Friday, December 7, 2012

யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க-வேங்கை


படம் : வேங்கை
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் : திப்பு, ஹரிணி
பாடல் வரி : விவேகா

யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
நானோ தனித்து நடக்க... நீயோ மௌனமாக...
ஒரே ஒரு வார்த்தைக்காக ஒயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடி கூட உன்னோடு தான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாயுவேன்

ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே உள்ளூர கரைகிறதே
யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...

ஒ... சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே
மறுநாள் நெனைச்சு உள்ளம் இப்போ போராடுதே

ஒரே ஒரு வார்த்தைக்கேட்டு என் நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வை புயலா எம்மேல அடிச்சிருசே

உள்ளுக்குள்ள முள்ள வச்சு எதுக்கு நீ சிரிச்ச
காதலெனும் பேர சொல்லி கழுத்த நீ நெரிச்ச
ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இது தான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா

ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே
ஒரே ஒரு துரோகம் தாங்க என் நெஞ்சில் பலமில்லையே
யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
நானோ தனித்து நடக்க... நீயோ மௌனமாக...

No comments:

Post a Comment