Friday, October 26, 2012
இன்னிசை அளபெடையே அமுதே-வரலாறு
படம்: வரலாறு
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: நரேஷ் ஐயர், மஹதி
அச்சில் வார்த்த பதுமையும் நீயே
தச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே
தச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இருக்கையை விடுத்து இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க
சதுரிட வா அமுதே அமுதே சதுரிட வா அமுதே
(அச்சில் வார்த்த பதுமையும் )
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்
உன் அழகால் தூண்டிவிடு என் அழகை ஆண்டுவிடு
முத்தத்தால் கொன்றுவிடு மூச்சு மட்டும் வாழவிடு
(இன்னிசை அளபெடையே)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment