Friday, October 26, 2012

பூ மலர்ந்தது பூமிக்குதானே-அமராவதி


படம்: அமராவதி
இசை: பால பாரதி
பாடியவர்: மின்மினி

பூ மலர்ந்தது பூமிக்குதானே
நாம் பிறந்தது வாழ்ந்திடத்தானே
பாலை வனத்திலும் சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்
என்ன தயக்கம் மனமே
(பூ மலர்ந்தது...)

முள்ளிலும் பூவொன்று இயற்கை அன்று கொடுத்தது
பூவிலே முள்ளென்று மனித ஜாதி மறந்தது
வேர்கள் கொஞ்சம் ஆசை பட்டால் பாறையிலும் பாதையுண்டு
வெற்றி பெற ஆசைப்பட்டால் விண்ணில் ஒரு வேறு உண்டு
துயரமென்பது சுகத்தின் தொடக்கமே
எரிக்கும் தீயை செறிக்கும் போது
சுகம் சுகம் சுபமே...
(பூ மலர்ந்தது...)

கண்களே கண்களே கனவு காணத்தடையில்லை
நெஞ்சமே நினைவு ஒன்றும் சுமையில்லை
உள்ளம் மட்டும் ஓங்கி நின்றால் ஊனம் ஒரு பாவமில்லை
உன்னைச்சுற்றி வாழ்க்கையுண்டு ஓய்வுகொள்ள நேரமில்லை
கவலை என்பது மனதின் ஊனமே,
புதிய வாழ்க்கை தொடங்கும்போது
பூமி கைகள் தட்டுமே
(பூ மலர்ந்தது...)

No comments:

Post a Comment