படம்: 3
இசை: அருனித்
பாடியவர்கள்: தனுஷ், ஸ்ருதி ஹாசன்
பாடலாசிரியர்: தனுஷ்
கண்ணழகா... காலழகா...
பொன் அழகா... பெண் அழகா...
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா
உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி
எங்கேயோ பார்க்கிறாய் என்னெனென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்
உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன் உயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்
இதழும் இதழும் இணையட்டுமே புதிதாய் படிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா இது போல் எதுவும் இல்லை
உனக்குள் பார்க்கவா உள்ளதை கேட்கவா
என் உயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா
கண்ணழகே... பேரழகே...
பெண்ணழகே... என் அழகே...
உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
No comments:
Post a Comment