Friday, November 30, 2012

என் வெண்ணிலவே எரிக்காதே-ஆடுகளம்


திரைப்படம் : ஆடுகளம்
பாடியவர் : கே கே
இசை: G.V. பிரகாஷ்
வரிகள் : V. I. S. ஜெயபாலன்

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே

பனியில் இலையற்ற தனிமரம் நான்
பாலையில் துடித்திடும் சிறுப்புழு நான்
காதல் தேவதைப் போல் வந்து
களப்பலிக்கேட்பதேன் மோகினியே
நீ ஏன் எரித்தாய் மீனாட்சி
உன் நிழலில் வாழும் மதுரையடி!
மழையாய் தர வா நீ
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

கள்ளிப் பாலை ஊற்றிவிட்டு
வெள்ளி நிலவாய்ப் போனவளே
என்னில் வளர்த்த பொற்சிறகை
ஒடிந்திட நடந்திடும் கொடும் புயலே
அழகரைத் தொட்டதால் வைகை நதி
அலை கடல் சேரா மதுரையடி
என் விடிவா முடிவா நீ!
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏதோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

No comments:

Post a Comment