Friday, October 26, 2012
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே-காதல் மன்னன்
படம்: காதல் மன்னன்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....
(உன்னை........)
ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ
(உன்னை..........)
நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ
(உன்னை...........)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment