Thursday, October 25, 2012
அவள் வருவாளா அவள் வருவாளா-நேருக்கு நேர்
படம். நேருக்கு நேர்
பாடியோர்: ஹரிஹரன், ஷாகுல் ஹமீது
இசை:தேவா
வரிகள்: வைரமுத்து
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
(அவள்)
கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸ்மூத்தா செல்லும் ஃப்ளாபி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்டு அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா
(அவள்)
ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸ்மூத்தா செல்லும் ஃப்ளாபி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்டு அவள்
அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment