இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: ரஞ்சித்,நவீன் மாதவ்,சுசித்ரா
பாடல்: நா.முத்துக்குமார்
ஒரு கண்ணில் வேகம் மறு கண்ணில் தாகம்
இவனொரு காட்டு அருவி ஓ... ஓ...
மண்ணோடும் இருப்பான் விண்னோடும் பறப்பான்
இவனொரு வேட்டை குருவி ஓ... ஓ...
எட்டாத மேகம் போல் இவன்
பற்றாத முங்கில் காடு இவன்
முல்லைக்கு தந்த தேர் இவன்
காட்டாளன் தானடா
கட்டாத காற்றை போல் இவன்
குத்தாத கெம்பு மான் இவன்
எட்டாத உயரம் தான் இவன்
கூரான வாளடா
சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
(ஒரு கண்ணில்)
விண்மீன்கள் தூங்கும் போதும் தூங்காத ஆள் இவன்
மண்ணோடு பேசுகின்ற விதை தான் இவன்
கல் தோன்றி மண்ணும் தோன்றா காலத்தின் காடிவன்
காலங்கள் எழுதி வைக்கும் பெயர் தான் இவன்
இவன் குளிர் காலத்தில் வெய்யிலை
ஒரு போர்வையாய் செய்வான்
இவன் வெய்யில் நேரத்தில்
பனியை ஒரு மாலையாய் செய்வான்
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ...
ஓ... ஓ...
சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
சில நேரம் பூக்களோடு ஏதேதோ பேசுவேன்
காட்டானை கூட்டத்தோடு நீர் ஆடுவேன்
பல நேரம் காற்றிலாடும் சிலும்பங்கள் வீசுவானேன்
பறவைக்கும் காயம் வந்தால் போராடுவேன்
நான் பாடம் கற்க காடேல்லாம் கல்லூரி தான்
என் பெயரை சொன்னால் குயில் பாடும் கச்சேரி தான்
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ...
ஓ... ஓ...
சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
No comments:
Post a Comment