Showing posts with label விண்ணைத்தாண்டி வருவாயா. Show all posts
Showing posts with label விண்ணைத்தாண்டி வருவாயா. Show all posts

Thursday, September 13, 2012

கடலினில் மீனாக இருந்தவள் நான்-விண்ணைத்தாண்டி வருவாயா


படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
பாடியவர்கள்: AR ரஹ்மான், ஷ்ரேயா கோஷல்
இசை: AR ரஹ்மான்
பாடல்: தாமரை

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா


கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓ... ஓ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓ..டும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்..ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவற விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்-ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்-அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
கூவினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓ... ஓ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்



ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில்-விண்ணைத்தாண்டி வருவாயா


படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
பாடியவர்கள்: பென்னி தயால், கல்யாணி மேனன்
இசை: AR ரஹ்மான்
பாடல்: தாமரை

ஆஹா.. அடடா
பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஹேய் ஆனால் ஹேய்
கண்டேன் ஹேய்
ஓர் ஆயிரம் கனவு
ஹேய் கரையும்
என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஒ..ஹோ
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன்
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு
உன் பார்வை நீ
நகர்த்திடும் பகலை இரவை
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணை சேர
புல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை
ஆகாய வெண்ணிலாவே
அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே



ஊனே உயிரே உனக்காக துடித்தேன்-விண்ணைத்தாண்டி வருவாயா


படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
பாடியவர்: கார்த்திக்
இசை: AR ரஹ்மான்

ஊனே உயிரே
உனக்காக துடித்தேன்
விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா

நேற்றும் இரவில்
உன்னோடு இருந்தேன்
அதை நீயும்
மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட
விண்ணைத்தாண்டி வருவாயா
நிலவே நீ வருவாயா

ஊனே உயிரே
உனக்காக துடித்தேன்
விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா

உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில்தானே
இரு துருவம் சேரும் அந்த ஓர் இடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை
அன்பே.....

விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா


அன்பில் அவன் சேர்த்த இதை-விண்ணைத்தாண்டி வருவாயா


படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
பாடியவர்கள்: தேவன், சின்மயி
இசை: AR ரஹ்மான்
பாடல்: தாமரை

அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என இணைந்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
ஹேய் நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே


நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
இன்று இங்கு அதை பயின்றோம்

பூமி வானம் காற்று
தீயை நீரை மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு
நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
ஹேய் நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே
நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
ஹேய் நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே



அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து- விண்ணைத்தாண்டி வருவாயா


படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், பிளாஸே, சுசனே-டி-மெலொ
இசை: AR ரஹ்மான்

ஹோ ஹோசானா ஹோசானா
ஹோ ஹோ ஹோசானா ஹோசானா ஹோ

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தல் ஆகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே

ஹோசானா என் வாசல் தாண்டி போனாளே
ஹோசானா வேறு ஒன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன்
சுக்கு நூறாகிறேன்
அவள் போன பின்பு
எந்தன் நெஞ்சை தேடிப் போகிறேன்
ஹோ..சானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோ..சானா சாவுக்கும் பக்கம் வந்தேன்
ஹோ..சானா ஏன் என்றால் காதல் என்பேன்
ஹோ..சானா

everybody wanna know what we like-a feel like-a
I really wanna be here with you
It's not enough to say that we're made for each other
It's love that is hosaana true hosaana,
be there when you callin out my(me) name hosaana,
feeling like my whole life has changed
I never wanna be the same
It's time we rearrange
I take a step, you take a step
I'm here callin out to you

ஹல்லோ ஹல்லோ ஹல்லோ
யோ யோ ஹோ..சானா ஹோ..சானா
ஹோ ஹோசானா ஹோ
ஓ.. ஹோ... ஓ... ஹோ...
ஓ.. ஹோ... ஓ... ஹோ...
ஓ.. ஹோ... ஓ... ஹோ...
ஓ.. ஹோ... ஓ... ஹோ...
ஓ.. ஹோ... ஓ... ஹோ...

வண்ண வண்ண பட்டுப்பூச்சி பூத் தேடி பூத் தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஓ சொட்டு சொட்டாய் தொட்டு போக
மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
ஹோ.சானா பட்டுப்பூச்சி வந்தாச்சா
ஹோ.சானா மேகம் உன்னை தொட்டாச்சா
கிழிஞ்சலாகிறாய் நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்திக் கொள்கிறேன்

ஹல்லோ ஹல்லோ ஹல்லோ ஓ...ஹோசானா
ஹோ...சானா என் மீது அன்பு கொள்ள
ஹோ...சானா என்னோடு சேர்ந்து செல்ல
ஹோ...சானா உம் என்று சொல்லு போதும்
ஹோ...சானா

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே


கண்ணுக்குள் கண்ணை ஒட்டிக்கொண்டே-படம்: விண்ணைத்தாண்டி வருவாயா


படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
பாடியவர்: நரேஷ் ஐயர்
இசை: AR ரஹ்மான்
பாடல்: தாமரை

கண்ணுக்குள் கண்ணை ஒட்டிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும்
பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா

உன் நண்பன் இல்லை
நான் உன் வானின் நிலா
நீ என் உயிரின் விழா
உன் நண்பன் இல்லை
நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா

கண்ணுக்குள் கண்ணை ஒட்டிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா

நீயும் நானும்
ஒரே புள்ளி ஒரே கோடு
நீயும் நானும் வாழப் போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று

கண்ணுக்குள் கண்ணை ஒட்டிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும்
பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா

உன் நண்பன் இல்லை
நான் உன் வானின் நிலா
நீ என் உயிரின் விழா
உன் நண்பன் இல்லை
நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா