Friday, October 26, 2012
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா-அமராவதி
படம்:- அமராவதி
இசை:- பாலபாரதி
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
செல்லக்கிளி என்னை குளித்திட்ட வேண்டும்
சேலை தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லுச்சிலை போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்து தலை வாற வேண்டும்
நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பறிமார வேண்டும்
என் இமை உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுவரம் பாடவேண்டும்
உன்னில் என்னைத்தேட வேண்டும்
(புத்தம் புது மலரே)
கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக்கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்
கையோடு இதம் காண வேண்டும்
தண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்
(புத்தம் புது மலரே)
பொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment