Friday, December 14, 2012

கள்வரே கள்வரே-ராவணன்

படம் : ராவணன்
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஸ்ரேயாகோஷல்
பாடல் வரி : வைரமுத்து

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமறிவீரோ.. அருள்புரிவீரோ..

வாரம் தோறும் அழகின்  பாரம் கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை களைவீரோ உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொல்வேனே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே


No comments:

Post a Comment