Showing posts with label 3. Show all posts
Showing posts with label 3. Show all posts

Monday, October 1, 2012

கண்ணழகா காலழகா-3


படம்: 3
இசை: அருனித்
பாடியவர்கள்: தனுஷ், ஸ்ருதி ஹாசன்
பாடலாசிரியர்: தனுஷ்

கண்ணழகா... காலழகா...
பொன் அழகா... பெண் அழகா...
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

எங்கேயோ பார்க்கிறாய் என்னெனென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்

உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன் உயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்

இதழும் இதழும் இணையட்டுமே புதிதாய் படிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா இது போல் எதுவும் இல்லை

உனக்குள் பார்க்கவா உள்ளதை கேட்கவா
என் உயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா

கண்ணழகே... பேரழகே...
பெண்ணழகே... என் அழகே...
உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்-3


படம்: 3
இசை: அருனித்
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா மேனன்
பாடலாசிரியர்: தனுஷ்

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
ம்... ம்... கேட்டாலும் வருமா கேட்காத வரமா

இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
ம்... ம்... கேட்டாலும் வருமா கேக்காத வரமா

நிழல் தரும்… இவள் பார்வை…
வழி எங்கும்… இனி தேவை…
உயிரே… உயிரே… உயிர் நீ தான் என்றால்…
உடனே… வருவாய்… உடல் சாகும் முன்னால்…

அனலின்றி… குளிர் வீசும்…
இது எந்தன்… சிறை வாசம்

இதில் நீ மட்டும் வேண்டும்… பெண்ணே…
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
ம்... ம்... கேட்டாலும் வருமா கேட்காத வரமா

இது போதுமா… இதில் அவசரமா…
இன்னும் வேண்டுமா… அதில் நிறைந்திடுமா…
நாம் பார்த்த நாள்… நம் வசம் வருமா…
உயிர் தாங்குமா....

Thursday, September 20, 2012

போ நீ போ போ நீ போ-3


படம் : 3
பாடியவர் : அனிருத், மோகித் சவுகான்
இசை : அனிருத்
வரிகள் : தனுஷ்

போ நீ போ போ நீ போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ

உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால் வாழ்வேனே பெண்ணே

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

போ நீ போ போ நீ போ
என் காதல் புரியலயா உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ