படம்: மேட்டுக்குடி
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
பாடல் வரி: வைரமுத்து
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
கிளியே கிளியே போ தலைவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளிப்போ
தனிமையில் கண்ணீரை கண்களில் ஏந்திப்போ
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
வா வா கண்ணா என்றே கெஞ்சிக் கேட்க போ போ
வாசல் பார்த்து வாழும் வாழ்வை சொல்ல போ போ
இளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போ போ
நிதமும் இதயம் ஏங்கும் நிலமை சொல்ல போ போ
கிளியே கிளியே போ போ
காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ
மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்ள போ
நடந்ததை மறந்திட சொல்
உறவினில் கலந்திட சொல்
மடியினில் உறங்கிட சொல்
கண்கள் தேடுது திருமுகம் காண
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
வந்தேன் என்று கூற வண்ணக்கிளியே போ போ
வாசமல்லிப் பூவை சூட்டச் சொல்லு போ போ
இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போ
உந்தன் கண்கள் பார்த்தால் வெட்கம் கூடும் போ போ
கிளியே கிளியே போ போ
நித்தம் பல நூறு முத்தம் கேட்க போ
சத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போ
விழிகளில் அமுத மழை
இனி ஒரு பிரிவு இல்லை
உறவுகள் முடிவதில்லை
கங்கை வந்தது நெஞ்சினில் பாய
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
No comments:
Post a Comment