Friday, October 26, 2012

உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன-அமராவதி


படம்: அமராவதி
இசை: பால பாரதி
பாடியவர்: அஷோக்

உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே
ஓடும் நதியெல்லாம் கடலோடு உடலெல்லாம் மண்ணோடு
உயிர் போகும் இடமெங்கே மனமே
இந்த வாழ்க்கை வாடிக்கை இது வான வேடிக்கை
இன்பம் தேடி வாழும் ஜீவன் எல்லாம்
தவிக்குது துடிக்கிது
(உடல் என்ன )

காதலை பாடாமல் காவியம் இங்கில்லை
ஆனாலும் காதல் தான் சாபம்
ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே
யாரோடு அவனுக்கு கோபம்
இது சாமி கோபமோ இல்லை பூமி சாபமோ
ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதையெல்லாம் கண்ணீரின் வரலாறு
உறவுக்கும் உரிமைக்கும் உத்தம் .... ஓஓ ...
உலகத்தில் அதுதானே சத்தம் .....
(உடல் என்ன )

திரனனா திர நானா
திரநான திரநான திரன ....

வானத்தில் நீ நின்று பூமியை நீ பாரு
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள் காட்சியில் பேதங்கள்
மனிதன்தான் செய்கின்ற தொல்லை
இது பூவின் தோட்டமா இல்லை முள்ளின் கூட்டமா
முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல
மரணத்தை போல் இங்கே வேறேதும் மெய்யல்ல
நான் போகும் வழி கண்டு சொல்ல .... ஓஓ ...
நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல .....
(உடல் என்ன )

No comments:

Post a Comment