Friday, November 30, 2012
மக்காயலா மக்காயலா-நான்
படம் : நான்
இசை : விஜய் ஆண்டனி
பாடியவர்கள் : கிருஷ்ணன் மகேஷ்சன், மார்க் தாமஸ், சக்திஸ்ரீ
வரிகள் : ப்ரியன்
மக்காயலா மக்காயலா
இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை
இல்லை இல்லை இல்லை
தனிமையிலே கூச்சம் இல்லை
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை
காற்றுக்கென்றும் பாரம் இல்லை
எல்லைகள் மீது தப்பில்லை
மக்காயலா மக்காயலா ...
இரவினில் தூக்கம் கிடையாதே
பகல் வரை ஆட்டம் முடியாதே
கலர் கலர் கனவுகள் குறையாதே குறையாதே
நேற்றைய பொழுது கடந்தாசே
நாளைய பொழுது கனவாச்சே
இன்றைய பொழுது நம் வசமாச்சே வசமாச்சே
நண்பர் கூட்டம் ஒன்றாக சேர்ந்தால் பொங்கும் சந்தோசம்
கோடி கோடி ஆசைகள் வந்து கதவை தட்டும்
மக்காயலா மக்காயலா ...
நட்புக்கு நேரங்கள் தெரியாதே
பேச்சுகள் தெடர்ந்தால் முடியாதே
இடைவெளி இங்கே கிடையாதே கிடையாதே
மனதுக்குள் எதையும் அடைக்காதே
வாய்ப்புக்கள் மறுபடி கிடைக்காதே
இருப்பது ஒரு லைப் மறக்காதே மறக்காதே
நண்பன் தோளில் சாய்ந்தாலே போதும் கவலைகள் தீரும்
இன்பம் துன்பம் நேர்கின்ற போதும் நட்பு தாங்கும்
மக்காயலா மக்காயலா...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment