Thursday, October 25, 2012

ஓராயிரம் யானை கொன்றால் பரணி-நந்தா


படம் : நந்தா
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : உன்னிகிருஷ்ணன்
வரிகள் : நா.முத்துக்குமார்

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
தாய் வயிற்றில் தலை கீழாக
உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே
தூண் எல்லாம் இனி தூளாக

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

குழலோசை இல்லை குயிலோசை இல்லை
இடியோசை ஒன்றே அறிந்தாயே
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்
ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதும் இல்லை
வாழ்ந்தாய் தீயின் மடியில்
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

No comments:

Post a Comment