Saturday, September 29, 2012

Hello Miss இம்சையே ஆனந்தத் தொல்லையே-உன்னாலே உன்னாலே


படம் : உன்னாலே உன்னாலே
பாடல் : Hello Miss
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : G.V. பிரகாஷ், அனுஷ்கா

Hello Miss இம்சையே ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆணே

அங்கிட்டுக் கொஞ்சம் இங்கிட்டுக் கொஞ்சம்
பார்த்தது எல்லாம் பொய்யா
கற்கண்டுப் பேச்சும் பூச்செண்டு வீச்சும்
நம்பிவிடாதே பையா
அம்மான் மகளே அம்மான் மகளே
அன்பாய் அழகாய் வீசும் புயலே
அம்மான் மகளே அம்மான் மகளே
என்னை அசத்தும் ஆழ்வார் குழலே

அன்புக்கு நீங்கள்தான் அஸ்திவாரம்
வம்புக்கும் நீங்கள்தான் அடிவாரம்
நட்பென்று சுற்றுவீர் முதல்வாரம்
சட்டென்று பார்வைகள் இடம் மாறும்
அழகான அலர்ஜி நீங்கள்
ஆனாலும் Energy நீங்கள்
Time என்ன கேட்டால் வழியுற மனமே
ஒருமுறை பார்த்தால் அலையுற தினமே
(Hello Miss)

கண்களால் முதலில் புன்னகைப்போம்
பின்புதான் கண்களில் மழை வடிப்போம்
உங்களை நம்பித்தான் கையை பிடிப்போம்
அய்யய்யோ தப்பென்று கண்கள் துடைப்போம்
உதட்டோடு உதட்டுச்சாயம்
ஆண்நெஞ்சில் ஆறாக்காயம்
கொஞ்சலும் ஏனோ கெஞ்சலும் ஏனோ
நீயோ நானோ மிஞ்சலும் நோ நோ
(Hello Miss)

No comments:

Post a Comment