Friday, October 26, 2012
நாட்டுல நம்ம வீட்டுல-முகமூடி
படம் : முகமூடி
இசை : கே
பாடியவர் : மிஷ்கின்
வரிகள்: மிஷ்கின்
நாட்டுல நம்ம வீட்டுல
நாம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள்ள
காட்டுல நம்ம ரோட்டுல
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மாப்பிள்ள
ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா
இந்த சாராயம் மருந்தாக மாறுது
ஒரு சொந்தம் பெத்தா ஒரு பந்தம் செத்தா
இந்த கூடாரம் கோயிலா ஆகுது
போதை இல்லாத சந்தோஷமா
ராஜா இல்லாத சங்கீதமா
காதல் கல்யாணம் நடந்தா
ஜாலி ஜாலிதான்
பாரில் கொண்டாட்டம்தான்
மோதல் உண்டாகி பிரிஞ்சா
காலி காலிதான்
வீடு திண்டாட்டம் தான்
விடிஞ்சா வாழ்க்கை சோகம்
இத குடிச்சா மரத்துப் போகும்
சுகவாசிக்கும் பரதேசிக்கும்
இதுதாண்டா ரைட்டு தர்பாரு
இங்க வந்தா எல்லாருமே
புத்தன போலாகலாம்
நூறு மில்லி ஊத்திக்கிட்டு
சித்தன போல் பேசலாம்
தூக்கம் இல்லாமப் போனா
குவாட்டரு டாக்டரு தான்
வாட்டரு இல்லாம அடிச்சா தில்லு
ஆட்டோ மீட்டரு தான்
மனுசன் மனசு மோசம்
இத அடிச்சா கலையும் வேசம்
சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும்
இதுதான்டா திருவாரூர் தேரு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment