Wednesday, September 12, 2012
கொஞ்சநாள் பொறு தலைவா-ஆசை
படம்: ஆசை
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வாலி
கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா
அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்
கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா
நேத்துக்கூட தூக்கத்தில பார்த்தேனந்தப் பூங்கொடிய
தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்துவெச்ச மால போல
வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா அவ
ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா
அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்
கொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா
பச்சைதாவணி பறக்க அங்கு தன்னையே இவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலையே மாமன் கண்ணு மூடல்லையே
என்னோடுதான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
காட்டாயம் என் காதல் ஆட்சி கைகொடுப்பா தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்துவந்து போனா அவ
சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேனா
என்னுடைய காதலியே ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
வேரொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்
கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment