Friday, October 26, 2012

பூசாரி பட்டி களவு-அரவான்


படம் : அரவான்
இசை : கார்த்திக்
பாடியவர் : மனோ, பசுபதி, கோட்டைச்சாமி, ராகுல் நம்பியார், கார்த்திக்கேயன், விஜய் நரேன், மாலதி, ஹரிஷ்
வரிகள்: நா. முத்துக்குமார்

பூசாரி பட்டி களவு
கோடாங்கி பட்டி களவு
கொலைகாரன் பட்டி  களவு
கோடாலி பட்டி களவு
பேய்க்காரன் பட்டி களவு
காநாடு காத்தான் களவு
நாட்டமை பட்டி

என் சாமி பேரு கருப்பு
எம்புட்டு பேரு நெருப்பு
கன்னக்கோல் எங்க துருப்பு
களவுக்கு நாங்க பொறுப்பு
கவுதாரி போல பதுங்கி
வவ்வால போல தப்பிச்சி
இங்கிட்டு எல்லாம் மறைஞ்சி
காத்தடிச்சு கெளம்புடா

சாராயத்த ஊத்தி தாரேன்
ரத்த துளி நானும் தாரேன்
போற வழி காட்டு வழி
பாதை எல்லாம் கூட வாடி
ஜக்கம்மா ஜக்கம்மா

மலையா தாண்டி போகும் போதும்
மறுவ தாண்டி போகும் போதும்
மனசுக்குள்ள ரொம்ப தாடி

களவு களவு களவு களவு களவு களவு
களவு களவு களவு களவு களவு களவு

இம்புட்டு களவாணி பயலுகள பிடிங்களேன்
ஈன எடுவட்ட பயலுகள புடிங்க புடிங்க புடிங்க

போட்ட களவுக்கும்
பேட்டை களவுக்கும்
உடும்ப பிடிச்சாச்சு

ஆட்டுக் களவுக்கும்
மாட்டுக் களவுக்கும்
சலங்கைய அவுத்தாச்சு

கடவுளும் நம்ம போல களவுக்கு வந்தவன்
கன்னதாசாச்சு
களவுல மாட்டிகிட்டு கழுத்த இழந்தவன்
கம்புக்கு பேராச்சு

கொண்டி கம்போடு தயாளு நம்மோடு
கடத்து ராசா களவுக்கு வா

டேய்
எடு எடு எடு முந்திக்கோ
புடி புடி புடி கொண்டி கம்பு
தொடு தொடு கண்ணா வாசல் தோடு
வேட்டைக்கு நீ  கெளம்பு

இது களவுக்கு மந்திரமே

என் சாமி பேரு கருப்பு
எம்புட்டு பேரு நெருப்பு
கன்னக்கோல் எங்க துருப்பு
களவுக்கு நாங்க
கவுதாரி போல பதுங்கு
வவ்வால போல தப்பிச்சி
இங்கிட்டு எல்லாம் மறைஞ்சி
காத்தடிச்சு கெளம்புடா

No comments:

Post a Comment