Wednesday, September 12, 2012

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும்-ஆசை


படம்: ஆசை
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே

சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்
மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக்கொண்ட போதும்
இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
இது மாதங்கள் நாட்கள் செல்ல
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் புது வித்தை காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டு தீண்டுவதா
மாமன் காரன் தானே மால போட நானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்

மீனம்மா மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்
அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்

அன்று காதல் பண்ணியது உந்தன் கண்ணம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது
அன்று பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும்
உனை கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு

மீனம்மா உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு
அம்மம்மா உன்னைக் காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு

உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு
என்னென்னவோ சங்கதிகள் சொல்லிவிட்டு போக
உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்து போட
பின்பு மோகனப் பாட்டெடுத்தோம் முழு மூச்சுடன் காதலித்தோம்

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே



No comments:

Post a Comment