Showing posts with label ரெட்டைஜடை வயசு. Show all posts
Showing posts with label ரெட்டைஜடை வயசு. Show all posts

Friday, October 26, 2012

காஞ்சிப்பட்டு சேலைகட்டி கால்கொலுசில் தாளம் தட்டும்-ரெட்டைஜடை வயசு


படம்: ரெட்டைஜடை வயசு
பாடியோர்: ஹரிஹரன்

காஞ்சிப்பட்டு சேலைகட்டி கால்கொலுசில் தாளம் தட்டும்
கன்னிபொண்ணே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேன் என்று
சேர்த்து வெச்ச ஆசை சொல்லவா

சேலைதான் ஓல்ட்ஆச்சு! சுடிதாரும் போரு ஆச்சு!
நித்தம் ஒரு ஜீன்ஸ் போட்டு,முட்டி தொடும் மிடியும் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு அவளை நான் ரசிப்பேன்
மாசத்துக்கு ரெண்டு தரம் பியூட்டி பார்லர் கூட்டி போவேன்
ராத்திரியில் நைட்டி'யே போல் நானே நானே தான் இருப்பேன்
(காஞ்சிப்பட்டு சேலைகட்டி)

ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன், இடுப்பில் கையை போடுவேன்
முன்னால் பார்த்து ஓட்டுன்னு பின்னால் மெல்ல கிள்ளுவேன்
தூங்கிப்போனா சம்மதம், தோசை நானே ஊதுவேன்
ஊருக்கேதும் போயிட்டா உள்ளுக்குள்ளே ஏங்குவேன்
அவள் முகம் என் மகளுக்குமே வரும்படி ஒரு வரம் கேட்பேன்
அவள் பெயர்தனை இனிஷியல்யாய் இடும்படி நான் செய்திடுவேன்

அவள் தாவணி பருவத்து லவ் லெட்டர்னைதயும் இருவரும் படித்திடுவோம்
எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள்கூட இனிப்பென ருசித்திடுவோம்
வெங்காயத்தை வெட்டும் போதும் கண் கலங்க கூடாதம்மா
வெங்காயமே வேண்டாம் கண்ணே நான் அதை வெறுத்திடுவேன்

(காஞ்சிப்பட்டு சேலைகட்டி)

அடடா எந்தன் மம்மிக்கும் ஹைடெக் நடையை பழக்கணும்
சுடிதார் போட்டும் பார்க்கணும் தோழி போலே பழகணும்
அழகான பொண்ணு போகையில் அதை நான் ரசிச்சு பார்க்கையில்
காதை மெல்ல திருகனும் ஆனா என்ன ரசிக்கணும்

அவள் தலைதனில் பூ தைத்து அதை புகைப்படம் எடுத்து வைப்பேன்
அவள் பிடிக்கலை என்று சொன்னால் பீர் அடிப்பதை நிறுத்திடுவேன்
ஒரு நாளைக்கு மூணு முறை வைத்து அவள் தரும் சிகரெட்'ஐ குடித்திடுவேன்
என் சில்மிஷங்களில் சிதறிடும் ஜாக்கெட் ஹூக்'னை தைத்திடுவேன்
கோபப்பட்டு திட்டிவிட்டு கொல்லப்பக்கம் போயி நின்னு
அக்கம் பக்கம் பார்த்து விட்டு மெல்ல நான் அழுவேன்
(காஞ்சிப்பட்டு சேலைகட்டி)