Sunday, September 23, 2012
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ-தூறல் நின்னு போச்சு
படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர்: வைரமுத்து
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...
தங்கச் சங்கிலி...
மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி...
காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்
அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்
தங்கச் சங்கிலி...
ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது
லாலா லாலலாலா லால லால லாலா
கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்
ராராரரா ராராரரா ராராரரா ராராரரா
அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு
இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு
தங்கச் சங்கிலி...
மலர்மாலை...
தங்கச் சங்கிலி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment