Friday, November 30, 2012
நான் சொன்னதும் மழை வந்துச்சா-மயக்கம் என்ன
படம்: மயக்கம் என்ன
சை: G.V பிரகாஷ்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,சைந்தவி
வரிகள்: செல்வராகவன்
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன தூக்கி போக தான் வருவேனுன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா
கரு நாக்கு கார புள்ள
கருப்பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி
ஓஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
ஆடு ... ஆடு ...
ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா
அடி போடி போடி போடி முட்ட கன்னி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ணை மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவுல தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்
நீ வர்றியாடி
கருவாட்டு கொழம்பா ஆ ஆ... நீயும்... ருசி ஏத்துற
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment