Friday, October 26, 2012

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே-அரவான்


படம் : அரவான்
இசை : கார்த்திக்
பாடியவர்கள் : கிருஷ்ணராஜ், பெரிய கருப்புத்தேவர், ரீட்டா, ப்ரியா, முகேஷ்
வரிகள் : விவேகா

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
ராத்திரி திங்க போறோம் சுடு நெல்லுச் சோறே

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
ராத்திரி திங்க போறோம் சுடு நெல்லுச் சோறே
தேரே தேரே கர்ணன் தேரே
காஞ்சா ஊருக்குள்ளே கர்ணராசன் தேரே

ஆடு கோழி வெட்டாம அய்யனார கெஞ்சமா
நூறு கோட்டை நெல்லு இப்போ ஊருக்குள பாருடா

ஆடு கோழி வெட்டாம அய்யனார கெஞ்சமா
நூறு கோட்டை நெல்லு இப்போ ஊருக்குள பாருடா

மூனு மாசம் முழுகாத மொக்கசாமி பொண்டாட்டி
நெல்லுச் சோறா தின்னுப்புட்டு நிறமா புள்ள பெப்பாடா

மக்கட் மனசு குளிர்ந்திருச்சு இந்த வேளை தான்
வெட்கை காலம் போச்சு இனி மாரி காலம் தான்

ஆடி வரான் மாயாண்டி அழுக்கு பூச்சாண்டி
ஓடி வந்தா அவசரத் கோவணத்தை விட்டாண்டி

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
ராத்திரி திங்க போறோம் சுடு நெல்லுச் சோறே
தேரே தேரே கர்ணன் தேரே
காஞ்ச ஊருக்குள்ளே கர்ணராசன் தேரே

பாதம் வச்சி பூமி மேல நடந்திட மாட்டோம்
பச்ச புள்ள இருக்கிற வீடு புக மாட்டோம்
வீடு புக மாட்டோம் வீடு புக மாட்டோம்
நாங்க காத்தடிக்கும் திக்குல கண்ணு போட மாட்டோம்
கண்டுக்கிட தடயம் ஒன்னும் வைக்க மாட்டோம்
களவாண்ட வீட்டுக்குள ரத்தம் பாக்க மாட்டோம்
அட கன்னி பொண்ணு தூங்கினாலும் உத்து பாக்க மாட்டோம்

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
ராத்திரி திங்க போறோம் சுடு நெல்லுச் சோறே
தேரே தேரே கர்ணன் தேரே
காஞ்சா ஊருக்குள்ளே கர்ணராசன் பேரே

யாரோ யாரோ யாரோ யாரோ யாரோ
கூரைய பிரிச்சுட்டு கொட்டியது யாரோ
யாரோ யாரோ யாரோ யாரோ யாரோ
குறைய தீர்த்தது வீர அய்யனாரோ

கருப்பா
காணிடறாம கனவு குலையாமல்
ஆந்தை கத்தாம அறுவா படாமல்
களவு செழிக்கனும் கருப்பா

கண்ணு சொருகற நேரம் சேர்ந்து களவுக்கு போறோம்
என்ன அங்க நடந்தாலும் எங்க குடும்பங்க பாவம்

ஒரு மயித்துக்கும் இல்ல வயித்துக்கு தானே
இவ்வளவு போரிடுறோம் நாங்க

அட செத்து செத்து வாழும் எங்களோட வாழ்க்க
வாழ்க்க இல்ல வாழ்க்க இல்லையே

குலச் சாமி மறந்தாலும் இந்த பூமி மறக்காது

நாடு சுத்தி வந்தாலும் சொந்த மண்ணில் சாஞ்சா தான்
பொங்க வச்ச பான போல எங்க மனம் ஆகுமே

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
உசுரல ரத்ததுல கலந்திட்ட ஊரே
ஊரே ஊரே எங்க பாட்டான் ஊரே
உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
உசுரல ரத்ததுல கலந்திட்ட ஊரே
ஊரே ஊரே எங்க பாட்டான் ஊரே
உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே
உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே
உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே

உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே

No comments:

Post a Comment