Sunday, December 2, 2012

நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்-காதல் மன்னன்


படம் : காதல் மன்னன்
இசை : பரத்வாஜ்
பாடியவர் : பரத்வாஜ், அனுபமா
பாடல் வரி : வைரமுத்து

நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்
மனம் தாங்காதே பின் வாங்காதே
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இது மெய் தானே உன்னைக் கேட்கிறேன்
அட என் கண்ணை நானே பார்க்கிறேன்
என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

மாற்றம் மனதிலொரு மாற்றம்
மாற்றம் விழியில் தடுமாற்றம்
தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு

யேஹி.. யேஹி.. யேஹி.. யேஹி..
காதல் அனைவருக்கும் பூவோ
எனக்கு மட்டும் முள்ளோ
முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இது சொல்லாத சோகம் அல்லவா
அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா
தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது
அதை உன் காதில் சொன்னால் நல்லது
மௌனம் தீர்ப்போமா மீண்டும் பார்ப்போமா
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

No comments:

Post a Comment