Friday, December 7, 2012

எந்தன் உயிரே எந்தன் உயிரே- உன்னருகே நானிருந்தால்


படம் : உன்னருகே நானிருந்தால்
இசை : தேவா
பாடியவர் :  K.S.சித்ரா, கிருஷ்ணராஜ்
பாடல்வரிகள்: தாமரை

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னை பார்த்தவுடன் என்னை தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்

அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒருபோதும் அலுக்கவில்லை

சின்ன சின்ன கூத்து
நீ செய்யுறதை பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்

வண்ண வண்ண பாதம்
நீ வச்சு வச்சு போகும்
அந்த தரையாய் நான் இருப்பேன்

கவலைகள் மறக்குதே கவிதைகள் பிறக்குதே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

உன்னை சேர்வதுக்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்க வைத்து
அடையாளம் நீ கொடுத்தாய்

உன்னை சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்ச தாலி மின்ன மெட்டி கேலி பண்ண
பக்கத்தில் நான் கிடப்பேன்

கண்ணில் மீனை வச்சு
புத்தம் புது தூண்டில்
போட்டது நீயல்லவா

கள்ளதனம் இல்லா
உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நானல்லவா

உலகமே காலடியில் கரைந்ததே ஒர் நொடியில்
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே

சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்

உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

No comments:

Post a Comment