Sunday, December 2, 2012

சந்திக்காத கண்களில் இன்பங்கள்-180


படம் : 180
இசை : சரத்
பாடியவர் :  உன்னிமேனன், சித்ரா & S. சௌமியா
பாடல் வரி : மதன் கார்க்கி

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்ய போகிறேன்

அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரை தேடும் மீனாய்

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
யோகம் செய்தேனில்லை..
மோகம் உன் மீதானேன்

கதைகள் கதைகள்
கதைத்துவிட்டு போகாமல்
விதைகள் விதைகள்
விதைத்து விட்டு போவோமே


நி... நி... ரி... க.. ரி...
திசையறியா!..

ரி... நி... ப... க... ரி...
பறவைகளாய்!

நி... நி... ச.... நீ..
ரி............. நான்..
க............. நீல்..
ம............. வான்
ப... த... நி... ச...

வெளியிலே
மிதக்கிறோம்..

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்ய போகிறேன்

போகும் நம் தூரங்கள்..
நீளம் தான் கூடாதோ?

இணையும் முணையம்
இதயம் என்று ஆனாலே
பயணம் முடியும்
பயமும் விட்டுப் போகாதோ..

த... நி... க... ம... த... ரி...
முடிவறியா..

ரி... ப... ம... நி... ப... க... ரி...
அடிவானமாய்..

த... நி... ச............. ஏன்..
ரி............................ ஏன்..
க............................. நீ
ம............................. நான்

ப... த... நி... ச...
தினம் தினம்
தொடர்கிறோம்..

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யபோகிறேன்

அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரை தேடும் மீனாய்

No comments:

Post a Comment