Sunday, September 23, 2012
யாரோ யாரோ நான் யாரோ-மாற்றான்
படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக்,ப்ரியாஹிமேஷ்
பாடல்: தாமரை
யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?
இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்
இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்
ஹோ ..யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
முதல் முறை இங்கு நீ இன்றி
நடக்கிறேன் தனியாக
இறந்தும் உன் மூச்சு காற்றை
உணர்கிறேன் இதமாக
சரிபாதியில் இரவும் பகலும்
என்கூறியே உலகம் சுழலும்
ஒரு பாதியே பிரிந்தே போனால் என்னாகும் ?
நினைவால் இனி நான் வாழ
நதி போல் இனி நாள் போக
எதனால் இனி ஆறும் ஆறும் என் காயம்
யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
கனாக்களில் வரும் பெண் பின்பம்
திகைக்கிறேன் யார் என்று
முகத்திரை அதை தள்ளி பார்த்தால்
முறைக்கிறாய் நீ நின்று
கனகாம்பர இதழை விரித்து
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும்
நிறமாலையை போல் நெஞ்சம்
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்
யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?
இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்
இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment