Friday, October 26, 2012
நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே-அரவான்
படம் : அரவான்
இசை : கார்த்திக்
பாடியவர் : விஜய் பிரகாஷ், ஹரிணி
வரிகள்: நா. முத்துக்குமார்
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறைஞ்சி மறைஞ்சி போகுதே
நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறைஞ்சி மறைஞ்சி போகுதே
இன்ப நிலா போகுதே இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவை நான் தழுவ தேன் நிலவா மாறுதே
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சி மறைஞ்சி போகுதே
மாலை வேளையில் பூக்கும் பூவையே
மனதில் பொக்கிஷத்தை வைக்கும் பேழையே
மெளன கூட்டினை திறக்கும் சாவியே
கனவை உருட்டி விடும் கள்ளச் சோழியே
மஞ்சம் வந்த மதியே
மஞ்சம் வந்த மதியே என்னுயிரின் விதியே
விரகத்தை கூட்டும் விழிகளின் சதியே
சிறகுள்ள சிலையே சிற்றின்ப நதியே
நிலா நிலா மோக நிலா
மஞ்சள் நிலா போகுதே
மோக நிலா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சி மறைஞ்சி போகுதே
மூன்று ஜாமமும் மயங்கும் வேளையில்
மருகி மருகி நிலா என்ன பேசுதோ
காதல் கண்ணிலே வெட்கம் நெஞ்சிலே
இருந்தும் பார்வையிலே ஜாடை பேசுதோ
மங்கை உடல் நிலாவா
மங்கை உடல் நிலாவாய் மௌனத்தில் தேய
பொங்கி வரும் ஒலியாய் அங்கம் அலை பாய
முழு மதியோ காய மூச்சுக் குழல் தீய
நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறைஞ்சி மறைஞ்சி போகுதே
இன்ப நிலா போகுதே இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவ நான் தழுவ தேன் நிலவா மாறுதே
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment