Showing posts with label மன்மதன் அம்பு. Show all posts
Showing posts with label மன்மதன் அம்பு. Show all posts

Friday, December 7, 2012

நீல வானம் நீயும் நானும்-மன்மதன் அம்பு


படம் : மன்மதன் அம்பு
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர்கள் : கமல், பிரியா ஹிமேஷ்
பாடல் வரிகள் : கமல்

நீ...ல வானம் நீ...யும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வைய்யமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே
நீ...ல வானம் நீ...யும் நானும்

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம்தனை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம்தனை
காதல் என்று பேர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை
உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர் தானடி
நீ...ல வானம் நீ...யும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்

ஆராத காயங்களை ஆற்றும் நம் நேசம்தனை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தனை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலை தானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர் தானடி
நீ...ல வானம் நீ...யும் நானும்