Monday, September 17, 2012

ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி-அட்டகத்தி


படம் : அட்டகத்தி
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர் : கானா பாலா
வரிகள் : கபிலன்

ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
கண்ணால பாத்தா போதும் நான்தான் கலைமாமணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி

பாம்பாக பல்ல காட்டி கொத்துரா
அவ பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா
பாம்பாக பல்ல காட்டி கொத்துரா
அவ பாவாடை ராட்டினமாக சுத்துரா
ஆடி போனா ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி

வத்திக்குச்சி இடுப்பத்தான் ஆட்டி
நெஞ்சுக்குள்ள அடுப்பத்தான் முட்டி
ஐயோ அம்மா என்னை இவ வாட்டி வதைக்குரா
முட்டை முட்டை முழியதான் காட்டி
முன்ன பின்ன இரட்ட ஜடைய ஆட்டி
மல்லிக பூ வாசமே காட்டி மயக்குரா
தரையில் தூக்கி போட்டால் என் காதல் கொரவ மீனா வாழும்
தரையில் தூக்கி போட்டால் என் காதல் கொரவ மீனா வாழும்
வாயேன்டி கேடி நீயில்லை ஜோடி வால் இல்லா காத்தாடி

ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி

உன்னால நான் வானுக்கு பறந்தேன்
உன்னால நான் நேரத்தில் எழுந்தேன்
உன்னால நான் தூக்கத்தில் கூட சிரிக்கிறேன்
வால் நண்டா இருந்தவன் நானே
கற்கண்டு பார்வை பார்த்தாய்
வாழா நண்டாய் சீறி நின்றேன் உன்னாலே
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்
வாயேண்டி கேடி நீ இல்ல ஜோடி வால் இல்லா காத்தாடி

ஆடி போனா ஆவணி ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி

No comments:

Post a Comment