Thursday, November 29, 2012
மதுரைக்கு போகாதடி-அழகிய தமிழ் மகன்
படம் : அழகிய தமிழ் மகன்
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : பென்னி தயால்
பாடலாசிரியர்: பா. விஜய்
கற்பூர கண்ணிகையே வாராய் அடி
அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ வங்காள மகாராணியே
வலது கால் எடுத்து வாராய் நீயே
நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வளமாக
சேர்ந்த இடம் சுகமாக
வாழ போற
மதுரைக்கு போகாதடி.......
அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்
தஞ்சாவூர் போகாதடி.......
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்
தூத்துக்குடி போனா
சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா
அங்க மேகம் உன்னை சுத்தும்
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
கற்பூர கண்ணிகையே வாராய் அடி
அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ வங்காள மகாராணியே
வலது கால் எடுத்து வாராய் நீயே
அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காத
அத்தான் மகன் வாரான்டி வெளுத்து போக.....
மதுரைக்கு போகாதடி...
அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்
சித்திரையினா.....
வெயில் அடிக்கும்
கார்த்திகையினா....
மழை அடிக்கும்
அடல் குடல் தடால் படால் ஆம்பிளைதான்
தங்கம்
ஆடியினா....
காத்தடிக்கும்
மார்கழினா.....
பனி அடிக்கும்
தமால் டாமல் கமால் கமால் ஆம்பிளைதான்
சிங்கம்
ஓ...ஓஒ....மருதாணி தோட்டத்துக்கே அட
மருதாணி யாரு வச்சா
ஓ தேரா தேரா இவ வாரா வாரா
ஓஒ..... காட்டு குயிலு கட்டிக்கத்தான்
தமிழ் நாட்டு புயலும் வந்திருச்சே
ஒ ஓஒ ஜோரா ஜோரா வரும் வீரா வீரா
நான் அக்கரையில் இருந்தாலும் இக்கரையில்
இருந்தாலும் சர்க்கரையாய் இருப்பாளே ஆசையிலே
மதுரைக்கு போகாதடி....
அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
மருமக மருமக வந்தாச்சம்மா
இனி மாமியாரு பதவிதான் உனக்காச்சம்மா
தமிழ் நாட்டு மன்மதனே வாராய்
பெண் மயங்க பெண் மயங்க
நடந்து நடந்து வாராய்
நீ எங்கேயோ மகராசனே....
வெற்றி மாலைக்கென பிறந்தவனே.....
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக...
சொன்னதெல்லாம் நிஜமாக.....
கன்னி நிலா வந்திருச்சு
கனவு காண
ஓ ஓ ஓ கெட்டி மேளம் நாதஸ்வரம் அது
சேர்ந்து கேட்கும் நேரம் சுகம்
டும் டும் டும்
டும் டும் டுடும் டும் டும் டும் டும்
ஓ...மஞ்ச குங்குமகாரியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பிறப்பு
டும் டும் டும்
டும் டும் டுடும் டும் டும் டும் டும்
ஓ ஓ.... சந்திரனில் ஒரு பாதி
இந்திரனில் ஒரு பாதி சுந்தரனே என் ஜோடி ஆனதம்மா
ஆண்:
மதுரைக்கு போகாதடி....
அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்
மதுரைக்கு போக மாட்டேன்
என் மல்லிகைபூ உன் கையில
தஞ்சாவூர் போகாதடி....
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்
எங்கும் போக மாட்டேன்
உன் முன்னால தான் நிப்பேன்
முன்னால் வந்து நின்னு என் கண்ணால் சொக்க வைப்பேன்
ஆண்:
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அ ஹா அஹா
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அ ஹா அஹா
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
ஹே ஹேய் ஹே ஹேய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment