Friday, November 23, 2012

மீனுக்கு சிறு மீனுக்கு-நீர்ப்பறவை


படம்: நீர்ப்பறவை
இசை : N. R.ரகுநந்தன்
பாடியோர்: விஜய்பிரகாஷ்,ஹரிணி
வரிகள்: வைரமுத்து

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்
கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனம் இல்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா

அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

பெண் கடல்களில் அலைகள் இல்லை
அது போல் மெளனம் காக்கிறாய்
ஆண் கடல்களில் அலைகள் உண்டு
அது போல் உன்னை தீண்டினேன்

அலை என்னும் கரம் நீட்டி நீட்டி
அடி வருடியே போகிறாய்
வெட்கம் வந்து விழி மூடும் நேரம்
முத்தம் கொள்ளையிட பார்க்கிறாய்

அன்பை தந்து அன்பை தந்து
ஆளாக்கினாய் அப்போது
அள்ளிதந்து அள்ளிதந்து
ஆணாக்குதல் எப்போது

அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

விழி நீயும் சொல்லி வாழும் பெண்ணால்
வெட்கம் என்னை விட்டு போகுமா
அக்கம் பக்கம் இங்கு ஆட்கள் உண்டு
அஞ்சுகின்ற மனம் கொஞ்சுமா

கடற்கரைகளில் சோலை இல்லை
பறவைக்கு என்ன பஞ்சமா
தனிமைக்கு இங்கு வாய்ப்பு இல்லை
தவிக்கின்ற மனம் அஞ்சுமா

ஒ... பெண்கள் மட்டும் ஆணையிட்டால்
பேசும் கடல் பேசாது
ஆண்கள் கொண்ட ஆசை மட்டும்
ஆணையிட்டால் நிற்காது

அடடா என்னை தவிர்க்கிற வழி
இதுதான் குறுக்குவழி
எதுதான் உன்னை பிடிக்கிற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தாய்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தாய்

கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனம் வரவில்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா

அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

No comments:

Post a Comment