Sunday, September 23, 2012

ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது-நான் அடிமை இல்லை


படம் : நான் அடிமை இல்லை 
இசை : விஜய் ஆனந்த்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜானகி

ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
ஒரு ஜீவன் தான்..........

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான்..........

காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நாந்தானைய்யா நீலாம்பரி
தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்
ஒரு ஜீவன் தான்..........




No comments:

Post a Comment