Showing posts with label G.V. பிரகாஷ். Show all posts
Showing posts with label G.V. பிரகாஷ். Show all posts

Tuesday, October 22, 2013

தமிழ் பசங்க

படம் : தலைவா
இசை : G.V.பிரகாஷ்
பாடல் : நா.முத்துக்குமார்
பாடியோர் : பென்னிதயாள்,ஷீசே  

ததததத தமிழா...
தமிழா...

பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதிரும் தருனம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும்பொழுது எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
தா... மிழா... பா... சாங்கா...

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஓள ஃ
கசட தபர யரல வளழ
ஙஞந னமண தமிழா நான்

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க
தமிழ் பசங்க

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு
சென்னை கானா பாட்டு நாங்க ரசிப்போம்
காஞ்சி பட்டு சேல பசு மாடு சுத்தும் சாலை
நாத்து நடும் வேளை பாட்டு படிப்போம்

எங்கள் மயிலாட்டமும் கெஞ்சம் ஒயிலாட்டமும்
கேவில் கரகாட்டமும் அதிரும்
எங்கள் தெரு கூத்திலும்
எங்கள் எசபாட்டிலும்
மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம்
நாங்க தமிழ் பசங்க
(அ ஆ இ ஈ)

பொஷ் மி சன் லைக்க ரெண்டு காலு குதிர
ஆலம் தெரியாமல் மச்சி கால நீயும் விடுர
ஆட்டம் போட போதும் நாம தங்கமான பசங்க
போட்டினு வாந்தா கிழிக்கும் தமிழ் பசங்க
புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிரா
என் ஒவ்வோரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்மபோல செல்லபுள்ள யாருடா

பூப்போல் இட்லி தோச அட முருகி வச்ச மீச
கூழா குடிக்க ஆச பச்ச தமிழன்
வெலுத்து வச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி
கபடி கபடி போட்டி வீர தமிழன்
கண்ணாமூச்சாடுவோம் ஜல்லிகட்டோடுவோம்
வெற்றி கொடி நாட்டுவோம் தமிழா
சங்க தமிழ் பாட்டிலும் திருக்குரல் ஏட்டிலும்
முக்குலித்து மூழ்கிவிட வா வா வா
(அ ஆ இ ஈ)

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க

Friday, November 30, 2012

காதல் நெருப்பின் நடனம்-வெயில்


திரைப்படம்: வெயில்
பாடியவர்கள் : சின்மயி , கார்த்திக், நிதிஷ்
இசை: G.V.பிரகாஷ்
வரிகள் : நா.முத்துக்குமார்

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

கனவுகள் பூக்கின்ற செடி என
கண்கள் மாறுதுன்னாலே
வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம் வழியிதுன்னாலே

உனது வளையாடும் அழகான
கை சீண்டவே
தலையில் இலை ஒன்று விழ வேண்டுமே

குடைகள் இல்லாத நேரத்து
மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே
உனது முத்ததில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சோடி நதி பாயுதே

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயனம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

வானத்தின் மறுபுறம்
பறவையாய் நீயும் நானும் போவோமே
பூமியின் அடிப்புறம்
வேர்களாய் நீண்ட தூரம் போவோமே

கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே
நூறு நூற்றாண்டு காணாத பூவாசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே
என்உள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

பிறை தேடும் இரவிலே உயிரே-மயக்கம் என்ன


திரைப்படம் : மயக்கம் என்ன
இசை : G.V. பிரகாஷ்,
பாடியவர்கள் :G.V. பிரகாஷ்,சைந்தவி
வரிகள் : தனுஷ்

பிறை தேடும் இரவிலே உயிரே
எtதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
(பிறை)

இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
(பிறை)

அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
(பிறை)

விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதைக் காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொல்லும் இந்த பூமியில்,
நீ வரம் தரும் இதம்.

நான் சொன்னதும் மழை வந்துச்சா-மயக்கம் என்ன




படம்: மயக்கம் என்ன
சை: G.V பிரகாஷ்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,சைந்தவி
வரிகள்: செல்வராகவன்

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன தூக்கி போக தான் வருவேனுன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா
கரு நாக்கு கார புள்ள
கருப்பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி
ஓஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

ஆடு ... ஆடு ...

ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கன்னி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ணை மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவுல தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்
நீ வர்றியாடி
கருவாட்டு கொழம்பா ஆ ஆ... நீயும்... ருசி ஏத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது.

ஓட ஓட ஓட தூரம் கொறயல- மயக்கம் என்ன


படம்: மயக்கம் என்ன
இசை: G.V பிரகாஷ்
பாடியவர்: தனுஷ்
வரிகள்: செல்வராகவன்,தனுஷ்

ஓட ஓட ஓட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல

ஃப்ரியா சுத்தும் போது ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்சு கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது

கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கர் ஆயிட்டேன்
குண்டு சட்டியில
ரெண்டு குதிர வண்டி ஓட்டுறேன்

ஒரு பீச்சுல தனியா அலைஞ்சேன் அலைஞ்சேன்
நடு ரோட்டுல அழுதேன் புரண்டேன் கிழிஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல கழுதை நான் இல்லையே
ஜாணும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே
கிராக்கா மாறிட்டேன் ஜோக்கர் ஆயிட்டேன்
பீயூசு போன பின் பல்புக்கான சுவிட்ச்ச தேடுறேன்

ஓட ஓட ஓட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல

:ஃப்ரியா சுத்தும் போது ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

நடு ராத்திரி எழுந்தேன் படுத்தேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்

மீனா நீந்தறேன் நீந்தறேன்
கடலும் சேரலையே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் ஏறலையே

கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கர் ஆயிட்டேன்
கேள்வி கேட்டு கேட்டு
கேள்விகுறி போல நிக்குறேன்

ஓட ஓட ஓட தூரம் கொறயல
தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல
ஃப்ரியா சுத்தும் போது
ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப
ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்சு கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது

காதல் எங் காதல் அது கண்ணீருல


படம்: மயக்கம் என்ன
இசை: G.V பிரகாஷ்
பாடியவர்கள்: தனுஷ், செல்வராகவன்
வரிகள்: தனுஷ்

காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல

ஏ மச்சி உட்ரா
ஏய்என்னை பாட உடுடா
நா பாடியே தீருவேன்
சரி பாடித் தொல

காதல் எங் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாழான நெஞ்சு இப்ப வெந்னீருல

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல
சூட்டுல எங்குறேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ வொர்த்தே இல்ல

தேனூறுன நெஞ்சுக்குள்ள
கல்லூறுதே என்ன சொல்ல

ஒ படகிருக்கு வலை இருக்கு
கடலுக்குள்ள மீனா இல்ல

வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல

மான் விழி தேன் மொழி
என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி

ப்ரெண்ட்சு கூடத்தான் இருக்கணும் மாமா
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட
உன்னத் தவிர எனக்கொண்ணும் இல்ல

ஒ... கனவிருக்கு கலரே இல்ல
படம் பாக்கறேன் கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல
உறவிருக்கு பெயரே இல்ல

வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி...

போதும் மச்சான்

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

குட் நைட்...குட் நைட்...
ஆங்... ஓகே
ஏய்...
குட் நைட்... தேங் யு சோ மச்... மச்சி

என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே-மயக்கம் என்ன


படம்: மயக்கம் என்ன
இசை: G.V பிரகாஷ்
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
வரிகள்: செல்வராகவன்

என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே
காணாத துயரம் கண்ணிலே
ஓயாத சலனம் நெஞ்சிலே
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்

வாழ்கையின் பொருள்தான் என்ன
வாழ்ந்துதான் பார்த்தால் என்ன
கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய்
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
உனது அரசாங்கம் பெரும் காடு
உலகம் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை அணைத்து கொண்டு
உள்ளம் மருகி நின்றால்
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா

உள்ளிருக்கும் உன்னை தேடி
ஓயாமல் அலைவோர் கோடி
கருவறையா நீ கடல் அலையா
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
என்னில் கடவுள் யார் தேடுகிறோம்
பொய்யாய் எவரின் பின் ஓடுகிறோம்
கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த
பெருந்தாயின் கருணை மறக்கிறோம்
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்

என் வெண்ணிலவே எரிக்காதே-ஆடுகளம்


திரைப்படம் : ஆடுகளம்
பாடியவர் : கே கே
இசை: G.V. பிரகாஷ்
வரிகள் : V. I. S. ஜெயபாலன்

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே

பனியில் இலையற்ற தனிமரம் நான்
பாலையில் துடித்திடும் சிறுப்புழு நான்
காதல் தேவதைப் போல் வந்து
களப்பலிக்கேட்பதேன் மோகினியே
நீ ஏன் எரித்தாய் மீனாட்சி
உன் நிழலில் வாழும் மதுரையடி!
மழையாய் தர வா நீ
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

கள்ளிப் பாலை ஊற்றிவிட்டு
வெள்ளி நிலவாய்ப் போனவளே
என்னில் வளர்த்த பொற்சிறகை
ஒடிந்திட நடந்திடும் கொடும் புயலே
அழகரைத் தொட்டதால் வைகை நதி
அலை கடல் சேரா மதுரையடி
என் விடிவா முடிவா நீ!
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏதோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

கண்கள் நீயே காற்றும் நீயே-முப்பொழுதும் உன் கற்பனைகள்


திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: சித்ரா
இசை:  G.V. பிரகாஷ்
வரிகள்: தாமரை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊணும்நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
(கண்கள் நீயே..காற்றும் நீயே )

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் தேனே
தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்

எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

வெயிலோடு விளையாடி-வெயில்


படம்: வெயில்
இசை: G.V.பிரகாஷ்
பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்: திப்பு, பிரசன்னா, ஜாஸி கிஃப்ட், கைலாஷ் கெர்

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை
(வெயிலோடு)

வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
(வெயிலோடு)

வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்

ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்

தொப்புள்கொடியைப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
(வெயிலோடு)


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை-அங்காடித் தெரு


படம்: அங்காடித் தெரு
இசை: G.V பிரகாஷ்
பாடியவர்: பிரசன்னா

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)



Wednesday, November 28, 2012

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்-கிரீடம்


திரைப்படம்: கிரீடம்
பாடகர்கள்: சாதனா சர்கம்
இசை:   G.V. பிரகாஷ்
பாடல் : நா.முத்துக்குமார்

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே நான் வாழ வேண்டும்

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலை கோதி
காதோரதில் எப்போதுமே உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமைப்பேன்
கையோடுதான் கை கோர்த்து நான் உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்

வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நெஞ்சும் தினம் விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே நான் பிறந்ததில் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
உன் தீண்டழில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொண்டேன்

வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

கண்ணீர் துளியே துளியே-கிரீடம்


திரைப்படம்: கிரீடம்
பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசை:   G.V. பிரகாஷ்
பாடல் : நா.முத்துக்குமார்

கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைதிடும் கைகள் இங்கே

கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

கண்கள் என்று இருந்து விட்டால்
அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை

கடவுளுக்கும் கவலை உண்டு
எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை

இந்த பாசம் அது
ரொம்ப பொல்லாதது
அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை
(கண்ணீர் துளியே துளியே)

மனதில் ஆயிரம் ஆசைகள் கடுக்குமே
நினைதது வழியில் இடி வந்து கெடுக்குமே

நதியினில் விழுந்த இலைகளுக்கு
போகும் திசைகள் புரிவதிலை

கரையில் இருக்கும் ஓடத்துக்கு
கடலின் கவலைகள் தெரிவதில்லை

யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குட்ற்றம் இது தானோ
(கண்ணீர் துளியே துளியே)

யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது
பரவைகள் கூடிலே இலையை முரித்தது

கனவில் பூக்கும் பூகளினை
கைகளில் பரித்திட முடிவதில்லை

காதலை மரக்க உலகதிலே
மருந்துகள் எதுவும் கிடைபதில்லை

யாரிடமும் குட்ற்றமில்லை
காலம் செய்த குட்ற்றம் இது தானோ
(கண்ணீர் துளியே துளியே)

கனவெல்லாம் பலிக்குதே-கிரீடம்


திரைப்படம்:கிரீடம்
பாடகர்கள்: கார்த்திக், P. ஜெயச்சந்திரன்
இசை: G.V. பிரகாஷ்
பாடல்: நா.முத்துக்குமார்

கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

வாழிகைகு அர்த்தங்கள் கிடைகிரதே
வானவில் நிமிடங்கள் அழைகிரதே
எனுடைய பிள்ளை எனை ஜெயிகிரதே
எனை விட உயரத்தில் பரந்து சிகரம் தொட

என் வானதில் ஒரு நக்ஷதிரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே
(கனவெல்லாம்)

நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே

நாளை உந்தன் பேரை சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே

என் தோளை தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீ அல்லவ

என் வேள்வி யாவும் வென்றதனால்
என் பாதி நீ அல்லவ

சந்தோஷ தேரில் தாவி யோஸ்
மனம் இன்று மிதந்திட
என் வானதில் ஒரு நக்ஷதிரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே
(கனவெல்லாம்)

கிளி கூட்டில் பொத்திவைத்து
புலி வளர்தேன் இதுவரையில்

உலகத்தை நீ வென்றுவிடு
உயிர் இருக்கும் அது வரையில்

என்னாளும் காவல் காபவன் நான்
என் காவல் நீ அல்லவ

எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீ அல்லவ

என் ஆதி அந்தம் யாவும்
இன்று ஆனந்த கண்ணீரில்
என் வானதில் ஒரு நக்ஷதிரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே
(கனவெல்லாம்)

Friday, October 26, 2012

கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்-கிரீடம்

படம்: கிரீடம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சோனு நிகம், ஷ்வேதா
பாடல்: நா.முத்துக்குமார்

கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோல்சாய்கிறேன் ஒ தோல்சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முறை இந்த இளமையில் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை
குடையோடு நான் போனேன் வழியினில் என்னோ நனைகின்றேன்
கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்
என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து குடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே

சிரிப்பினில் உன் சிரிப்பினில் என்னை சிறை எடுக்கிறாய் நான் மீளவில்லை
உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை
உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே
உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே

என் கனவுக்கு கனவுகள் நீ வந்து குடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தன் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தன் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோல்சாய்கிறேன் ஒ தோல்சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தன் என்று உயிர் சொன்னதே



Wednesday, September 12, 2012

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே-வெயில்


படம்: வெயில்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்: ஷங்கர் மஹாதேவன், ஸ்ரேயா கோஷல்
இசை: G.V. பிரகாஷ் குமார்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா.. ஓ..

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்
சாமி பார்த்துக் கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கிச் சொல்லி கேட்கிறேன்
கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னைச் சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

ஓ.. உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா..
ஓ.. உருகுதே