Showing posts with label அசல். Show all posts
Showing posts with label அசல். Show all posts

Thursday, September 13, 2012

அதிரி புதிரி பண்ணிக்கடா-அசல்


படம்: அசல்
பாடியவர்கள்: ஜனனி, முகேஷ்
இசை: பரத்வாஜ்
பாடல்: வைரமுத்து

அழைச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னைதான்
எப்போதுமே ஒன்னா நீ என்னைதான்

அதிரி புதிரி பண்ணிக்கடா
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தொடாததும் தொட்டுக்கடா
கண்களை தொட்டதும் கற்பு பதறுதே
உன் கையால் நீ தொட்டாய்
கன்னி மொட்டுக்குள்ள
டொட்டொயிங் டொட்டொயிங்

அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிரி எகிரி விழட்டுமா
பின் அழகை பின்னட்டுமா
பிச்சி பிச்சி தின்னட்டுமா
காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டாய்
என் முதுகு தண்டுக்குள்ளே
டொட்டொயிங் டொட்டொயிங்

ரெண்டு பேரும் குடிக்கணுமே ரெட்டை இதழ் தீம்பால்
எத்தனை நாள் திண்ண இட்லி வடை சாம்பார்

முக்கனியில் ரெண்டு கனி முட்டி திங்க ஆசை
அப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோசை

பணைய கைதிய போல என்னைய ஆட்டி படைக்குற
பங்கு சந்தைய போல என்னை ஏத்தி இறக்குற

ஹேய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற
கத்தி கண்ணு வத்தி வெச்ச என் உச்சி மண்டையில
டொட்டொயிங், டொட்டொயிங்

டொட்டொயிங்
டொட்டொயிங்
டொட்டொயிங்

பச்ச புள்ள போல் இருப்பா லட்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வெச்சதென்ன முந்திரிக்கா தோப்பா

கத்திரிக்கா மூட்ட போல கட்டழகு சீப்பா
உரம் போட்டு வளர்த்ததப்பா பொத்திகிட்டுப் போப்பா

ஏப்ரல் மாத ஏரி போல ஹார்ட்டு இறங்குதே
தங்கம் வெலைய போல சும்மா சத்து ஏறுதே

புத்தியில் எப்பவும் நண்டு ஊருதே
பச்சு பச்சு இச்சு வெச்சா நரம்பு மண்டலத்தில்
டொட்டொயிங் டொட்டொயிங்

அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிரி எகிரி விழட்டுமா
பின் அழகை பின்னட்டுமா
பிச்சி பிச்சி தின்னட்டுமா
காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டாய்
என் முதுகு தண்டுக்குள்ளே
டொட்டொயிங் டொட்டொயிங்
டொட்டொயிங் டொட்டொயிங்
டொட்...டொ...யிங்...




எங்கே எங்கே மனிதன் எங்கே-அசல்



படம்: அசல்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
இசை: பரத்வாஜ்
பாட ல்: வைரமுத்து

எங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடையில் மிருகம் இங்கே
ஓநாய் உள்ளம் நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே
வலிகளால் அந்த வரங்களால்
வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்

காதல் என்றால் கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
உறவும் நட்பும் பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே நம்பும் நம்பும்
பொய்களின் கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி

ஜனனம் உண்மை மரணம் உண்மை
தந்தானே கடவுள் தந்தானே
அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யாய்
செய்தானே மனிதன் செய்தானே

கடுகை பிளந்து காணும் போது
வானம் இருந்திடக் கண்டேன்
நான் உறவை திறந்து காணும் போது
உலகம் தெரிந்திடக் கண்டேன்
என் உடலைத் தொட்டாய் நான் மனிதன் ஆனேன்
என் உயிரைத் தொட்டால்... நான் கடவுள் ஆவேன்

இங்கே இங்கே மனிதன் இங்கே
இமயம் தாங்கும் இதயம் இங்கே
காடும் மரமும் என் காலில் பூக்கள்
குன்றும் மலையும் கூலாங்கற்கள்
சம்பலில் உயிர்க்கும் பறவைபோல்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்