Friday, December 7, 2012
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது-விருமாண்டி
படம் : விருமாண்டி
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கமலஹாசன், ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள்: கமலஹாசன்
உன்ன விட.... இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை
வாக்கபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி
சாதி சனம் எல்லாம் அவன்தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
என்ன விட உன்ன சரிவர புரிஞ்சிக்க
ஆருமில்லை எவளுமில்லை
உன்ன விட…..
என்ன விட……..
அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்து கொடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலபாயுது
நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்ம பார்த்து ஜோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது
என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணாக்கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா….
உன்ன விட…
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கு அது மூடு துணி
உன்ன விட……
உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய
என்ன கேட்குற சாமிய?
நூறு சென்மம் உன் கூட போதுமா?
நூறு சென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய
காத்தா அலைஞ்சாலும்
கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை எவளுமில்லை
வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவான்டி
சாதி சனம் எல்லாம் அவன்தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை
என்னை விட …
உன்னை விட …
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment