பாடியவர்கள்: தனுஷ், செல்வராகவன்
வரிகள்: தனுஷ்

காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல

ஏ மச்சி உட்ரா
ஏய்என்னை பாட உடுடா
நா பாடியே தீருவேன்
சரி பாடித் தொல

காதல் எங் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாழான நெஞ்சு இப்ப வெந்னீருல

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல
சூட்டுல எங்குறேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ வொர்த்தே இல்ல

தேனூறுன நெஞ்சுக்குள்ள
கல்லூறுதே என்ன சொல்ல

ஒ படகிருக்கு வலை இருக்கு
கடலுக்குள்ள மீனா இல்ல

வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல

மான் விழி தேன் மொழி
என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி

ப்ரெண்ட்சு கூடத்தான் இருக்கணும் மாமா
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட
உன்னத் தவிர எனக்கொண்ணும் இல்ல

ஒ... கனவிருக்கு கலரே இல்ல
படம் பாக்கறேன் கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல
உறவிருக்கு பெயரே இல்ல

வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி...

போதும் மச்சான்

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

குட் நைட்...குட் நைட்...
ஆங்... ஓகே
ஏய்...
குட் நைட்... தேங் யு சோ மச்... மச்சி

என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே-மயக்கம் என்ன


படம்: மயக்கம் என்ன
இசை: G.V பிரகாஷ்
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
வரிகள்: செல்வராகவன்

என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே
காணாத துயரம் கண்ணிலே
ஓயாத சலனம் நெஞ்சிலே
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்

வாழ்கையின் பொருள்தான் என்ன
வாழ்ந்துதான் பார்த்தால் என்ன
கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய்
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
உனது அரசாங்கம் பெரும் காடு
உலகம் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை அணைத்து கொண்டு
உள்ளம் மருகி நின்றால்
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா

உள்ளிருக்கும் உன்னை தேடி
ஓயாமல் அலைவோர் கோடி
கருவறையா நீ கடல் அலையா
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
என்னில் கடவுள் யார் தேடுகிறோம்
பொய்யாய் எவரின் பின் ஓடுகிறோம்
கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த
பெருந்தாயின் கருணை மறக்கிறோம்
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்

என் வெண்ணிலவே எரிக்காதே-ஆடுகளம்


திரைப்படம் : ஆடுகளம்
பாடியவர் : கே கே
இசை: G.V. பிரகாஷ்
வரிகள் : V. I. S. ஜெயபாலன்

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே

பனியில் இலையற்ற தனிமரம் நான்
பாலையில் துடித்திடும் சிறுப்புழு நான்
காதல் தேவதைப் போல் வந்து
களப்பலிக்கேட்பதேன் மோகினியே
நீ ஏன் எரித்தாய் மீனாட்சி
உன் நிழலில் வாழும் மதுரையடி!
மழையாய் தர வா நீ
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

கள்ளிப் பாலை ஊற்றிவிட்டு
வெள்ளி நிலவாய்ப் போனவளே
என்னில் வளர்த்த பொற்சிறகை
ஒடிந்திட நடந்திடும் கொடும் புயலே
அழகரைத் தொட்டதால் வைகை நதி
அலை கடல் சேரா மதுரையடி
என் விடிவா முடிவா நீ!
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏதோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

கண்கள் நீயே காற்றும் நீயே-முப்பொழுதும் உன் கற்பனைகள்


திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: சித்ரா
இசை:  G.V. பிரகாஷ்
வரிகள்: தாமரை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊணும்நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
(கண்கள் நீயே..காற்றும் நீயே )

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் தேனே
தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்

எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

வெயிலோடு விளையாடி-வெயில்


படம்: வெயில்
இசை: G.V.பிரகாஷ்
பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்: திப்பு, பிரசன்னா, ஜாஸி கிஃப்ட், கைலாஷ் கெர்

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை
(வெயிலோடு)

வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
(வெயிலோடு)

வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்

ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்

தொப்புள்கொடியைப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
(வெயிலோடு)


முதல் மழை எனை நனைத்ததே


திரைப்படம்: பீமா
பாடியவர்: ஹரிஹரன் , மஹதி, பிரசன்னா
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்வரிகள்: நா.முத்துக்குமார்

முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ம்ம் இதமாய் மிதந்ததே

கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்

என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம்நின்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்

கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்

முதல் மழை எனை நனைத்ததே ல ல லலா
முதன் முறை ஜன்னல் திறந்ததே ல ல லலா

பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓ ஓ ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்

பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை-அங்காடித் தெரு


படம்: அங்காடித் தெரு
இசை: G.V பிரகாஷ்
பாடியவர்: பிரசன்னா

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)



கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு-பொக்கிஷம்

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: பிரசன்னா

கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு
முடிவு தெரியும் வரைப் பொருத்திரு
அதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகள் உண்டு
விடியும் பொழுதுவரை விழித்திரு
இது யூகிக்க முடியாகக் கணிதமே
ஒரு போருக்குப் போகும் பயணமே
இன்பம் தேடும் காதல் ஏற்றிடாத உலகுடா
துன்பம் நீங்கிப் போகும் தோல்விகூட அழகுடா
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே

தவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறு புறமும்
தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை
இரவு துயிலிருக்க அலையில் புரல்கிறது ஆண்கரை
இந்த வாழ்வில் ஏதும் நேரலாம்
அந்த ஈசன் தீர்ப்பைக் கூறலாம்
இன்றுப்போல நாளை இல்லை என்றும் ஆகலாம்
நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே



சிறு புன்னகை ஒருவரின் முகவரி-பொக்கிஷம்


படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: பிரசன்னா

சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

உறவைத் தொடர்ந்து வரும் உயிர்கள் பழகவரும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை இரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக் கேட்கக் கேட்கப் புதுமையே
அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே
(சிறு புன்னகை..)

வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை
புதிய உறவுகளில் நிறைகிறேன்
அறிவு வெளியுலகில் அடையும்
அவஸ்தைகளைப் பொழியும்
நிலவொளியில் பொசுக்கினேன்
இன்பம் யாவும் காட்டும் மனதிரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும்
நீயும் நானும் ஒருவனே
நமைப்பேச்சில் யார்க்கும் தோழன் யாரு
இறைவனே..
(சிறு புன்னகை..)

உலகம் நினைவில் இல்லை-பொக்கிஷம்


படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: பிரசன்னா, மஹதி

உலகம் நினைவில் இல்லை
உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்
மதியவெயில் அடித்தும் மனதில் மழைப்பொழிந்த
இனிய மணித்துளியில் குளிக்கிறேன்
கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் அனுபவம்

இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா

எனது மனக்குகையில் புதிய ஒளிப்ப்ரவ
புவியில் மறுப்படியும் பிறக்கிறேன்

அழகாய் பூக்குதே- நினைத்தாலே இனிக்கும்


படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர்

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
(அழகாய்..)

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
(அழகாய்..)

மக்காயலா மக்காயலா-நான்


படம் : நான்
இசை : விஜய் ஆண்டனி
பாடியவர்கள் : கிருஷ்ணன் மகேஷ்சன், மார்க் தாமஸ், சக்திஸ்ரீ
வரிகள் : ப்ரியன்

மக்காயலா மக்காயலா
இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை
இல்லை இல்லை இல்லை
தனிமையிலே கூச்சம் இல்லை
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை
காற்றுக்கென்றும் பாரம் இல்லை
எல்லைகள் மீது தப்பில்லை

மக்காயலா மக்காயலா ...
இரவினில் தூக்கம் கிடையாதே
பகல் வரை ஆட்டம் முடியாதே
கலர் கலர் கனவுகள் குறையாதே குறையாதே
நேற்றைய பொழுது கடந்தாசே
நாளைய பொழுது கனவாச்சே
இன்றைய பொழுது நம் வசமாச்சே வசமாச்சே
நண்பர் கூட்டம் ஒன்றாக சேர்ந்தால் பொங்கும் சந்தோசம்
கோடி கோடி ஆசைகள் வந்து கதவை தட்டும்

மக்காயலா மக்காயலா ...
நட்புக்கு நேரங்கள் தெரியாதே
பேச்சுகள் தெடர்ந்தால் முடியாதே
இடைவெளி இங்கே கிடையாதே கிடையாதே
மனதுக்குள் எதையும் அடைக்காதே
வாய்ப்புக்கள் மறுபடி கிடைக்காதே
இருப்பது ஒரு லைப் மறக்காதே மறக்காதே
நண்பன் தோளில் சாய்ந்தாலே போதும் கவலைகள் தீரும்
இன்பம் துன்பம் நேர்கின்ற போதும் நட்பு தாங்கும்

மக்காயலா மக்காயலா...

Thursday, November 29, 2012

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே-ஆட்டோகிராப்


படம் : ஆட்டோகிராப்
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : சித்ரா
பாடலாசிரியர்:  பா.விஜய்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம்முயின்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்
லச்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோட போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா.
துக்கம் இல்லை என்ன தோழா
ஒரு முடிவிரிந்தால்.. அதில் தெளிவிரிந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

நீ மர்லின் மன்றோ குளோனிங்கா-அழகிய தமிழ் மகன்


படம் : அழகிய தமிழ் மகன்
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : பென்னி தயாள்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

நீ நீ நீ மர்லின் மன்றோ குளோனிங்கா
பூம் பூம் சக்க பூம் பூம் சக்க பூம் பூம் சக்க

ஹேய் பேபி என் ஆல்பம் நீ
ஹேய் பேபி உன் DJ நான்
ஒரு முறை இரு முறை பல முறை கேட்டிடும் சங்கீதம்
ஹேய் பேபி என் ஆல்பம் நீ
ஹேய் பேபி உன் DJ நான்
ஒரு முறை இரு முறை பல முறை கேட்டிடும் சங்கீதம்
நீ நீ நீ மர்லின் மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வர்றியா
நீ மர்லின் மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வர்றியா

ஹேய் ராக் இன் ரோலில் கில்லாடி
ராப் ஸாங் எவ்ரிடே முன்னோடி
சாட்டடே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா
ஹேய் சாட்டடே நைட் பார்ட்டி கே போகலாம் வர்றியா (ஹேய் பேபி...)

பூம் பூம் சக்க பூம் பூம் சக்க பூம் பூம் சக்க

ஹேய் சாட்டடே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா
ஹேய் சாட்டடே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா

கடல் கரை எனில் பீச் ஹவுஸ் இருக்கு
பல ஊரினில் ஃபார்ம் ஹவுஸ் இருக்கு
வா ஒன் டே கேர்ள்ப்ரண்ட் ஆக வர்றியா வர்றியா
குளிர் இரவினில் கேம்ப்பைப் போட்டு
சுடச் சுடவென காய்ச்சலே ஊட்டு
வானரங்கள் ஆடிடா போலாம் வர்றியா

உல்லாசமாய் உற்சாகமாய் ஒன்றாடிடும் போது
உன் வானத்தில் பல வானவில் தினம் தோன்றுமே
வா வா வா வா வா

பூம் பூம் சக்க பூம் பூம் சக்க (நீ மர்லின்...)

பெண்கள் ஒரு மிக்ஸி
ஓ......
வந்தால் ஆண் சட்னி
ஓ......

பெண்கள் ஒரு கிரிக்கெட்
ஓ......
ஆண்கள் தான் விக்கட்

செஸ் போர்ட் ல் குயூனுக்கு செக் வைக்க முடியாது
பெண்தானே பலி ஆகும்... ஓ..
மிஸ் வேர்ல்ட் போல் எங்கும் மிஸ்டர் வேர்ல்ட் கிடையாது
ஆண் ஜென்மம் வீணாகும்... ஓ..
நீ மர்லின் மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்ப்ரண்ட் ஆக வர்றியா

ஹேய் சாட்டடே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா

ஹேய் பேபி என் ஆல்பம் நீ
ஹேய் பேபி உன் விஜய் நான்
ஒரு முறை இரு முறை பல முறை கேட்டிடும் சங்கீதம்
ஹேய் பேபி என் ஆல்பம் நீ
ஹேய் பேபி உன் விஜய் நான்
ஒரு முறை இரு முறை பல முறை கேட்டிடும் சங்கீதம்

வளையப்பட்டி தவிலே தவிலே-அழகிய தமிழ் மகன்


படம் : அழகிய தமிழ் மகன்
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : நரேஷ்ஐயர்,மதுமிதா
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா

வளையப்பட்டி தவிலே தவிலே
ஜுகல்பந்தி வைக்கும் மவளே மவளே
அடி ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்னை மயக்குறியே மயக்குறியே

நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா
வளையப்பட்டி தவிலே

உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிரிப்போ சிந்துபைரவி
நீ பார்க்கும்போது பாக்யஸ்ரீ
நீ கொஞ்சும்போது நீலாம்பரி

நான் திருவையாறு கச்சேரி
நீ தாளம் போடு பித்தேறி
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி
வளையப்பட்டி தவிலே

நீ பார்க்கும்போதே பத்திக்குதே
சொந்த ஊரு சிவகாசியா
பேசும் போதே ஜில்லுங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சியா

நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முருக்கேறுதே
ஏண்டி நீயும் மணப்பாறையா

நீ கைகால் முளைச்ச மத்தளமா
உன்னை வாசிக்கப் பின்னால் சுத்தனுமா
நீ ஆர்மோனிய கட்டையமா
என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா

நான் வாலிபம் திருடும் வீணையடா
இங்கே வந்தா ஒளியும் பூணையடா
நான் வயதுக்கு வந்த வயலினடா
என்னை மைனரைப் போல வாசியடா
வளையப்பட்டி தவிலே

மதுரைக்கு போகாதடி-அழகிய தமிழ் மகன்


படம் : அழகிய தமிழ் மகன்
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : பென்னி தயால்
பாடலாசிரியர்: பா. விஜய்

கற்பூர கண்ணிகையே வாராய் அடி
அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ வங்காள மகாராணியே
வலது கால் எடுத்து வாராய் நீயே
நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வளமாக
சேர்ந்த இடம் சுகமாக
வாழ போற

மதுரைக்கு போகாதடி.......
அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்
தஞ்சாவூர் போகாதடி.......
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்
தூத்துக்குடி போனா
சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா
அங்க மேகம் உன்னை சுத்தும்

அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா

கற்பூர கண்ணிகையே வாராய் அடி
அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ வங்காள மகாராணியே
வலது கால் எடுத்து வாராய் நீயே

அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காத
அத்தான் மகன் வாரான்டி வெளுத்து போக.....
மதுரைக்கு போகாதடி...
அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்

சித்திரையினா.....
வெயில் அடிக்கும்

கார்த்திகையினா....
மழை அடிக்கும்

அடல் குடல் தடால் படால் ஆம்பிளைதான்
தங்கம்

ஆடியினா....
காத்தடிக்கும்

மார்கழினா.....
பனி அடிக்கும்

தமால் டாமல் கமால் கமால் ஆம்பிளைதான்
சிங்கம்
ஓ...ஓஒ....மருதாணி தோட்டத்துக்கே அட
மருதாணி யாரு வச்சா
ஓ தேரா தேரா இவ வாரா வாரா

ஓஒ..... காட்டு குயிலு கட்டிக்கத்தான்
தமிழ் நாட்டு புயலும் வந்திருச்சே
ஒ ஓஒ ஜோரா ஜோரா வரும் வீரா வீரா

நான் அக்கரையில் இருந்தாலும் இக்கரையில்
இருந்தாலும் சர்க்கரையாய் இருப்பாளே ஆசையிலே

மதுரைக்கு போகாதடி....
அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா

மருமக மருமக வந்தாச்சம்மா
இனி மாமியாரு பதவிதான் உனக்காச்சம்மா
தமிழ் நாட்டு மன்மதனே வாராய்
பெண் மயங்க பெண் மயங்க
நடந்து நடந்து வாராய்
நீ எங்கேயோ மகராசனே....
வெற்றி மாலைக்கென பிறந்தவனே.....
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக...
சொன்னதெல்லாம் நிஜமாக.....
கன்னி நிலா வந்திருச்சு
கனவு காண

ஓ ஓ ஓ கெட்டி மேளம் நாதஸ்வரம் அது
சேர்ந்து கேட்கும் நேரம் சுகம்
டும் டும் டும்
டும் டும் டுடும் டும் டும் டும் டும்

ஓ...மஞ்ச குங்குமகாரியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பிறப்பு

டும் டும் டும்
டும் டும் டுடும் டும் டும் டும் டும்

ஓ ஓ.... சந்திரனில் ஒரு பாதி
இந்திரனில் ஒரு பாதி சுந்தரனே என் ஜோடி ஆனதம்மா

ஆண்:
மதுரைக்கு போகாதடி....
அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்

மதுரைக்கு போக மாட்டேன்
என் மல்லிகைபூ உன் கையில

தஞ்சாவூர் போகாதடி....
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்

எங்கும் போக மாட்டேன்
உன் முன்னால தான் நிப்பேன்
முன்னால் வந்து நின்னு என் கண்ணால் சொக்க வைப்பேன்

ஆண்:
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா

அ ஹா அஹா

அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா

அ ஹா அஹா

அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
ஹே ஹேய் ஹே ஹேய்

பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்-அழகிய தமிழ் மகன்

படம் : அழகிய தமிழ் மகன்
இசை : A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்: ஆலங்குடி சோமு
பாடியவர்கள் : அஸ்லம்,பிளேஸி

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினால் அன்பிலே

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
யு ஆர் மை டைமண்ட் கேர்ள் மை
டைமண்ட் டைமண்ட் டைமண்ட் கேர்ள்
ஐ லவ் டு சி யு ஸ்மைலிங்க் கேர்ள் யோ
ஸ்மைலிங்க் ஸ்மைலிங்க் ஸ்மைலிங்க் கேர்ள்
யு ஆர் மை ஹனி கேர்ள் மை
ஹனி ஹனி ஹனி கேர்ள் மை
டைமண்ட் டைமண்ட் டைமண்ட் கேர்ள் யோ
ஸ்மைலிங்க் ஸ்மைலிங்க் ஸ்மைலிங்க் கேர்ள்

ஷா ஷா ஷா ஷா
எவ்ரிடைம் ஐ லுக் இண்டு யுர் ஐஸ் கெட் பட்டர்ஃப்லயீஸ்
ஐம் சோ க்லாட் ஷி வித் மீ ஆன் தி அதர் சயிட்
ஐ லயிக் டு சீ ஹர் இன் தி பிரயிட் அஸ் ஷி ஸ் மை ஒய்ஃப்

யே யே ஐம் லிவிங்க் அ ஹயி லஃப்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா
சொர்கத்தின் மனதை ரசிக்கும் திட்டத்தில் மயக்கும் மறக்கும்
யாத நீ வா
வல்லவோ என் வசம் வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம் விழியெல்லம் நவரசம்

பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினால் அன்பிலே

லெட் மீ ப்ரேக் இட் டவுன் ஐம் டேகிங் டு டாப்ஸ்பாட்
ஷி டசுன்ட் நோ ஒய் பட் ஐ ஹாவ் காட்ட ஸாஃப்ட்ஸ்பாட்
ஐ கோன்ன லவ் ஃபார் தி மணி அண்ட் தி ஃபோர்ஸ் ஹிம்
வெல் ஐ கோன லவ் ஃபோர் மை ஹனி
ஷி ஸ் சோ க்யூட் ஐ கான்ட் வைட் டு ஹிட் டவுன்
ஐம் கோன்ன த்ரோ அ பார்ட்டி யு இன்வைட் எவ்ரிஒன் அரவுண்ட்
டு சீ மை ஒய்ஃப் டு சீ தி லைஃப் தட் ஐம் கோன்ன லிவ்
திங்க் ஆஃப் தி வ்யூ ஆஃப் அ கிஸ் தட் ஷி ஸ் கோன்ன கிவ்

ஷி ஸ் சோ ஃபயின் இன் டைமண்ட்
நவ் எய்தர் ஹிட் தேர் க்லப் ஷி ஸ் கிரையிங்
ஷி ஸ் சோ ஃபயின் இன் டைமண்ட்
நவ் எய்தர் ஹிட் தேர் க்லப் ஷி ஸ் கிரையிங்
ஷி ஸ் மை ஒய்ஃப் கோன்ன கெட் ஹேர் மணி மணி மணி
விஷ் ஹேர் ஹனி ஹனி ஹனி
கோன்ன கெட் ஹர் மணி மணி மணி
ரீச் ஹேர் ஹனி ஹனி ஹனி ஷீஸ் மை லைஃப்


கேளாமல் கையிலே வந்தாயே காதலே-அழகிய தமிழ் மகன்

படம் : அழகிய தமிழ் மகன்
இசை : A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி ,சைந்தவி

கேளாமல்… கையிலே… வந்தாயே…. காதலே……..
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட

என்னை உன்னை எண்ணியோ
எழுதியது போலவே தோன்ற

என்னை உன்னை எண்ணியோ
எழுதியது போலவே தோன்ற

கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என் பெயரை கூவிடும்
உன் பெயரும் கோகிலம்

கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம்

கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என்றாலும் நீ என்னில்
உன் கையில் நான் அணில்

இனிமேல் இனிமேல் இந்த நானும் நான் இல்லை
போய் வா போய் வா என்றேன் எனக்கே விடை தந்தேன்

மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன்
நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்

கூந்தல் என்னும் ஏணியில் ஏறி
ஆசைகள் உண்டு

நெற்றி மூக்கு உதடு இன்றி
இறங்கி வர படிகளும் உண்டு

கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என் பெயரை கூவிடும்
உன் பெயரும் கோகிலம்

பாருக்கும்…..பார்வையில்லாமலே
போகும் நேரங்களே
பாருக்கும்…..பார்வையில்லாமலே
போகும் நேரங்களே
ஏதோ நடக்கின்றதே
புதுதிந்த பார்வையிலே
பாருக்கும்…..பார்வையில்லாமலே
போகும் நேரங்களே

கண்ணை கண்ணை சிமிட்டும்
நொடியில் உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்

பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
என் கண்ணின் சிறையில் உன்னை அடைப்பேன்
அதில் நீ நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு
கொஞ்சம் சீக்கிரம் வருமா

தூங்கும் தேவை ஏதும் இன்றி
கனவுகளும் கைகளில் விழுமா

கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என்றாமல் நீ என்னில்
உன் கையில் நான் அணில்

கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம்

கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம்



முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா-அழகிய தமிழ் மகன்


படம் : அழகிய தமிழ் மகன்
இசை :  A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : A.R.ரஹ்மான்

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
ஒ ..ஹே தோழா ..
முன்னால் வாடா ..
உன்னால் முடியும் ..
தளதலபதி தளபதி நீதான் நீதான் ..
அன்புத் தலைவா வெற்றி நமக்கே ..
அழகிய தமிழ் மகன் நீதானே நீதானே ..

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே..

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா..

நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே ..
நீ இன்றை இழக்காதே ..நீ இன்றை இழக்காதே ..
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும் ..
அதை நீ மறக்காதே ..
நீ அதை நீ மறக்காதே ..
நீ அதை நீ மறக்காதே ..
நேற்று நடந்த காயத்தை எண்ணி ..
ஞாயத்தை விடலாமா ?
ஞாயம் காயம் அவனே அறிவான் ..
அவனிடம் அதை நீ விட்டுச் செல் ..
ஹே ..தோழா முன்னால் வாட ..
உன்னால் முடியும் ..
தளதளபதி தளபதி நீதான் நீதான் ..
அன்புத் தலைவா வெற்றி நமக்கே ..
அழகிய தமிழ் மகன் நீதானே ..

ஏய் ...
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாட ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..

மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை ..
கடல் போல் , மலை போல், காற்றை போல் , பூமி போல் ..
நீ பெருமை செரட ..
பிறந்தோம் இருந்தோம் சென்றோம் ..
என்ற வாழ்வை தூக்கிப் போடடா ..
மாணவன் மனது வைத்தால்..

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் ..
ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் ..
தளதலபதி தளபதி நீதான் நீதான் . .
அன்புத் தலைவா வெற்றி நமக்கே ..
அழகிய தமிழ் மகன் நீதானே ..
மாணவன் மனது வைத்தால் ..

ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி-அயன்


படம் : அயன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்:
பாடியவர்கள் :

ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா

ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே

என் கையில் வளைந்த என் மீது மிதந்த
மாலையில் நடக்கின்ற நினைவு நீ

ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகிலே

ஒரு கையில் ஒரு கையில் நகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே

இதழ் பூவென்றால் அதில்
தேன் எங்கே இங்கு பூவேதான்
தேன் தேன் தேன் தேன் தேன்

ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே

இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டினேன்
உனைக் கண்டு உனைக் கண்டு இரசித்தேன்

முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே

சுடும் பூங்காற்றே சுட்டுப் போகாதே
இனி நானிங்கே மழைச் சாரல் பூவாய்

ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா

ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்-அயன்

படம் : அயன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : கார்த்திக்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தன்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே
செந்தேனே

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே
ஓ ஓ ஓ…

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தன்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே
செந்தேனே

ஆசை என்னும் தூண்டில் முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிகொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாய வலை அல்லவா புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் எனை பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தன்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே
செந்தேனே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே-அயன்

படம் : அயன்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, மஹதி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வைரமுத்து

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே ..
நானும் அங்கே.... என் வாழ்வும் அங்கே....
அன்பே அன்பே நான் இங்கே..
தேக‌ம் இங்கே.. என் ஜீவ‌ன் எங்கே....

என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்..
வான் ம‌ழையாக‌ என்னைத் தேடி ம‌ண்ணில் வந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில் ஏன் சேர்கிறாய்...?

ஹோ..நெஞ்சே நெஞ்சே நீ எங்கே..?
நானும் அங்கே.. என் வாழ்வும் அங்கே...

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் இம்மண்ணும் பொய்யாக‌க்க‌ண்டேனே..

அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொ‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்

உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சுப்ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்..

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே..?
நானும் அங்கே.. என் வாழ்வும் அங்கே..
அன்பே அன்பே நான் இங்கே..
தேக‌ம் இங்கே.. என் ஜீவ‌ன் எங்கே..?

க‌ள்வா ஏ க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே

காத‌ல் மெய்க்காத‌ல் அது பட்டுப் போகாதே
காற்று நம் பூமி தனை விட்டுப் போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌க்கூடாதே

ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த்தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும் ந‌ம் காத‌ல் மாறாதே..

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே..?
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே..

அன்பே அன்பே நான் இங்கே..
தேக‌ம் இங்கே.. என் ஜீவ‌ன் எங்கே..?

என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனைத்தேடி ம‌ண்ணில் வந்தாய்

உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் மழையை ஏன் வைகிறாய்...?

Wednesday, November 28, 2012

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்-கிரீடம்


திரைப்படம்: கிரீடம்
பாடகர்கள்: சாதனா சர்கம்
இசை:   G.V. பிரகாஷ்
பாடல் : நா.முத்துக்குமார்

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே நான் வாழ வேண்டும்

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலை கோதி
காதோரதில் எப்போதுமே உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமைப்பேன்
கையோடுதான் கை கோர்த்து நான் உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்

வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நெஞ்சும் தினம் விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே நான் பிறந்ததில் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
உன் தீண்டழில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொண்டேன்

வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

கண்ணீர் துளியே துளியே-கிரீடம்


திரைப்படம்: கிரீடம்
பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசை:   G.V. பிரகாஷ்
பாடல் : நா.முத்துக்குமார்

கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைதிடும் கைகள் இங்கே

கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

கண்கள் என்று இருந்து விட்டால்
அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை

கடவுளுக்கும் கவலை உண்டு
எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை

இந்த பாசம் அது
ரொம்ப பொல்லாதது
அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை
(கண்ணீர் துளியே துளியே)

மனதில் ஆயிரம் ஆசைகள் கடுக்குமே
நினைதது வழியில் இடி வந்து கெடுக்குமே

நதியினில் விழுந்த இலைகளுக்கு
போகும் திசைகள் புரிவதிலை

கரையில் இருக்கும் ஓடத்துக்கு
கடலின் கவலைகள் தெரிவதில்லை

யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குட்ற்றம் இது தானோ
(கண்ணீர் துளியே துளியே)

யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது
பரவைகள் கூடிலே இலையை முரித்தது

கனவில் பூக்கும் பூகளினை
கைகளில் பரித்திட முடிவதில்லை

காதலை மரக்க உலகதிலே
மருந்துகள் எதுவும் கிடைபதில்லை

யாரிடமும் குட்ற்றமில்லை
காலம் செய்த குட்ற்றம் இது தானோ
(கண்ணீர் துளியே துளியே)

கனவெல்லாம் பலிக்குதே-கிரீடம்


திரைப்படம்:கிரீடம்
பாடகர்கள்: கார்த்திக், P. ஜெயச்சந்திரன்
இசை: G.V. பிரகாஷ்
பாடல்: நா.முத்துக்குமார்

கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

வாழிகைகு அர்த்தங்கள் கிடைகிரதே
வானவில் நிமிடங்கள் அழைகிரதே
எனுடைய பிள்ளை எனை ஜெயிகிரதே
எனை விட உயரத்தில் பரந்து சிகரம் தொட

என் வானதில் ஒரு நக்ஷதிரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே
(கனவெல்லாம்)

நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே

நாளை உந்தன் பேரை சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே

என் தோளை தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீ அல்லவ

என் வேள்வி யாவும் வென்றதனால்
என் பாதி நீ அல்லவ

சந்தோஷ தேரில் தாவி யோஸ்
மனம் இன்று மிதந்திட
என் வானதில் ஒரு நக்ஷதிரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே
(கனவெல்லாம்)

கிளி கூட்டில் பொத்திவைத்து
புலி வளர்தேன் இதுவரையில்

உலகத்தை நீ வென்றுவிடு
உயிர் இருக்கும் அது வரையில்

என்னாளும் காவல் காபவன் நான்
என் காவல் நீ அல்லவ

எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீ அல்லவ

என் ஆதி அந்தம் யாவும்
இன்று ஆனந்த கண்ணீரில்
என் வானதில் ஒரு நக்ஷதிரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே
(கனவெல்லாம்)

வானில் காயுதே வெண்ணிலா-வாலி


திரைப்படம்: வாலி
பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம், மனோ
இசை:   தேவா
பாடல் :

உன் பேர் வாசித்தேன்
உன்னை நேசித்திருப்பதே
அதை வாசித்திருப்பதே
என் மேனி சிலிர்த்ததே
என்னிடம் பேசி போனது
சில நூரு பெண்ணடி
என்னிடம் பேச மறுத்தவள்
நீ ஒருத்தி தானடி

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே..ஓஹ்ஹ்ஹ்!..ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
ஆ..ஆ..ஆ..ஆ..

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்

ஆ...ஆ...ஆ....ஆ..ஆ...
நதியின் போக்கிலே நாணல் தலை சாயவே

அள்ளிச் சென்ற நிலவு என் அழகு நீ குலவு..ஆ..ஹா..ஹா
கண்ணை கொத்தும் அழகு என் அழகு பெண் அழகு நீ வா வா..
மின்சார பெண்ணே ஆராக ஆனேன்
மின்சாரம் பாய்ந்து வீணாகி போனேன்
யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன்
யாரென்று என்னை நஸ் கேட்க வில்லை
மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை
ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை
ஆஹ-ஆஹ-ஆஹ-ஆஅ
அன்று வண்ண மின்னலாய் உன் கண்ணில் தோன்றினேன்
நான் போகும் போக்கிலே ஒரு பூவை நீட்டினேன்
நீ பூவை நீட்டியே என்னை சாம்பலாக்கினாய்
நீ தீயை நீட்டினால் நான் என்ன ஆகுவேன்
ஓஊ. ஓஊ.. ஓஊ ..ஓஊ.

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
ஆ..ஆ..ஆ..ஆ..

நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை-வாலி


படம் : வாலி
இசை : தேவா
பாடலாசிரியர்:
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன்,அனுராதாஸ்ரீராம்

நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு….
இன்று முதல் இரவு…… நீ என் இளமைக்கு உணவு.. (2)
மெல்லவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா

வரவா வந்து தொடவா உன் ஆடைக்கு விடுதலை தரவா
அவசரம் கூடாது அனுமதி பெறும் வரையில்
பொதுவா நீ பெண்ணா நீ சொன்ன படி கேட்கும் மாது..
இது போன்ற விசயத்தில் உன் பேச்சி உதவாது
மெல்ல இடையினை தொடுவாயா
மெல்ல உடையினை களைவாயா
நான் வெடிக்கையில் துடிக்கையில் முத்தங்கள் தருவாயா
போதுமா …. அது போதுமா..
ஆசை தீருமா… அம்மா ஆ.

மாமா என் மாமா இந்த நிலவை ஊதி அணைப்போமா
காணாத உன் கோலம் கண்கொண்டு காண்கின்றதே
இதழால் உன் இதழால் என் வெட்கம் துடைத்துவிடுவாயா
அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாயா
தேன் எங்கெங்கு உண்டு என்று பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதய்யா…
இன்பமா……. பேரின்பமா…..
அது வேண்டுமா ….. அம்மா..ஆ

நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு….
இன்று முதல் இரவு…… நீ என் இளமைக்கு உணவு..
மெல்லவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா

ஓ சோனா ஓ சோனா-வாலி


படம் : வாலி
இசை : தேவா
பாடலாசிரியர்: பி.கே.மிஷ்ரா
பாடியவர்கள் : ஃபேபி மணி, ஹரிஹரன்

ஓ சோனா ஓ சோனா
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,
ஓ சோனா, ஓ சோனா,
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,

வாசல்வந்த வென்னிலவு அல்லவா,
அவள் வயதுக்கு வந்த தங்கம் அல்லவா?
அடி தந்து ரெதம் பொட்டு அல்லவா?
அவளினை காதல் செய்த கதையினை சொல்லவா,

ஓ சோனா, ஓ சோனா,
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,

ஓ சோனா, ஓ சோனா,
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,

ஒரு மாலை நேரத்தில்,
மழை கொட்டும் மாதத்தில்,
அவள் நனைகையில் என் ஜீவன் கரைய கண்டேன்,
அவள் பெண்மை வளைத்து,
அதை நாலாய் மடித்து,
என் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துகொண்டேன்,
மழை நின்று பெண் எழவேஇல்லை,
என்ன செய்தோம் அது நினைவே இல்லை,
என்ன வியப்பு?
மாலை போல் என்னை அள்ளி தழுவிகொண்டால்,
மார்போடு ஏதோ பட்டு நழுவிகொண்டால்…

ஐ லவ் யூ சோனா, சோனா,
சோனா

ஓ சோனா, ஓ சோனா,
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,

போ போ போ நீ எங்க வேணாம் போ- மனம் கொத்தி பறவை

படம் :  மனம் கொத்தி பறவை
இசை : இமான்
பாடியவர் : விஜய்பிரகாஷ்,சின்மயி
வரிகள் : யுகபாரதி

போ போ போ நீ எங்க வேணாம் போ..
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ..
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ..
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ..
போ போ போ நீ எங்கு வேணாம் போ..
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே...

போ.. போ.. போ.. நீ எங்கு வேணாம் போ..
போ.. போ.. போ.. நீ ஒண்ணும் வேணாம் போ..

தங்கமே என்னிடம் என்ன குற‌ கூறு..
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு...
ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம்..
மாறிடாமலே நடுவயதில் ஊரைக்கோடினோம்..
ஒரு நாள்கூட நீங்காமல் கேலி பேசினோம்..
நமை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம்..
செல்வமே.....

போ.. போ.. போ.. நீ கூடு விட்டுப் போ..
போ.. போ.. போ.. நீ கூறும் கெட்டுப் போ..

கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம்..
சொல்லடி பட்டு நான் நிப்பதென்ன நியாயம்..
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்..
கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன்..
உனை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி..
எனை ஏற்கமால் போனலே போடி உன் விதி..
உன் விதி.....

எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ..
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ..
போ போ போ நீ தாலி கட்டிப் போ..
போ போ போ நா வாழாவெட்டி போ..
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே..
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீ தானே..
பச்சைக்கிளி நீயே.. விட்டுப்பறந்தாயே..
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே..
போ.. போ.. போ..


என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க- மனம் கொத்தி பறவை


படம் : மனம் கொத்தி பறவை
இசை : இமான்
பாடியவர் : விஜய்பிரகாஷ்,சின்மயி
வரிகள் : யுகபாரதி

என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே
பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழ தூறுதே

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே

இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே
வந்தாயே என்னோடு எதனாலே சொல்
முன்ஜென்மமே செய்த முடிவே பதில்
சொல்லும் முன்பு தரிசா கெடன்தேனே
சொன்ன பின்பு வெளஞ்சேனே
கம்பஞ்சுக்கு கரும்பா இனிச்சேனே
கப்பி கல்லு மலர்ந்தேனே
எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி
உன்ன நாய் போல சுத்துது என் முக்தி

என்ன சொல்ல...

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே

இச்சு இச்சு கன்ணதுல கிச்சு கிச்சு நெஞ்சுக்குள்ள
ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கிள்ளுதே
சொன்னாலும் கேக்காம அடம் பண்ணுதே
உண்ண பத்தி எனக்கு தெரியாதா
சொக்க வெச்சு என ஏப்ப
தன்ணீக்குள்ள மெதக்கும் படகானேன்
எப்ப புள்ள கர சேப்ப

உண்ண கண்னாலம் செய்யும்போது கட்டிக்கிட்டு
புள்ள பெப்பேனே போகாத விட்டு

என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே
பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழ தூறுதே

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே.


ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல-மனம் கொத்தி பறவை


படம் : மனம் கொத்தி பறவை
இசை : இமான்
பாடியவர் : சந்தோஷ் ஹரிஹரன்
வரிகள் : யுகபாரதி

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
a
காணாம காண வைச்ச கண்ணுக்குள்ள தீய வைச்ச
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல

பேசாம பேச வச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
பேசாம பேச வச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல

கூவாம கூவ வச்ச கொண்டயில பூவ வச்ச
ஆனா நீ என்ன மட்டும் கூடவே இல்ல
அய்யோ தொலஞ்சு போன ஆள நீயும் தேடவே இல்ல
அய்யோ தொலஞ்சு போன ஆள நீயும் தேடவே இல்ல
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச
ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல
கள்ளி காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல
கள்ளி காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல

தானாக உன்ன வந்து சேரவா புள்ள
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல

கொஞ்சம் நோகாம கண்ண மூடி தூங்கு மாப்புள்ள

Friday, November 23, 2012

லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா-போடா போடி


படம்: போடா போடி
இசை: தரண்
பாடியோர்: நரேஷ்ஐயர்,சுசித்ரா,பென்னிதயாள்
வரிகள்: விக்னேஷ் ஷிவன்

நான் கரேக்டானவன் ரொம்ப நல்லவன்
கொன்பியூசன் இல்லாதவன் மன்மதன் வல்லவன்
பதினொட்டு வயசு வரைக்கும்
நல்லா படிச்சு படிப்ப லவ் பண்ணிடன்
இருபத்திஒரு வயசு வரைக்கும் ஒழுங்க
வேளைக்கு போய் வேளைய வல் பண்ணிடன்
இப்போ ஒரு பொண்ண வல் பண்ணலாம்னு தோனுதங்க மனசு
ஏங்குதுங்க ஏங்குதுங்க ஏங்குதுங்க
இவலோ நாள் ஜோலியா இருந்தேன் நா
ஒரு பொண்ணால் காலி ஆகிட்டேன் நா...

அய்யோ அய்யோ
சோ கொன்பியூசன் தலையேல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க
அட்வைஸ் சொல்லுங்க அட்வைஸ் கொஞ்சம் அட்மைஸ் சொல்லுங்க
சோ லவ் பண்ணலாமா வேணாமா...
சொல்லுங்க லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா...

லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா... லவ்
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா...
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா... லவ்

லவ் ஸ்டாட் ஆகிடுச்சுனு வைங்க
நல்லா இருந்த முடிய வெட்டுவோம்
அவ போட்டோ நெஞ்சில் ஒட்டுவோம்

வோடா போன் டோக் மாதிரி நம்ம போலோ பண்ணுவோம்
ஆனா அவ நம்மல ஒரு ஸ்டீரிட் டோக் மாரி பாப்பா
பீல பண்ணாம நம்ம பின்னாடியே போவோம்
நம்ம மானம் சார் ஓட்டோல நம்மல க்ரோஸ் பண்ணி போகும்
பிரண்ட்ஸ் ஐடி'ய குடுப்பானுங்க நல்ல போறத கெடுப்பாங்க...
நல்ல உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலம் ஆக்குவாங்க
தைய்ரியமா நம்பிக்கயா ஐ லவ் யு னு சொல்ல தோனும்
சொல்லலாமா வேண்டாமா

லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா... லவ்
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா...
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா... லவ்

என்ன பண்ணலாமா வேறி குட் மா


ரோமியோவா நீ இருந்தா ஜூலியட்டா நான் இருப்பேன்-போடா போடி


படம்: போடா போடி
இசை: தரண்
பாடியோர்: நரேஷ்ஐயர்,சுசித்ரா,பென்னிதயாள்  
வரிகள்: விக்னேஷ் ஷிவன்

ரோமியோவா நீ இருந்தா, ஜூலியட்டா நான் இருப்பேன்
மஜுனு போல் நீ இருந்தா, லைலாவா நான் இருப்பேன்

நீ ஆப்கானிஸ்தான்னா அமெரிக்கா நான் தான்
வில்லன் ஆனா சுப்பர் ஸ்டார் ஆனா

அழகான நான் தான் அங்க்ரி பேர்ட் ஆனா
உன்னை தான் தெரத்தி
உன் முகத்தை பிடிச்சு டிசுல மடிச்சு
தூக்கி போடுவேன் தூக்கி போடுவேன்

அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
(அய்யய்யோ...)

அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே

குழு: செல்லமாக நீ என்னை சீண்டும் போது
தொல்லையாக எனக்கு அது feel ஆகுது
தீதும் நன்றும் பிறர தர வாராது

யாருக்கும் புரியாத சப்டர் இது

தி சிஸ் னொட் த லைப் ஐ வோன்ட்
தி சிஸ் னொட் மை ட்ரிம்
ஐ னெவர் தோட் ஐ வுட் பீல் திஸ் வே
லவ் இஸ் நொட் வட் இட் சீம்ஸ்

லைலாவா நீ இருந்தா, மஜுனுவா நான் இருப்பேன்
சாஜஹானா நான் இருப்பேன், மும்தாஜா நீ இருந்தா

நீ ஓவர்ரா போனா, நான் இனிங்சா போவேன்
நீ வில்லனா போனா, சுபர் ஸ்டார் ஆவேன்

என்னோடு நாளிள், உன்னோட ராஜா
எப்போதும் நான் தான
டான்ஸ் ஆடும் பேயே, என் சேவன்ட் நீயே
சிக்கிட்டியே ஒட்டிகிட்டியே

அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
(அய்யய்யோ...)

மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே
மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே


நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கே-கடல்


படம்: கடல்
இசை: A. R.ரஹ்மான்
பாடியோர்:
வரிகள்: வைரமுத்து

நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான்
அப்பறமாக் குனியலையே! குனியலையே!
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்-இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

பச்சி ஒறங்கிருச்சு
பால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு

காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரை நிமிசம் தூங்கலையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?

ஒரு வாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே!

ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?


ரத்த கண்ணீர் முடியவில்லை-நீர்ப்பறவை


படம்: நீர்ப்பறவை
இசை: N. R.ரகுநந்தன்
பாடியோர்: ஹரிஸ் ராகவேந்திரா
வரிகள்: வைரமுத்து

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை
ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

காயம் செய்த ஊருக்கு
என் நியாயம் மட்டும் தெரியவில்லை
அறிந்த நான் செய்த பிழை
ஆண்டவர் தான் பொறுப்பாரே
அறியாமல் செய்த பிழை
அன்பே நீ பொறுப்பாயா
மன்னித்தே என்னை கொள்ள மாட்டய

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஏன் இந்த கதி ஏன் இந்த விதி
நொந்தேன் உயிர் நொந்தேன்
நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வேந்தன்
என் பாவங்களில் நான் வெட்கமுற வில்லை அடி இல்லை
என் பாவங்களில் நீ பங்கு பெற நியாயம் இல்லை
பாதை தான் காணாமல் பட்டம் தான் விடுகின்றேன்
போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன்
பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஊர் பேசியதே யார் ஏசியதையும் நெஞ்சை சுட வில்லை
நீ துன்பமுற நான் கண்டுவர ஜீவன் இல்லை
என் தண்டனையில் நீ வாடுவது குற்றம் என் குற்றம்
என் பாவநிலை ஏழு ஜென்மம் வரை சுற்றும் சுற்றும்
போதைக்குள் பிறந்தாலும் என் காதல் பொய் இல்லை
சேற்றோடு பிறந்தாலும் தாமரையில் அழுக்கில்லை
வா பெண்ணே உன்னை விட்டால் வாழ்வில்லை

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

காயம் செய்த ஊருக்கு என் நியாயம் மட்டும் தெரியவில்லை
அறிந்த நான் செய்த பிழை ஆண்டவர் தான் பொறுப்பாரே
அறியாமல் செய்த பிழை அன்பே நீ பொறுப்பாயா
மன்னித்தே என்னை கொள்ள மாட்டயா


தேவன் மகளே தேவன் மகளே-நீர்ப்பறவை


படம்: நீர்ப்பறவை
இசை: N. R.ரகுநந்தன்
பாடியோர்: V. V.பிரசன்னா,சைந்தவி
வரிகள்: வைரமுத்து

தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி...
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி


என்றோ அடி என்றோ
உன் உயிரில் உரிமை தந்தாய் இன்றே
அடி இன்றே உடல் உரிமை தந்தாய்
நுனியில் விரல் நுனியில் ஒரு நுதன தீண்டல் செய்தாய்
அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய்
உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டே
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்

தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

கண்ணீர் என் கண்ணீர்
என் கன்னம் காயும் முன்னே
பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன்
கோடியில் ஒரு கோடியில்
இரு இளநீர் காய்க்கும் பெண்ணே
மடியில் உன் மடியில்
சிறு மரணம் கொண்டேன்
என் கர்தரங்கள் படைத்த
வேற்ற பாண்டம் நான்
அதில் உன்னை ஊற்றி
என்னை நிறத்தாய்
தேவன் மகளே நன்றி நன்றி

என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

பற பற பற பறவை ஒன்று-நீர்ப்பறவை


படம்: நீர்ப்பறவை
இசை: N. R.ரகுநந்தன்
பாடியோர்: ஷ்ரேயாகோஷல்,G. V.பிரகாஷ்
வரிகள்: வைரமுத்து

பற பற பற பறவை ஒன்று
கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே!

கட கட கட கடலுக்குள்ளே
பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே!

என் தேவன் போன திசையிலே
ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
என் ஜீவன் வந்து சேருமா
தேகம் மீண்டும் வாழுமா
இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
அலை மறுபடி உன்னிடம் வருமா

பற பற பற பறவை ஒன்று
கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே!

கட கட கட கடலுக்குள்ளே
பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே!

தண்ணீரில் வலையும் நிற்கும்
தண்ணீரா வலையில் நிற்கும்
எந்தேவன் எப்போதும் திரிகிறான்
காற்றுக்கு தமிழும் தெரியும்
கண்ணாளன் திசையும் தெரியும்
கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிறான்
உனது வேர்வை என் மார்புக்குள்
பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே
ஈர வேர்வைகள் தீரவும்
எனது உயிர்பசி காய்வதா
வானும் மண்ணும் கூடும் போது
நானும் நீயும் கூடாமல் வாழ்வது கொடுமை

பற பற பற பறவை ஒன்று
கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே!

கட கட கட கடலுக்குள்ளே
பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே!

ஊரெங்கும் மழையும் இல்லை
வேரெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே
கண்ணாளன் நிலைமை என்ன
கடலோடு பார்த்து சொல்ல
கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே
நீரின் மகன் எந்தன் காதலன்
நீரின் கருணையில் வாழுவான்
இன்று நாளைக்குள் மீளுவான்
எனது பெண்மையை ஆளுவான்
என்னை மீண்டும் தீண்டும் போது
காதல் தேவன் இருமுறை முதலிரவுகள் பெறுவான்

பற பற பற பறவை ஒன்று
கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே!

கட கட கட கடலுக்குள்ளே
பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே!

என் தேவன் போன திசையிலே
ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
என் ஜீவன் வந்து சேருமா
தெய்வம் மீண்டும் வாழுமா
இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
அலை மறுபடி உன்னிடம் வருமா

பற பற பற பறவை ஒன்று
கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே!

கட கட கட கடலுக்குள்ளே
பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே!