Sunday, December 23, 2012

வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட-சமர்


படம்: சமர்
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: உதித் நாராயணன்,ஸ்வேதா மோகன்
பாடல்: நா.முத்துக்குமார்

வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தைலே
சொல்லி சொல்லி நான் பாட

ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு

ஆசை நினைவடி இது ஆறாம் பிறையடி
உனை கண்டேன் ஒரு நோடி
அது காதல் முதற் படி

மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனி துளி
இரு இதயம் சேரவே இனி இல்லை இடைவெளி
(வெள்ளை)

ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு

பூங்காவனம் தூங்காது வானம்
ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும்

ராக்கோழியாய் கூவுது முச்சு
கை ரேகை நூலில் மீது சேலை முந்தானையாச்சு

ஆ: சடை நிலா உன்னை நெஞ்சிலே
விதை என மூடி வைக்கவா
மதம் பிடித்தாடும் யானையாய்
மனக்குள்ளும் வெண்நீரான
பின்பு கூட பூ பூக்குதே

மூன்றாம் பிறை முன்நூறு மேகம்
சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும்

ஆனவரை ஆனந்த மோகம்
அன்னார்ந்து பார்த்தால் எந்தன் காதல் ஆகாயம் ஆகும்

மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி ஈரமாகுமா சுவை சுவை என்று கூறினேன்
முதல் முதல் முத்தம் என்னும் பூவை கிள்ளி முத்தாடவா...
மீசை புல்லின்

ராஜாவின் தோட்டத்தில் ரோஜா செடி-சமர்


படம்: சமர்
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: ரஞ்சித்,ரீடா
பாடல்: நா.முத்துக்குமார்

ராஜாவின் தோட்டத்தில் ரோஜா செடி
ரோஜாவை ராஜா நீ கட்டிப்புடி
நீ ஆடும் ஆட்டத்தை விட்டுப்புடி
நான் ஆடும் ஆட்டத்தில் முத்துக்குளி

எத்தனை ஆட்டம் உன்டோ ஹேய் ஹேய் நீ ஆடடா
அத்தனை ஆட்டம் எல்லாம் ஹேய் பொய் தானடா
சித்தர்கள் சொன்னதெல்லாம் ஹேய் ஹேய் மெய் தானடா
மெய்யிலே மெய்யை வைத்து வா கை வெய்யடா

ரெண்டு காலு ஹோஸ்சு நீ வச்சு பாரு ரேசு
என்ன வேணும் கேட்டு நீ சுண்டி போடு டோசு
எந்த பக்கம் இன்பம் நீ பெட்டு கட்டி பாரு
அந்த பக்கம் தொட்டு நீ தொட்டு தொட்டு
வெற்றி கொடி கட்டு

பை பையாய் உன் வீட்டு பணம் கொட்டுமே
தங்கதில் பூ பூக்கும் உன் தோட்டமே
கைத்தட்டி நீ சொன்னால் கை கட்டுமே
விண்மீன்கள் நீ தொட்டால் கைக்கெட்டுமே

சுத்துது சுத்துது பூமி ஹேய் உன்னை கேட்டுத்தான்
சூரியன் வருவது எல்லாம் ஹா உன்னை பார்க்கத்தான்
சொக்குது கொக்குது நெஞ்சம் ஹேய் ஹேய் நீ பாரக்கத்தான்
சிக்குது சிக்குது கண்கள் ஹேய் நான் பார்க்கத்தான்

காலும் முள்ளும் கூடு உன் பேச்சை கேட்டு வாழும்
ஆனா இங்க வந்தா என் பேச்சு கேட்க வேணும்
சந்தோசத்துக்காக நீ மண்ணில் வந்த ஆளு
என்னை கொஞ்சம் தொட்டு நீ கட்டு கட்டு முத்த படி காட்டு

பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா-சமர்


படம்: சமர்
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: யுவன்சங்கர்ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்


பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா
போகும் வழியோ தூரமடா
இருளும் ஒளியும் இடையினிலே
சடுகுடு நடத்திடும் நேரமடா

காலையில் கண் விழித்தால்
இன்று என்ன வரும் யாருக்கும் தெரிவதில்லை
சாலையில் கண் மோதினால்
நாம் மறுபடி நடந்திட மறுப்பதில்லை

கொடுத்த இடங்களை நிரப்ப
வாழ்க்கை ஒன்றும் கேள்வியில்லை
இருட்டினில் நதிகள் நகர்ந்தாலும்
சத்தம் அதை சொல்லிவிடும்

சுடலையிலே எரியும் வேலை
சூத்திரம் இதை தான் கற்றுப்பார்
உன் உடலை விட்டு வெளியேரி
உன்னை நீயே உற்றுப்பார்

இந்த க்லைடாஸ்கோப்பில் கண்ணாடி துண்டுகளை
உருத்துவது யார் மிரட்டுவது யார்
துரத்துவது யார் புரட்டுவது யார்
யார் யார் யார் யார்

இவன் பார்த்த காட்சிகள் பிழைதானா
இல்லை தெடர்ந்து துரத்திடும் மழைதானா
(இவன் பார்த்த)

மூச்சு வாங்குதே மூச்சு வாங்குதே
விட்டு விட்டு விட்டு மூச்சு வாங்குதே
காட்சி மாறுதே காட்சி மாறுதே
கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே

இவன் மாய தீயிலே வீழ்ந்தானா
இனி காயம் இன்றியே எழுவானா
(மூச்சு வாங்குதே)

இவன் பாதை எங்கிளும் வலிதானா
இது தேடி வந்ததில் விலை தானா
(மூச்சு வாங்கியே)

ஒரு கண்ணில் வேகம் மறு கண்ணில் தாகம்-

படம்: சமர்
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: ரஞ்சித்,நவீன் மாதவ்,சுசித்ரா
பாடல்: நா.முத்துக்குமார்

ஒரு கண்ணில் வேகம் மறு கண்ணில் தாகம்
இவனொரு காட்டு அருவி ஓ... ஓ...
மண்ணோடும் இருப்பான் விண்னோடும் பறப்பான்
இவனொரு வேட்டை குருவி ஓ... ஓ...

எட்டாத மேகம் போல் இவன்
பற்றாத முங்கில் காடு இவன்
முல்லைக்கு தந்த தேர் இவன்
காட்டாளன் தானடா
கட்டாத காற்றை போல் இவன்
குத்தாத கெம்பு மான் இவன்
எட்டாத உயரம் தான் இவன்
கூரான வாளடா

சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்

சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
(ஒரு கண்ணில்)

விண்மீன்கள் தூங்கும் போதும் தூங்காத ஆள் இவன்
மண்ணோடு பேசுகின்ற விதை தான் இவன்
கல் தோன்றி மண்ணும் தோன்றா காலத்தின் காடிவன்
காலங்கள் எழுதி வைக்கும் பெயர் தான் இவன்
இவன் குளிர் காலத்தில் வெய்யிலை
ஒரு போர்வையாய் செய்வான்
இவன் வெய்யில் நேரத்தில்
பனியை ஒரு மாலையாய் செய்வான்
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ...
ஓ... ஓ...

சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்

சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்

சில நேரம் பூக்களோடு ஏதேதோ பேசுவேன்
காட்டானை கூட்டத்தோடு நீர் ஆடுவேன்
பல நேரம் காற்றிலாடும் சிலும்பங்கள் வீசுவானேன்
பறவைக்கும் காயம் வந்தால் போராடுவேன்
நான் பாடம் கற்க காடேல்லாம் கல்லூரி தான்
என் பெயரை சொன்னால் குயில் பாடும் கச்சேரி தான்
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ...
ஓ... ஓ...

சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்

சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்

அழகோ அழகு-சமர்


படம்: சமர்
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: நரேஷ் ஐயர்
பாடல்: நா.முத்துக்குமார்

அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு

அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ

அழகோ அழகு
அழகோ அழகு

எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு

மெல்லிடையை பற்றி சொல்லா
இல்லாத அழகு
கீழே கொஞ்சம் பார்க்க சொல்லா
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…

காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு
கண்ணிரண்டில் வலையை பிண்ணி பிண்ணி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில் சிரிக்கையில்
தீராத அழகு
கண்ணிரண்டு யோசிக்கையில்
வேரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…

அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு

அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ

அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ

காற்றின் மொழி ஒலியா இசையா-மொழி


படம் : மொழி
பாடல் :
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : பல்ராம்

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
(காற்றின் மொழி)

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது
(இயற்கையின் மொழிகள்)
(காற்றின் மொழி)

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்
(இயற்கையின் மொழிகள்)
(காற்றின் மொழி)

Friday, December 21, 2012

நா ஒன்னாம் க்கிலாசு படிக்கும் போதே-அலெக்ஸ்பாண்டியன்


படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்
பாடியோர்: முகேஷ்,பிரியதர்ஷினி
பாடல்: வாலி
 
நா ஒன்னாம் க்கிலாசு படிக்கும் போதே
ஒன்னு விட்ட மாமன் பையன்
கண்ணடிச்சு கை புடிச்சானே

நா ரெண்டாம் க்கிலாசு படிக்கும் போதே
ரெஷன் கடை க்யுவப்போலே
வாசல் முன்னே கூட்டம் கண்டேனே

நா மூனா க்கிலாசு படிக்கும் போதே
ஸ்டுடன்ஸ் கையில் என் இன்ரெக்கிவ்வும்
நாழாங் க்லாசு படிக்கும் போதே
எங்கும் என் ஸ்டேசு

இம்மாம் பேர விட்டுபுட்டு மூனு பேரும் ஆசப்பட்டு
ஓ பின்னாலே வாந்தோமே என்ன செய்ய போர...

பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...
பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...

ஆ... மல்லிகா ஷரவத்துக்கு மேனிக்கு மாராத்து
மச்சன் நீ தான் பண்ணுணு யாரோ சொன்னாங்க

ஹே... வந்தாக்கா மேசேஜுதான் செய்வேனே மசாஜுதான்
நான் தான் செஞ்ச ஒளவையும் குஷ்பு ஆவாங்கா

ஓயில் மசாஜா முட்ட போயில் மசாஜா சொல்லு
காத்திருக்கேன்டா கண்ணாளா...

ஹேய் கூடும் போது தான் நான் ஓர் குடன் குலம் தான்
தொட்டா back முதல் front-u வரை சொக் அடிக்காதே...

பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போம் கம் கம் கம்
நாம் ஒன்னா சேந்தாலே

பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...

ஆ... ப்ரெட்டுல பப்பர் வச்சா மாரோட சேன்டு வச்சா
உன்னை அள்ளி என் மேலே ஒட்டு மச்சானே
ஏ... வெச்சாக்கா பிக்க மாட்டேன் வேராகி நிக்க மாட்டேன்
ஊசி நூலு இல்லாம ஒன்னா தெப்பேனே

கேட்டு வோக்கு தான் மேலே மூனு வோக்கு தான்
கண்டு வேர்த்து போனாலே சேவாக்கு...

ஹேய் பேட்டு புடிச்சல் முன்னால் பந்து குதிச்சால் பாரு
செஞ்சரி மேல் செஞ்சரி தான் சொல்லி அடிப்பேன்

மாமா சேப்பாகும் என் மேனி நீ தானேடா என் தோனி
வந்து தான் விளையாடு...

பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...

ஓய் மாமா பெண்ண தான்னு திமிரா கேட்டது ஒரு காலம்-அலெக்ஸ்பாண்டியன்


படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்  
பாடியோர்: கார்த்திக்
பாடல்: விவேகா

ஓய் மாமா பெண்ண தானு திமிரா கேட்டது ஒரு காலம்
இப்ப மெடரோமொனியில் பொண்ண தேடி லூசா அலைகிறோம்

நம் வீட்டு பக்கத்துல இருக்கும் நெபர் பெயர் தெரியாது ஆனா
facebook-ல உலகம் பூரா frienda தேடுகிறோம்

யே புள்ள மீனாச்சி உங்க அண்ணா வேலை என்னாச்சு
இப்படியெல்லாம் இப்ப நாம எங்க பேசுறோம்

எல்லாம் கையில செல் போனு
அதில் சினிமா பாட்டு ரிங்கிங் டோனு
மனச விட்டு பேச மறந்து
போலி வாழ்க்கை தான் வாழ்கிறோம்

தக்க தையா...
இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா
ஹே... தகக்க தையா...
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்

ஹேய் அப்பனோட அப்பா பெர மரக்கிறோம்
பிள்ளைக்கு சச்சின், தோனி பெயர வச்சு வளக்கிறோம்

அப்பா அப்பா அத அத கத்து தார மரந்துட்டு
பின்னால பொலம்புறோம்

டீவீ பெட்டி முன்ன நித்தம் கிடக்கிறோம்
அதில் தேம்பி அழும் பெண்ண கண்டு உருகுறோம்
பக்க வந்த சொந்தங்களை காக்க வெச்சி
பாசத்த பஞ்சர் ஆக்கி அனுப்புறோம்

ஹோய் தாலாட்டு பாட்டெல்லாம் காணாம போச்சேடா
அட குத்து பாட்ட கேட்டு தான் இப்ப
பச்ச குழந்தையும் தூங்குது

தக்க தையா...
இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா ஹோய்
ஹேய் தக்க தையா...
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்

ஹேய் கட்டு கட்டா பணம் வந்து பலனில்லை
உன் கட்டிக் கொஞ்சம் சொந்தம் வேணும் மாப்பிள்ள
நாடு நாடு சுத்தினாலும் வீடு வந்து
சேரும் போது நிம்மதி பொறக்குமே

அண்ணா தம்பி சண்ட கூட நடக்கலாம்
அதில் ஆளுக்கொறு பல்லு கூட உடையலாம்
வேரோறுத்தன் யாரே வந்து அண்ணன் மேல கைய வச்சா
தம்பி மனம் துடிக்குமே

கா கா-னு சொன்னாலே காக்கைகும் கூட கூட்டம் வரும்
பாடான மனுசம் தானே பாதி பாதி வாழுறான்

தக்க தையா...
ஹேய் இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா ஹோய்
தக்க தையா...
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்

நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ- அலெக்ஸ்பாண்டியன்


படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்  
பாடியோர்: தேவிஸ்ரீபிரசாத்,அனிதா
பாடல்: விவேகா

ஹேய் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே

ஹேய் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே

யானை, சிங்கம், பலி பல நூறு ஜந்துக்கள்
எல்லாம் எல்லாம் இங்கே என்னோட நண்பர்கள்
லேசா செஞ்சபோதும் கண்ணலே ஒரு சிக்னல்
உன்ன புடிச்சு தருமே என் கையில்

ஹேய் நான் தான் இந்த காட்டு ராஜா நீயோ ஒரு கன்னி ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்

ஹேய் நான் தான் இந்த காட்டு ராஜா நீயோ ஒரு கன்னி ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்

ஹேய் நாழு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே

வெள்ள துரை நானே ஆயுல் சிறை நானே
தப்பா நினைக்காதே வேப்பன் எழுப்பேனே

செம்மன் முடிகாரா சும்மா மெரட்டாதே
இங்லிஷ் திமிரேல்லாம் இங்க நடக்காதே

ஹேய் அனக்கோன்டாவ புடிச்சே நா அடக்கி வெச்ச ஆளு
அட தம்மாதுண்டு இருக்க உன்ன விடுவேனா சொல்லு

யானை பெருசா இருந்தாழும் ஒரு எறும்ப கண்டு அளரும்
சிறுசும் பெருச ஜெய்க்கும் தில்லு தில்லு

ஹேய் நான் தான் இந்த நாட்டு ராஜா நீயோ ஒரு பட்டு ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன

ஹேய் நாழு பக்கம் ஆளிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே

சின்ன முகமூடி குட்ட கருந்தாடி
வெச்ச பெருங்கேடி பொலிஸ் வரும் தேடி

ஹேய் ஏழு மலை தாண்டி எட்டு கடல் தாண்டி
உன்னை ஒலிப்பேன்டி எவன் புடிப்பானடி

ஹா கூகுல் மெப்ப போட்டு அட கண்டு புடிப்பான் ரூட்ட
அழுவ சோரி கேட்டு சோ இப்ப வாலாட்டு

ஹேய் எல் போட் இல்ல சிட்டு நா எதிழும் அப்டுடேட்டு
ரோங்கோ இல்ல ரைட்டு நா வெய்ட்டு வெய்ட்டு

ஹேய் நான் தான் கொள்ளை ராஜா நீயோ ஒரு வெள்ளை ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்

Bad Bad Boy-அலெக்ஸ்பாண்டியன்


படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்  
பாடியோர்: பாபா சேகல்,பிரியா ஹிமேஷ்  
பாடல்: கருணாகரன்

எல்லோருக்கும் வணக்கம்
எல்லோருக்கும் வணக்கம்

என்ன பார்க்க வந்த
எல்லோருக்கும் டப்புள் வணக்கம்
வணக்கம்..

ஹேய் பட்டி தொட்டி ஒலிக்கும்
பட்டி மன்றம் நடக்கும்
என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும்
அடி கிடைக்கும், கிடைக்கும்...

மச்சி தல இந்தா மாலை
உன்ன பார்த்த மனசு ஹெப்பி ஆச்சுடா
ரிலேக்ஸ் மாமு ரிலீஸ் நானே
இனி ஊரே என் கிட்ட மாட்டிக்குச்சுடா

Im a Bad Bad Bad Bad Boy...
Im a Bad boy, am a Bad boy

ஏ வருஷத்துல பாதி நாளு
நான் கவர்மண்ட்டு கஸ்டமரு கேட்டுப்பாரு
பாரு பாரு பாரு கேட்டுப்பாரு

ஏ நல்லவனா? கிடையாது
அடிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது
காது காது காது புடிக்காது

கேடி, ரவுடி, மொல்லமாரி
அட எல்லாம் சேர்ந்த நல்ல பையன் டா
பில்லா, ரங்கா, பாட்ஷா எல்லாம் என்
தோஸ்த்து தான்டா கேட்டுப்பாரோன் டா
(Im  a Bad)

ஜில்லுனு தான் வாருவானே
ஜாங்கிரி போல சிரிப்பானே
ஜீ பூம் பா செய்வானே
Bad Boy, Bad Boy

மெக்னட் கண்ணால
சொக்லெட்டு கன்னத்தால
மயக்கிபுட்டு போரானே
Bad Boy, Bad Boy

ஹே யே குரு தான் நம்பியாரு
என்னையும் வில்லனா மாத்திடாரு
டாரு டாரு டாரு மாத்திடாரு

ஹேய் எனக்குள்ளயும் எம் ஜீ ஆர்-ரு
அப்போ அப்போ வந்து எட்டி பாப்பாரு
பாரு பாரு பாரு எட்டி பாப்பாரு

இப்ப full-u life ஜில்லு
ஹேய் நீயும் நாட்டுல கிங்கு தானடா

மச்சி மாசி மாத்தி யோசி
அட வாழ்க்க வாழ்க்க காசு வேணுடா
(Im a Bad)

ரய்யா ரய்யா ரய்யா ரய்யா-அலெக்ஸ்பாண்டியன்


படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்  
பாடியோர்: ஜாவிட் அலி,ராணினா ரெட்டி
பாடல்: பா.விஜய்

மேனே ப்யாருகியா சாவன் சாவரியா
தில்வாலே துனாலியா கதய கேட்டியா
மேனே ப்யாருகியா சாவன் சாவரியா
தில்வாலே துனாலியா கதய கேட்டியா

ரய்யா ரய்யா ரய்யா ரய்யா
மேனே ஹேய் ப்யாருகியா
ரியா ரியா ரியா ரியா
காதலிக்க நீ வாரியா

ஹோய் ரய்யா ரய்யா ரய்யா ரய்யா
மேனே ஹேய் ப்யாருகியா
ரியா ரியா ரியா ரியா
காதலிக்க நீ வாரியா

ஆஜா ஏ ஆஜா நீ தான்டா பொருக்கி ராஜா
குஜாவுக்கும் ராஜாவுக்கும் டூயட்டு

ஹேய் சோஜா சோஜா என் நெஞ்சில் வந்து சோஜா
என் மனசு காதல் வெல்வெட்டு

Film-u கலர் Film-u என் நெஞ்சிலே
ஓடுது லவ் லவ் படமே ஹோய்

இனிமே அடடா இனிமே லவ் படதுல
நமக்கு விசிலே வருமே ஹேய்
(ரய்யா)

மேனே ப்யாருகியா சாவன் சாவரியா
தில்வாலே துனாலியா கதய கேட்டியா

ஏ... நீ எனக்கு மாங்கா நா உனக்கு பூங்கா
லவ்... சோங்கா...

அப்படியா...
பக்கதுல தேங்கா பாக்குரியே ரோங்கா
ஓ... லோங்கா...

அய்யோ...
சண்டி ஹே சண்டி நீ சாத்துக்குடி மண்டி
ஜூசு கட உன்ன கண்டு ஏங்குது

ரெண்டி ஏ ரெண்டி நீ ராயபுரம் வண்டி
உன்ன தொட்டா உச்சி ஊருது...
(Film-u கலர் )

ஹேய் இனிமே அடடா இனிமே லவ் படதுல
நமக்கு விசிலே வருமே

காரக்குடி தாண்டி கட்டும் சேலை வாங்க
நா... போரேன்

சேலை வாங்கி வாந்தா கட்டி விட தானே
நா... வாரேன்

தொட்டா ஏ தொட்டா நீ சேலை கட்டி விட்டா
என் இடுப்புல நிக்காமலே போய்டு

விட்டா ஏ விட்டா நீ என்ன கொஞ்சம் விட்டா
சோலையாக என்ன கட்டுவே...
(Film-u கலர் )

ஹேய் இனிமே அடடா இனிமே லவ் படதுல
நமக்கு விசிலே வருமே ஹேய் ஹேய் ஹேய்

அணு விதைத்த பூமியிலே-விஸ்வரூபம்


படம்: விஸ்வரூபம்
இசை: ஷங்கர்-இஷான்-லொய்
பாடியோர்: கமல்ஹாசன்,நிகில் டி ஸோசா  
பாடல்: கமல்ஹாசன்,நிகில்

There is place far away
I wonna go there someday
There is place far away
I wanna be there someday

அணு விதைத்த பூமியிலே
அருவடைக்கும் அணுகதிர் தான்

பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லை

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா

கருவரையும் வீடல்ல கடல் சூழலதும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேரு மருந்தில்லை

போர் செல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா

There is place far away
I wonna go there someday
There is place far away
I wanna be there someday
There is place

எவன் என்று நினைத்தாய்


படம்: விஸ்வரூபம் (2012)
இசை: ஷங்கர்-இஷான்-லொய்
பாடியோர்: சுராஜ் ஜெகன்
பாடல்: வைரமுத்து
 
எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரத்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் முழுரூபம்

நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது
காட்டுக்கும் காயம் இல்லை

எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்றும் முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
(நெருப்புக்கு)

விஷ்வல்லா...ஹூ ஹக்பர் விஷ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனே...மே
விஷ்வல்லா...ஹூ ஹக்பர் விஷ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனே...மே

சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே
வெளிப்படும் விஸ்வருபம்

என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வருபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
(யாருக்கும்)

ரூபம் ரூபம் ரூபம் ரூபம்...
ரூபம் ரூபம் விஸ்வருபம்
(விஸ்வல்லா...ஹூ)

துப்பாக்கி எங்கள் தொழிலே-விஸ்வரூபம்


படம்: விஸ்வரூபம் ()
இசை: ஷங்கர்-இஷான்-லொய்
பாடியோர்: கமல்ஹாசன்,பென்னி தயாள்
பாடல்: வைரமுத்து
 
துப்பாக்கி எங்கள் தொழிலே
துர்பாக்கியம் தன் வாழ்விலே
எப்போதும் சாவு நேரிலே
இப்போது வெல்வோம் போரிலே

போர்களை நாங்கள் தேர்ந்தேடுகவில்லை
போர்தான் எம்மை தேர்தெடுத்து கொண்டது
எண்களின் கையில் ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது
ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்

ஓட்டகமுதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது
நீதி காணமல் போர்கள் ஓயாது

பூமியை தாங்க பூஜ வீரன் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க நுரை ஈரல் கேட்கிறோம்
எக்கு திசைகளால் ஒர் இதயம் கேட்க்கிறோம்
இருநூரண்டு இளமை கேட்கிறோம்
துப்பாக்கி எம் தளியானையை தூங்கி திரிகின்றோம்

ஓட்டகமுதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது
நீதி காணமல் போர்கள் ஓயாது

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே-விஸ்வரூபம்


படம்: விஸ்வரூபம்
இசை: ஷங்கர்-இஷான்-லொய்
பாடியோர்: கமல்ஹாசன்,ஷங்கர்மகாதேவன்
பாடல்: கமல்ஹாசன்
 
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
க்ரிஷ்ணா

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
நிதம் காண்டின்ற வான் கூட நிஜமில்லை
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
கம்தநிஸ நித பம கம ரிகரிஸ

உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளினி மோகண ஷியாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ ஸ்ருதிலயகங்கா
க்டதகதின் தீம் தீன்னா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே-விஸ்வரூபம்


படம்: விஸ்வரூபம்
இசை: ஷங்கர்-இஷான்-லொய்
பாடியோர்: கமல்ஹாசன்,ஷங்கர்மகாதேவன்
பாடல்: கமல்ஹாசன்
 
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
க்ரிஷ்ணா

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
நிதம் காண்டின்ற வான் கூட நிஜமில்லை
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
கம்தநிஸ நித பம கம ரிகரிஸ

உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளினி மோகண ஷியாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ ஸ்ருதிலயகங்கா
க்டதகதின் தீம் தீன்னா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

Wednesday, December 19, 2012

நீ இல்லையேல் நான் என்ன செய்வேன்-கடல்

படம்: கடல்
இசை: A.R.ரஹ்மான்
பாடல்: மதன் கார்க்கி
பாடியோர்: ஹரிச்சரண்

நீ இல்லையேல் நான்... என்ன செய்வேன்...
அன்பின் வாசலே...

எம்மை நாளும் ஆளும் உருவே மீண்டும்
கண்டோம்
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்
நாலங்கள் ஊடே உனதண்பின் பெரு வெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

நீயே எமதன்னமாக...
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிரைந்தாய் மனம்
விரித்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

ஹோ... வான், மண், நீ, தீ எல்லாம் நீ தானே
சீற்றம், ஆற்றம், காற்றும் நீ தானே

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

கண்ணீர் தேக்கும் என் உள்ளதாக்கில்
உன் பெயர் சொன்னால் பூ பூத்திடாதா

பூவின் மேலே வண்ணம் நீதானே
வேரின் கீழே ஜீவன் நீ தானே

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

அன்பின் வாசலே...

எம்மை நாளும் ஆளும் உருவே மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்
நாலங்கள் ஊடே உனதண்பின் பெரு வெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

நீயே எமதன்னமாக...
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிரைந்தாய் மனம்
விரித்தோம் ஆசை ஏசுவே

ஏம்மா சீலை நம்ம கடலம்மா அள்ளித்தரா-கடல்

படம்: கடல்
இசை: A.R.ரஹ்மான்
பாடல்: மதன் கார்க்கி
பாடியோர்: A.R.ரஹ்மான்
 
ஏம்மா சீலை நம்ம கடலம்மா அள்ளித்தரா
ஆமா சீலை அவ அலை வீசி சிரிக்கிரா
ஏம்மா சீலை நம்ம கடலம்மா அள்ளித்தரா
ஆமா சீலை அவ அலை வீசி சிரிக்கிரா

ஏலோ கீச்சன் வந்தாசு - நம்ம
சூச பொண்ணும் வந்தாச்சு
ஹேய் ஈசவரம் பொழிஞ்சாச்சு
(ஏலோ)
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

வாலே கொண்டாலே காட்டுமரங் கொண்டாலே
குண்டு மீனா அள்ளி வாராக் கொண்டாலே
(ஏலோ)

யேலா... பாய் விரிச்ச அய்யோ...
ஆ... வா வா வாசம் தேடித் தேடி
வாராங் கீச்சன் உன் கீச்சன் ராவோடு கூவிக்கிட்டு
கண்ண கேப்பான் ராலோட ராலோட மீச ஒன்ன
கேப்பான் கீச்சான் புலி வேசம் போட்டு
வாருவான்... கீச்சான்... வாருவான்... ஓ...
(ஏலோ)
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

வாலே கொண்டாலே காட்டுமரங் கொண்டாலே
குண்டு மீனா அள்ளி வாராக் கொண்டாலே

ஹேய்... ஹேய்... ஹேய்...
சட சட சடவேன காற்றுல ஆடும்
என் சாரம் ஏலா ஒம் பேர பாடாத...
ஒரு ஒரு ஒரு ஒரு ஒரு ஓ...
ஒரு தரம் ஒரு தரம் ஒரச
பொசுக்குனு பொசுக்குனு உசுர
உனக்காக வலையொனு வலையொனு
விரிச்சிருக்கே நான் தவமிருக்கேன்
நீ விழுவேனு விளக்கெண்ண உத்திக்கிட்டு
முலிச்சிருக்கேன் நான் அரை கிருக்கன்
நீ வேனா சென்னா...
எங்க எங்க போவானோ தொமா...
ஒத்த அலையில மிதக்கிற ஓடம் போல்
உன் நெனப்புல நா மிதந்கு கிடக்கிறேன்
ஓர பார்வையிலே சிரிச்சா என்ன
(ஏலோ)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

வாலே கொண்டாலே காட்டுமரங் கொண்டாலே
குண்டு மீனா அள்ளி வாராக் கொண்டாலே

நீ திடு திடுக்க என்ன சுத்தி வலைக்க
நான் வெழு வெழுக்க தலை கிரு கிருக்க
நீ பார்த்த நொடியே - ஹோய்
பித்து பிடிக்க என் தூத்துக்குடியோ
உன்ன தூக்கி இழுக்க தூக்கி இழுக்க

இத்துன மச்சம் - ஹோய்
எத்துன லட்சம் அது என்னி முடிச்சே
நம்ம தூக்கம் தொலைச்சேம்

ஹோய் ஒத்தபிடியா நீ மெத்தம் கொடுத்த
என் அன்ன மடியா என்ன வாரி எடுத்த வாரி எடுத்த

ஏம்மா சீலை நம்ம கடலம்மா அள்ளித்தரா
ஆமா சீலை அவ அலை வீசி சிரிக்கிரா
(ஹேய் ஏலோ)

வாலே கொண்டாலே யேலம்போட கொண்டாலே
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே

வாலே கொண்டாலே யேலம்போட கொண்டாலே
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே

வாலே கொண்டாலே காட்டுமரங் கொண்டாலே
குண்டு மீனா அள்ளி வாராக் கொண்டாலே
ஏலோ கீச்சன் வந்தாசு

வாலே கொண்டாலே காட்டுமரங் கொண்டாலே
குண்டு மீனா அள்ளி வாராக் கொண்டாலே

மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ-கடல்


படம்: கடல்
இசை: A.R.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியோர்: அபே ஜோட்புர்கர்,ஹரிணி
 
மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ
நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீததோ
பௌர்ணமி இரவு பனி வீழும் காடு
ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ
நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீததோ

குளத்தாங் கரையில குளிக்கும் பறவைக
சிறகு உலக்குமே துளிக தெரிக்குமே

முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நான் ஒன்ன அணைக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

மரங்கள் நடுங்கும் மார்கழி எரிக்க
ரத்தம் ஒரையும் குளிரும் நிருத்த

உஷ்னோ யாசிக்க உடலும் இருக்க
ஒத்த போர்வையில இருவரும் இருக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு
நீ போதுமே...

மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ
நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி வீழும் காடு
ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

மனச தொரந்தாயே நீ-கடல்


படம்: கடல்
இசை: A.R.ரஹ்மான்
பாடல்: மதன் கார்க்கி
பாடியோர்: சித் ஸ்ரீராம்

மனச தொரந்தாயே... நீ
எங்கிருந்து வந்தாயோ நீ
அடியே... அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர
அடியே... அடியே...
எங்க நீ கூட்டி போர
என்ன எங்க நீ கூட்டி போர

பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே
இந்த காட்டு பய
ஒரு ஆட்டுகுட்டி போல
உன் பின்னே சுத்துரேனே
(பல்லாங்குழி)

அடியே அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர
அடியே... அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர
அடியே அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர
அடியே... அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர

மீன தூக்கி ரெய்க வரைஞ்சா
வானம் மேலே நீ வீசி எரிஞ்சா
பறக்க பழகரியே
எங்கிருந்து வந்தாயோ... நீ...

கண்ணால கண்ணாடி செய்து
என் அச்சத்த காட்டுரியே
என் ஊசி துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ள அடிக்கிரியே

ஓ... பூமி விட்டு சொர்கத்துக்கு
நீ வானவில்லில் பாதை விரிச்சா
மனச கயிராக்கி இழுத்து போராயே நீ...
சொர்கம் விட்டு பூமி வாந்தால்
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தால்
நான் விழிச்சு பார்க்கையில
கலைஞ்சு போவாயோ... நீ...

அடியே... அடியே...
என்ன எங்க நீ கூட்டி... போர...
அடியே... அடியே...
என்ன எங்க நீ கூட்டி... போர...

சித்திரை நிலா ஒரே நிலா பரந்த வானோ-கடல்


படம்: கடல்
இசை: A.R.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியோர்: விஜய் ஜேசுதாஸ்

சித்திரை நிலா ஒரே நிலா பரந்த வானோ
படைச்ச கடவுளு எல்லாமே ஒத்தையில
நிக்குதுடே...

நீ கூட ஒத்தையில நிக்கிரடே
எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ
தொட்டு வை மக்கா
(சித்திரை)

நீ கூட ஒத்தையில நிக்கிரடே
எட்டு வை மக்கா எட்டு வச்சு ஆகாசோ
தொட்டு வை மக்கா

மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்
மனதில் இருந்து ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால் தான்
பூமியும் கூட தாழ் திறக்கும்

எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ
தொட்டு வை மக்கா

கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும்
கலங்களில் இருந்தே தேசங்கள் தோன்றும்
துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும்
சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும்
தோனிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்

சித்திரை நிலா ஒரே நிலா...
எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ
தொட்டு வை மக்கா

மரம் ஒன்று விழுந்தால் மறுபடி தலைக்கும்
மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும்
பூமியை திறந்தால் புதையலும் இருக்கும்
பூக்களை திறந்தால் தேன் துளி இருக்கும்
(மரம் ஒன்று)

நதிகளை திறந்தால் கலனிகள் செலிக்கும்
நாளையை திறந்தால் நம்பிகை சிரிக்கும்
நதிகளை திறந்தால் கலனிகள் செலிக்கும்
நாளையை திறந்தால் நம்பிகை சிரிக்கும்... ஓ... ஓ...

சித்திரை நிலா ஒரே நிலா
சித்திரை நிலா ஒரே நிலா...

நாளையை திறந்தால் நம்பிக்கு சிரிக்கும்...
அதோ அதோ ஒரே நிலா...

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு-பம்பாய்

படம் : பம்பாய்
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்-கோச்சடையான்


படம்: கோச்சடையான்
இசை: A.R.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியோர்:

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்
இதயம்
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே

நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...
இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே

பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்

செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
வாய் மொட்டுடைந்தால்
பூவாசம் வாசத்துக்கேது சிறைவாசம்.?

Friday, December 14, 2012

தொட்டு தொட்டு போகும் தென்றல்-காதல்கொண்டேன்


படம் : காதல்கொண்டேன் ()
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  ஹரீஸ் ராகவேந்திரா
பாடல் வரி : நா.முத்துகுமார்

தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்
தேகம்  எங்கும்  வீசாதோ
விட்டு  விட்டு  தூறும்  தூறல்
வெள்ளமாக  மாறாதோ
ஒரு  வெட்கம்   என்னை  இங்கு  தீண்டியதே
அவள்  பாக்கும்  பார்வை தான்  குளிர்கிறதே
போகும்  பாதை தான்  தெரிகிறதே
மனம்  எங்கும்  மயங்கிடும்  பொழுது
வார்த்தையா  இது  மௌனமா வானவில்  வெறும்  சாயமா
வண்ணமா  மனம்  மின்னுமா  தேடி  தேடி  துலைந்திடும்  பொழுது

தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்
தேகம்  எங்கும்  வீசாதோ
விட்டு  விட்டு  தூறும்  தூறல்
வெள்ளமாக  மாறாதோ

தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்
தேகம்  எங்கும்  வீசாதோ
விட்டு  விட்டு  தூறும்  தூறல்
வெள்ளமாக  மாறாதோ

இந்த  கனவு  நிலைக்குமா தினம்  காண  கிடைக்குமா
உன்  உறவு  வந்ததால்  புது  உலகம் பிறக்குமா
தோழி  உந்தன்  கரங்கள்  தீண்ட  தேவனாகி  போனேனே
வேலி  போட்ட  இதயம்  மேலே  வெள்ளை  கொடியை  பார்தேனே
தத்தி  தடவி  இங்கு  பார்கையிலே
பாத  சுவடு  ஒன்று  தெரிகிறதே
வானம்  ஒன்று தான்  பூமி  ஒன்று தான்
வாழ்ந்து  பார்த்து  விழுந்திடலாமே

தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்
தேகம்  எங்கும்  வீசாதோ
விட்டு  விட்டு  தூறும்  தூறல்
வெள்ளமாக  மாறாதோ

விண்ணும்  ஓடுதே  மண்ணும்  ஓடுதே
கண்கள்  சிவந்து  தலை  சுற்றியதே
இதயம்  வலிக்குதே  இரவு  கொதிக்குதே
இது  ஒரு  சுகம்  என்று  புரிகிறதே
நேற்று  பார்த்த  நிலவா  என்று  நெஞ்சம்  என்னை  கேட்கிறதே
பூட்டி  வைத்த உணர்வுகள்  மேலே  புதிய  சிறகு  முளைகிறதே
இது  என்ன  உலகம்  என்று  தெரியவில்லை
விதிகள்  வரைமுறைகள்  புரியவில்லை
இதய  தேசத்தில்  இறங்கி  போகையில்
இன்பம்  துன்பம்  எதுவும்  இல்லை

தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்
தேகம்  எங்கும்  வீசாதோ
விட்டு  விட்டு  தூறும்  தூறல்
வெள்ளமாக  மாறாதோ
ஒரு  வெட்கம்   என்னை  இங்கு  தீண்டியதே
அவள்  பாக்கும்  பார்வை தான்  குளிர்கிறதே
போகும்  பாதை தான்  தெரிகிறதே
மனம்  எங்கும்  மயங்கிடும்  பொழுது
வார்த்தையா  இது  மௌனமா வானவில்  வெறும்  சாயமா
வண்ணமா  மனம்  மின்னுமா  தேடி  தேடி  துலைந்திடும்  பொழுது

நான் போகிறேன் மேலே மேலே-நாணயம்

படம் :நாணயம்
பாடியவர்: S.P. பால சுப்பிரமணியம், K.S. சித்ரா
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடலாசிரியர் :தாமரை

நான்  போகிறேன்  மேலே  மேலே
பூலோகமே  காலின்  கீழே
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே
பூ  வாளியின்  நீரை  போலே
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம்
அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம்
ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும்
ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும் 

நான்  போகிறேன்  மேலே  மேலே 
பூலோகமே  காலின்  கீழே 
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே 
பூ  வாளியின்  நீரை  போலே 
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே 
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம் 
அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம் 
ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும் 
ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும்

கண்ணாடி  முன்னே  நின்றே 
தனியாக  நான்  பேச 
யாரென்னும்  ஜன்னல்  தாண்டி  பார்த்தால்  ஐயோ 
உள்பக்கம்  தாழ்பாள்  போட்டும் 
அறையினுள்  நீ  வந்தாய் 
கை  நீட்டித்  தொட்டுப்  பார்த்தேன்  காற்றை  ஐயோ 

என்  வீட்டில்  நீயும்  வந்து  சேரும்  காலம்  எக்காலம் 
பூ  மாலை  செய்தேன்  வாடுதே 
என்  மெத்தை  தேடும்  போர்வை  யாவும்  சேலை  ஆகாதோ 
வாராதோ  அன்னாளும்  இன்று ,ஹானான்

என்  தூக்கம்  வேண்டும்  என்றாய் 
தரமாட்டேன்  என்றேனே 
கனவென்னும்  கள்ளச்சாவி  கொண்டே  வந்தாய் 
வார்த்தைகள்  தேடி  தேடி  நான்  பேசி  பார்த்தேனே 
மௌனத்தில்  பேசும்  வித்தை  நீதான்  தந்தாய்

அன்றாட  போகும்  பாதை  யாவும்  இன்று  மாற்றங்கள் 
காணாமல்  போனேன்  பாதியில் 
நீ  வந்து  என்னை  மீட்டி  செல்வாய்  என்று  இங்கேயே 
கால்  நோக  கால்  நோக  நின்றேனே

நான்  போகிறேன்  மேலே  மேலே 
பூலோகமே  காலின்  கீழே 
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே 

பூ  வாளியின்  நீரை  போலே 
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே 
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே

ஆ ....
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம் 
அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம் 
ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும் 
ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும் 

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே-ரோஜா

படம் : ரோஜா
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் :  S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..

தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

எனைக் காணவில்லையே நேற்றோடு-காதல் தேசம்

படம் : காதல் தேசம்
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் :  O.S.அருண், ரபி, S.P. பாலசுப்ரமணியம்
பாடல் வரி : வாலி

அன்பே... அன்பே... யே யே
அன்பே...யே யே  அன்பே...

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தால்... வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தால்... வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு-பம்பாய்


படம் : பம்பாய்
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்-பம்பாய்

படம் : பம்பாய்
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் :  K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து

சலசலசலசல சோலை கிளியே ஜோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிக்கொதிக்கும்
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடித்துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

சலசலசலசல சோலை கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
கண்ணாளனே.....

சட்டென நனைந்தது நெஞ்சம்- கன்னத்தில் முத்தமிட்டால்


படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் : மின்மினி
பாடல் வரி : வைரமுத்து

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்

உடலுக்குள் மல்லிகை தூரல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல் சுகமாய்......
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு

எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்
என்று காத்து கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது
எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை
துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
சட்டென நனைந்தது நெஞ்சம்....

தென்மேற்குப் பருவக் காற்று-கருத்தம்மா


படம் : கருத்தம்மா
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் :  உன்னிகிருஷ்ணன், சித்ரா
பாடல் வரி : வைரமுத்து

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்

தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்

மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே

மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
நீயெறும் நானெறும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே

வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

விடை கொடு எங்கள் நாடே- கன்னத்தில் முத்தமிட்டால்


படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  M.S.விஸ்வநாதன், பல்ராம், மாணிக்க வினாயகம்,
பாடல் வரி : வைரமுத்து

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா? வருமா?
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?

கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?

பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

கள்வரே கள்வரே-ராவணன்

படம் : ராவணன்
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஸ்ரேயாகோஷல்
பாடல் வரி : வைரமுத்து

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமறிவீரோ.. அருள்புரிவீரோ..

வாரம் தோறும் அழகின்  பாரம் கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை களைவீரோ உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொல்வேனே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே


ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்-எஜமான்

படம் : எஜமான்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடலாசிரியர்: R.V. உதயகுமார்

கங் கண கணவென கிங் கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் ஒலி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கிறதே யே......
இது சுகம் தரும் சுயம்வரமே யே....
ஆ ஆ ஆ...... ஆ ஆ ஆ.....

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

தனனனன... தனனனன... தனனனன...
தனனனன... ன... ன... ன... ன...

சுட்டு விரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன்

தோகை கொண்டு நின்றாடும் தேங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்

அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

கட்டிலிடும் சுட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே

உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்க வா

ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெறெடுப்பேன் நானே

முத்தினம் வரும் முத்து தினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே

ஓ... எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே
ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

Thursday, December 13, 2012

மூக்குத்தி பூமேலே காத்து-

படம்: மௌன கீதங்கள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், S ஜானகி
பாடல்:

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதம்மா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்ம....

மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை
தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்

மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை
தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்

மழை மேகம் நானாகவா? மலர் தேகம் நீராட்டவா?
மடி ஏந்தி தாலாட்டவா? மனமார சீராட்டவா?
வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம
நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதம்மா

கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான்
காண நாளாகுமோ?
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
ஒரு பூமாலையும் திரு பொனூஞ்சலும்
அடி நான் காண நாளாகுமோ?

திருனாளும் தானே வரும்
உனைதேடி தேனே வரும்
வரும்போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன்போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே நன்னாளை தான்... ஆமா..

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதய்யா!
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்ம....

தானன்னா தனன்னா! தான தானன்ன தனன்னா

ஆடல் கலையே தேவன் தந்தது-ஸ்ரீராகவேந்திரா


படம்: ஸ்ரீராகவேந்திரா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ்
இசை: இளையராஜா
பாடல்:

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது......

மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
மல்லிகையே வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்

வண்ண வண்ண மேலாடை ஆஆஆ
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்.
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்.

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
தேவன் தந்தது தேவன் தந்தது

சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண்பறிக்கும் மின் கொடியோ,
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண்பறிக்கும் மின் கொடியோ,

விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெந்நிற நிலா
பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா..
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ

தலைசிறந்த கலைவிளங்க நடம்
புரியும் பதுமையோ - புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில்
பலவித ஜதி ஸ்வரம் வருமோ!!

குரல் வழி வரும் அனிமொழி ஒரு சரச பாஷையோ
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!!!
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ரி
க ம ம தக திமி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ப தா
நி ரி ஸா கா மா கா ரி க ரி ஸ ம ரி தா
நி ரி ச நி தா ப ஸா நி த ப

தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது.... தேவன் தந்தது....

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்-வருஷம் 16



படம்: வருஷம் 16
பாடியவர்: K.J.ஜேசுதாஸ்
இசை:
பாடல்:

ஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா
ஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா
ஓ ஓ ஓ ஓ ஓ

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன்
தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர்விட்டு ஊர் சென்று காவியம் பாட..

பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே...
(பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்)

பந்தங்கள் யாவும் தொடர்கதைப்போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளாய்
நூழிலைப் போல் இங்கு பாலுடன்
நெய்யென கலந்திடும் நாள்..

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்ததுதிங்கே
மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திகழ்த்திட

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன்
தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்.

கலைவாணியே கலைவாணியே-


படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
பாடியவர் : K.J.ஜேசுதாஸ்

கலைவாணியே... கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்
இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை மறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்.. ஆ....
முகம் காட்ட மறுத்தாய்.. முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள்
தெரிக்கிறது துடைத்துவிடு.. கலைவாணியே..

உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

உள்ளம் அழுதது உன்னை தொழுதது உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி
க்ண்ணீர் பெருகியதே... ஆ....
கண்ணீர் பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும்
உயிரே உயிரின் உயிரே அழகே அழகின் அழகே
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை
இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை.. வருவாய்..

Friday, December 7, 2012

தப்பாட்டம் வந்தாச்சே-ஆரோகணம்


படம் : ஆரோகணம்
இசை : கே
பாடியவர் :  K. ரஞ்சனி சந்தர், ஹரிஷ், R.சாரதா
பாடல் வரி : சுப்பு

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே
மனம் நில்லுனா நிக்காதே
ஒரு இரவு பத்தாதே
வான் தலையில் முட்டாமல்
கால் தரையில் ஒட்டாதே

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே
இந்த கூட்டம் குறையாது
இரவாட்டம் முடியாதே
இனி கூச்சம் உடைக்காமல்
இங்கு மோட்சம் கிடைக்காதே

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே... கே... கே... கே... கே...

மலவாழ தோப்போரம் தேடதான்
நம்மூரு சிங்காரி பாடதான்
லாலக்கு டோல் டப்பிமா ஆடதான்
ஆசை அதிகம் வச்சு கூடதான்
குடிகாரன் அருள் வாக்கு கேட்டுக்கோ
குறையெல்லாம் ஆட்டம் போட்டு தீத்துக்கோ

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே

ஆசை வச்ச
வெறி கொண்டு ஏச வச்ச
பயம் வந்ததும் பூச வச்ச
எதுக்காக மீச வச்ச

ஆஆ... ஆஆஆஆ... ஆஆஆ...
ஆஆ... ஆஆஆஆ... ஆஆஆ...

என்னோட பாட்டு பாட கூப்பிட்டா
ஏக் தோ தீன் கணக்கு பண்ணி காட்டட்டா
பொன்மேனி உருக காதல் சொல்லட்டா
போனால் போகட்டுமுன்னு செல்லட்டா

பேடராப்-னு உனக்கேன பிறந்தவ உனக்கேதான்
எப்போதும் கிடைச்சத வச்சிகோடா அவ்வளவுதான்

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே

மனம் நில்லுனா நிக்காதே
ஒரு இரவு பத்தாதே
வான் தலையில் முட்டாமல்
கால் தரையில் ஒட்டாதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்-தீபாவளி

படம் :தீபாவளி
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர் : நா.முத்துகுமார்

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை முடுதடி
யரென்று நீயும் என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி போகாதே போகதே
நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓஓகோ
உயிரோடு பார்த்திருபேன் ஓஓகோ

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கேலையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கண்ணன் வரும் வேளை-தீபாவளி


படம்: தீபாவளி
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியவர்கள்: மதுஸ்ரீ, அனுராதாஸ்ரீராம்
பாடல் வரி: நா.முத்துகுமார்

யேய்.... யே யேய்..... யேய்.... யே யேய்.....
கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்

வான்கோழி கொள்ளும் ஆசை யாழில் தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பார்ப்பது
தேர்க்கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஓரீசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு மீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை

கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்

யேய்.... யே யேய்..... யேய்.... யே யேய்.....
பூவாசம் தென்றலோடு சேர வேண்டுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே
தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் எழுதுமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே

கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்-தீபாவளி

படம் : தீபாவளி
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  விஜய்  யேசுதாஸ்
பாடல் வரி : நா. முத்துக்குமார்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த துறக்கத்தில் தான்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

உன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்  

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்


எந்தன் உயிரே எந்தன் உயிரே- உன்னருகே நானிருந்தால்


படம் : உன்னருகே நானிருந்தால்
இசை : தேவா
பாடியவர் :  K.S.சித்ரா, கிருஷ்ணராஜ்
பாடல்வரிகள்: தாமரை

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னை பார்த்தவுடன் என்னை தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்

அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒருபோதும் அலுக்கவில்லை

சின்ன சின்ன கூத்து
நீ செய்யுறதை பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்

வண்ண வண்ண பாதம்
நீ வச்சு வச்சு போகும்
அந்த தரையாய் நான் இருப்பேன்

கவலைகள் மறக்குதே கவிதைகள் பிறக்குதே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

உன்னை சேர்வதுக்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்க வைத்து
அடையாளம் நீ கொடுத்தாய்

உன்னை சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்ச தாலி மின்ன மெட்டி கேலி பண்ண
பக்கத்தில் நான் கிடப்பேன்

கண்ணில் மீனை வச்சு
புத்தம் புது தூண்டில்
போட்டது நீயல்லவா

கள்ளதனம் இல்லா
உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நானல்லவா

உலகமே காலடியில் கரைந்ததே ஒர் நொடியில்
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே

சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்

உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

சர்க்கரை நிலவே பெண் நிலவே-யூத்


படம் : யூத்
இசை : மணி சர்மா
பாடியவர் :  ஹரீஸ்ராகவேந்திரா
பாடல் வரி : வைரமுத்து

சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே

மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமிதேன்
கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
அதில் கொள்ளை போனது என் தவறா?
பிரிந்து சென்றது உன் தவறா?
நான் புரிந்து கொண்டது என் தவறா?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா?

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா ?

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய் ?

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்-யூத்

படம் : யூத்
இசை : மணி சர்மா
பாடியவர் :  S.P.பால சுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ.....

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ...

வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி

உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ....

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப் படைத்தானே
அவன் ஆசையைப் போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும்
நான்கு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே

துன்பம் என்ற சிற்பிக்குள் தான் இன்ப என்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ...

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்.


அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே-


படம்: மேட்டுக்குடி
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
பாடல் வரி: வைரமுத்து

அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா

கிளியே கிளியே போ தலைவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளிப்போ
தனிமையில் கண்ணீரை கண்களில் ஏந்திப்போ
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா

வா வா கண்ணா என்றே கெஞ்சிக் கேட்க போ போ
வாசல் பார்த்து வாழும் வாழ்வை சொல்ல போ போ
இளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போ போ
நிதமும் இதயம் ஏங்கும் நிலமை சொல்ல போ போ
கிளியே கிளியே போ போ
காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ
மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்ள போ
நடந்ததை மறந்திட சொல்
உறவினில் கலந்திட சொல்
மடியினில் உறங்கிட சொல்
கண்கள் தேடுது திருமுகம் காண
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா

வந்தேன் என்று கூற வண்ணக்கிளியே போ போ
வாசமல்லிப் பூவை சூட்டச் சொல்லு போ போ
இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போ
உந்தன் கண்கள் பார்த்தால் வெட்கம் கூடும் போ போ
கிளியே கிளியே போ போ

நித்தம் பல நூறு முத்தம் கேட்க போ
சத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போ
விழிகளில் அமுத மழை
இனி ஒரு பிரிவு இல்லை
உறவுகள் முடிவதில்லை
கங்கை வந்தது நெஞ்சினில் பாய

அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா