Thursday, October 11, 2012

ஒரு துளி விஷம் காதல் உயிரில் கலக்குதே-ஆதிபகவன்


படம்: ஆதிபகவன்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: ஷரிப் சபரி,ஸ்ரேயா கோஷல்
வரிகள்: சிநேகன்

ஒரு துளி விஷம் காதல் உயிரில் கலக்குதே
அரைநெடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே... மயக்குதே...

வெல்லுதே வெல்லுதே முரண்களை வெல்லுதே
கொள்ளுதே கொள்ளுதே தவணையில் கொள்ளுதே
உன்னை மறுக்க தொலைந்து பார்த்தேன்
அட எந்தன் நெஞ்சம் வர மறுக்குதே
வரைய வரைய அழித்து பார்த்தேன்
அது மீண்டும் உன்னை மனம் வரையுதே
மௌனத்தாலே பாசையிலே ஆசையாலே அவஸ்தையாலே
காதல் தேடி உயிர் உதருதே
(ஒரு துளி)

மரணம் தேடும் போதும் மயக்கம் கொண்டு
ஜீவன் வாழ்வதேன், வாழ்வதேன்
உறவுக்காக ஏங்கி மனுஷ பூவும்
ஒன்று சாவதேன், சாவதேன்

தடை விதிக்காதே மனம் மண்டி இடும் போதும்
உயிர் தூண்டுபடும் போதும் உன்னை மறுக்காதே

மறு முறை இனி பிறப்பதா உன் அருகிலே தனித்து இருப்பதா
காதலை இங்கு மறுப்பதா இல்லை வெறுப்பதா
ஒரு விடைகொடு விடைகொடு இதயத்தில்

இதயத்தில் இடம்கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்

காதல் என்னும் தீயில் கருக கூட - பெண்மை
துணிந்ததே துணிந்ததே
அமில நதியை கூட அமுதம் என்று என்னி
நீந்துதே நீந்துதே

வலி தெரியாதே விழி பதைக்கிற போதும்
உடல் தித்திக்கற போதும் விலை கிடையாதே

உடைகிறேன் நான் உடைகிறேன் - அட
உன் வசம் சரண் அடைகிறேன்
கரைகிறேன் மெல்ல உறைகிறேன்
உன்னில் இணைகிறேன் முடிவேடு முடிவேடு
இதயத்தில்

இதயத்தில் இடம் கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்
(ஒரு துளி)

No comments:

Post a Comment