Sunday, December 2, 2012

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது-உயிரோடு உயிராக

படம் : உயிரோடு உயிராக
இசை : வித்யாசாகர்
பாடியவர் : ஸ்ரீனிவாஸ், கே.கே
பாடல் : வைரமுத்து

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
I love you... love you... சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இது தான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கைது செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
ரத்தம் எல்லாம் சுட்டு விட்டது
I love you... love you... சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
காதல் என்பது சரியா தவறா
இது தான் எனக்கு தெரியவில்லை
பூவுக்கெல்லாம்....

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்

No comments:

Post a Comment