Saturday, September 29, 2012
அலைபாயுதே கண்ணா-அலைபாயுதே
படம் : அலைபாயுதே
பாடல் : அலைபாயுதே கண்ணா
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : கல்யாணி மேனன், ஹரிணி, நெய்வேலி ராமலஷ்மி
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ
நிலைபெயறாது சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே
திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ (2)
குழலூதிடும்பொழுது ஆடிகும் குழைகள்போலவே மனது வேதனைமிகவொடு
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment