Monday, October 1, 2012

சொல்லத்தான் நினைக்கிறேன்- காதல் சுகமானது


படம் : காதல் சுகமானது
இசை : சிவா
பாடியவர் :  K.S. சித்ரா
பாடல் வரி : நா.முத்துகுமார்

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது
அந்தி வெயில் கொலைத்து செய்த மருதாணி போல
வெட்கங்கள் வர வைக்கிறாய்
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது
காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

சின்ன பூவொன்று பாறையை தாங்குமா
உன்னை சேராமல் என்  விழி  தூங்குமா
தனிமை உயிரை வதைக்கின்றது

கண்ணில் தீ வைத்து போனது நியாயமா
என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா
கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது

தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலானேன்
துயரங்கள் கூட அட சுவையாகுது
இந்த வாழ்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது
காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா
நீயும் ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல் சருகானதே

ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில்
வந்து மோதிய இருந்த மேகமே
தேகம் தேயும் நிலவானதே

காற்று மலை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்ச்சிலையை போலே நெஞ்சு அசையாது
சுண்டு விரலாய் தொட்டு இழுத்தாய்
ஏன் குடை சாய்ந்தது
காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது
அந்தி வெயில் கொலைத்து செய்த மருதாணி போல
வெட்கங்கள் வர வைக்கிறாய்
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது
காதல் சுகமானது............

No comments:

Post a Comment