Thursday, October 11, 2012

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே-ஆதிபகவன்


படம்: ஆதிபகவன்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: மதுஸ்ரீ
வரிகள்: சிநேகன்

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எது வரை இதன் எல்லை
எனக்கொரு பதில் சொல்வாயடா

உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடி பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே

உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
உந்தன் அணைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசு தான்
கொஞ்சம் நெருக்கம் கொஞ்சம் இருக்கம்
ரெண்டும் பெண்மை கேட்கம் பரிசு தான்

ஆசை அணைத்தும் உன்னை நோக்கியே போக
ஓசை இன்றியே வார்த்தை அணைத்தும் சாக
தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததாய்
தூரம் குறைகையில் உணர்கிறேன்
எந்தன் அறைகளில் அடை திரைகளை
விட்டு விலகி நான் மலர்கிறேன்
(உனக்கென)

No comments:

Post a Comment