Showing posts with label கார்த்தி. Show all posts
Showing posts with label கார்த்தி. Show all posts

Friday, December 21, 2012

நா ஒன்னாம் க்கிலாசு படிக்கும் போதே-அலெக்ஸ்பாண்டியன்


படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்
பாடியோர்: முகேஷ்,பிரியதர்ஷினி
பாடல்: வாலி
 
நா ஒன்னாம் க்கிலாசு படிக்கும் போதே
ஒன்னு விட்ட மாமன் பையன்
கண்ணடிச்சு கை புடிச்சானே

நா ரெண்டாம் க்கிலாசு படிக்கும் போதே
ரெஷன் கடை க்யுவப்போலே
வாசல் முன்னே கூட்டம் கண்டேனே

நா மூனா க்கிலாசு படிக்கும் போதே
ஸ்டுடன்ஸ் கையில் என் இன்ரெக்கிவ்வும்
நாழாங் க்லாசு படிக்கும் போதே
எங்கும் என் ஸ்டேசு

இம்மாம் பேர விட்டுபுட்டு மூனு பேரும் ஆசப்பட்டு
ஓ பின்னாலே வாந்தோமே என்ன செய்ய போர...

பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...
பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...

ஆ... மல்லிகா ஷரவத்துக்கு மேனிக்கு மாராத்து
மச்சன் நீ தான் பண்ணுணு யாரோ சொன்னாங்க

ஹே... வந்தாக்கா மேசேஜுதான் செய்வேனே மசாஜுதான்
நான் தான் செஞ்ச ஒளவையும் குஷ்பு ஆவாங்கா

ஓயில் மசாஜா முட்ட போயில் மசாஜா சொல்லு
காத்திருக்கேன்டா கண்ணாளா...

ஹேய் கூடும் போது தான் நான் ஓர் குடன் குலம் தான்
தொட்டா back முதல் front-u வரை சொக் அடிக்காதே...

பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போம் கம் கம் கம்
நாம் ஒன்னா சேந்தாலே

பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...

ஆ... ப்ரெட்டுல பப்பர் வச்சா மாரோட சேன்டு வச்சா
உன்னை அள்ளி என் மேலே ஒட்டு மச்சானே
ஏ... வெச்சாக்கா பிக்க மாட்டேன் வேராகி நிக்க மாட்டேன்
ஊசி நூலு இல்லாம ஒன்னா தெப்பேனே

கேட்டு வோக்கு தான் மேலே மூனு வோக்கு தான்
கண்டு வேர்த்து போனாலே சேவாக்கு...

ஹேய் பேட்டு புடிச்சல் முன்னால் பந்து குதிச்சால் பாரு
செஞ்சரி மேல் செஞ்சரி தான் சொல்லி அடிப்பேன்

மாமா சேப்பாகும் என் மேனி நீ தானேடா என் தோனி
வந்து தான் விளையாடு...

பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...

ஓய் மாமா பெண்ண தான்னு திமிரா கேட்டது ஒரு காலம்-அலெக்ஸ்பாண்டியன்


படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்  
பாடியோர்: கார்த்திக்
பாடல்: விவேகா

ஓய் மாமா பெண்ண தானு திமிரா கேட்டது ஒரு காலம்
இப்ப மெடரோமொனியில் பொண்ண தேடி லூசா அலைகிறோம்

நம் வீட்டு பக்கத்துல இருக்கும் நெபர் பெயர் தெரியாது ஆனா
facebook-ல உலகம் பூரா frienda தேடுகிறோம்

யே புள்ள மீனாச்சி உங்க அண்ணா வேலை என்னாச்சு
இப்படியெல்லாம் இப்ப நாம எங்க பேசுறோம்

எல்லாம் கையில செல் போனு
அதில் சினிமா பாட்டு ரிங்கிங் டோனு
மனச விட்டு பேச மறந்து
போலி வாழ்க்கை தான் வாழ்கிறோம்

தக்க தையா...
இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா
ஹே... தகக்க தையா...
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்

ஹேய் அப்பனோட அப்பா பெர மரக்கிறோம்
பிள்ளைக்கு சச்சின், தோனி பெயர வச்சு வளக்கிறோம்

அப்பா அப்பா அத அத கத்து தார மரந்துட்டு
பின்னால பொலம்புறோம்

டீவீ பெட்டி முன்ன நித்தம் கிடக்கிறோம்
அதில் தேம்பி அழும் பெண்ண கண்டு உருகுறோம்
பக்க வந்த சொந்தங்களை காக்க வெச்சி
பாசத்த பஞ்சர் ஆக்கி அனுப்புறோம்

ஹோய் தாலாட்டு பாட்டெல்லாம் காணாம போச்சேடா
அட குத்து பாட்ட கேட்டு தான் இப்ப
பச்ச குழந்தையும் தூங்குது

தக்க தையா...
இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா ஹோய்
ஹேய் தக்க தையா...
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்

ஹேய் கட்டு கட்டா பணம் வந்து பலனில்லை
உன் கட்டிக் கொஞ்சம் சொந்தம் வேணும் மாப்பிள்ள
நாடு நாடு சுத்தினாலும் வீடு வந்து
சேரும் போது நிம்மதி பொறக்குமே

அண்ணா தம்பி சண்ட கூட நடக்கலாம்
அதில் ஆளுக்கொறு பல்லு கூட உடையலாம்
வேரோறுத்தன் யாரே வந்து அண்ணன் மேல கைய வச்சா
தம்பி மனம் துடிக்குமே

கா கா-னு சொன்னாலே காக்கைகும் கூட கூட்டம் வரும்
பாடான மனுசம் தானே பாதி பாதி வாழுறான்

தக்க தையா...
ஹேய் இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா ஹோய்
தக்க தையா...
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்

நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ- அலெக்ஸ்பாண்டியன்


படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்  
பாடியோர்: தேவிஸ்ரீபிரசாத்,அனிதா
பாடல்: விவேகா

ஹேய் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே

ஹேய் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே

யானை, சிங்கம், பலி பல நூறு ஜந்துக்கள்
எல்லாம் எல்லாம் இங்கே என்னோட நண்பர்கள்
லேசா செஞ்சபோதும் கண்ணலே ஒரு சிக்னல்
உன்ன புடிச்சு தருமே என் கையில்

ஹேய் நான் தான் இந்த காட்டு ராஜா நீயோ ஒரு கன்னி ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்

ஹேய் நான் தான் இந்த காட்டு ராஜா நீயோ ஒரு கன்னி ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்

ஹேய் நாழு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே

வெள்ள துரை நானே ஆயுல் சிறை நானே
தப்பா நினைக்காதே வேப்பன் எழுப்பேனே

செம்மன் முடிகாரா சும்மா மெரட்டாதே
இங்லிஷ் திமிரேல்லாம் இங்க நடக்காதே

ஹேய் அனக்கோன்டாவ புடிச்சே நா அடக்கி வெச்ச ஆளு
அட தம்மாதுண்டு இருக்க உன்ன விடுவேனா சொல்லு

யானை பெருசா இருந்தாழும் ஒரு எறும்ப கண்டு அளரும்
சிறுசும் பெருச ஜெய்க்கும் தில்லு தில்லு

ஹேய் நான் தான் இந்த நாட்டு ராஜா நீயோ ஒரு பட்டு ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன

ஹேய் நாழு பக்கம் ஆளிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே

சின்ன முகமூடி குட்ட கருந்தாடி
வெச்ச பெருங்கேடி பொலிஸ் வரும் தேடி

ஹேய் ஏழு மலை தாண்டி எட்டு கடல் தாண்டி
உன்னை ஒலிப்பேன்டி எவன் புடிப்பானடி

ஹா கூகுல் மெப்ப போட்டு அட கண்டு புடிப்பான் ரூட்ட
அழுவ சோரி கேட்டு சோ இப்ப வாலாட்டு

ஹேய் எல் போட் இல்ல சிட்டு நா எதிழும் அப்டுடேட்டு
ரோங்கோ இல்ல ரைட்டு நா வெய்ட்டு வெய்ட்டு

ஹேய் நான் தான் கொள்ளை ராஜா நீயோ ஒரு வெள்ளை ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்

Bad Bad Boy-அலெக்ஸ்பாண்டியன்


படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்  
பாடியோர்: பாபா சேகல்,பிரியா ஹிமேஷ்  
பாடல்: கருணாகரன்

எல்லோருக்கும் வணக்கம்
எல்லோருக்கும் வணக்கம்

என்ன பார்க்க வந்த
எல்லோருக்கும் டப்புள் வணக்கம்
வணக்கம்..

ஹேய் பட்டி தொட்டி ஒலிக்கும்
பட்டி மன்றம் நடக்கும்
என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும்
அடி கிடைக்கும், கிடைக்கும்...

மச்சி தல இந்தா மாலை
உன்ன பார்த்த மனசு ஹெப்பி ஆச்சுடா
ரிலேக்ஸ் மாமு ரிலீஸ் நானே
இனி ஊரே என் கிட்ட மாட்டிக்குச்சுடா

Im a Bad Bad Bad Bad Boy...
Im a Bad boy, am a Bad boy

ஏ வருஷத்துல பாதி நாளு
நான் கவர்மண்ட்டு கஸ்டமரு கேட்டுப்பாரு
பாரு பாரு பாரு கேட்டுப்பாரு

ஏ நல்லவனா? கிடையாது
அடிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது
காது காது காது புடிக்காது

கேடி, ரவுடி, மொல்லமாரி
அட எல்லாம் சேர்ந்த நல்ல பையன் டா
பில்லா, ரங்கா, பாட்ஷா எல்லாம் என்
தோஸ்த்து தான்டா கேட்டுப்பாரோன் டா
(Im  a Bad)

ஜில்லுனு தான் வாருவானே
ஜாங்கிரி போல சிரிப்பானே
ஜீ பூம் பா செய்வானே
Bad Boy, Bad Boy

மெக்னட் கண்ணால
சொக்லெட்டு கன்னத்தால
மயக்கிபுட்டு போரானே
Bad Boy, Bad Boy

ஹே யே குரு தான் நம்பியாரு
என்னையும் வில்லனா மாத்திடாரு
டாரு டாரு டாரு மாத்திடாரு

ஹேய் எனக்குள்ளயும் எம் ஜீ ஆர்-ரு
அப்போ அப்போ வந்து எட்டி பாப்பாரு
பாரு பாரு பாரு எட்டி பாப்பாரு

இப்ப full-u life ஜில்லு
ஹேய் நீயும் நாட்டுல கிங்கு தானடா

மச்சி மாசி மாத்தி யோசி
அட வாழ்க்க வாழ்க்க காசு வேணுடா
(Im a Bad)

ரய்யா ரய்யா ரய்யா ரய்யா-அலெக்ஸ்பாண்டியன்


படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்  
பாடியோர்: ஜாவிட் அலி,ராணினா ரெட்டி
பாடல்: பா.விஜய்

மேனே ப்யாருகியா சாவன் சாவரியா
தில்வாலே துனாலியா கதய கேட்டியா
மேனே ப்யாருகியா சாவன் சாவரியா
தில்வாலே துனாலியா கதய கேட்டியா

ரய்யா ரய்யா ரய்யா ரய்யா
மேனே ஹேய் ப்யாருகியா
ரியா ரியா ரியா ரியா
காதலிக்க நீ வாரியா

ஹோய் ரய்யா ரய்யா ரய்யா ரய்யா
மேனே ஹேய் ப்யாருகியா
ரியா ரியா ரியா ரியா
காதலிக்க நீ வாரியா

ஆஜா ஏ ஆஜா நீ தான்டா பொருக்கி ராஜா
குஜாவுக்கும் ராஜாவுக்கும் டூயட்டு

ஹேய் சோஜா சோஜா என் நெஞ்சில் வந்து சோஜா
என் மனசு காதல் வெல்வெட்டு

Film-u கலர் Film-u என் நெஞ்சிலே
ஓடுது லவ் லவ் படமே ஹோய்

இனிமே அடடா இனிமே லவ் படதுல
நமக்கு விசிலே வருமே ஹேய்
(ரய்யா)

மேனே ப்யாருகியா சாவன் சாவரியா
தில்வாலே துனாலியா கதய கேட்டியா

ஏ... நீ எனக்கு மாங்கா நா உனக்கு பூங்கா
லவ்... சோங்கா...

அப்படியா...
பக்கதுல தேங்கா பாக்குரியே ரோங்கா
ஓ... லோங்கா...

அய்யோ...
சண்டி ஹே சண்டி நீ சாத்துக்குடி மண்டி
ஜூசு கட உன்ன கண்டு ஏங்குது

ரெண்டி ஏ ரெண்டி நீ ராயபுரம் வண்டி
உன்ன தொட்டா உச்சி ஊருது...
(Film-u கலர் )

ஹேய் இனிமே அடடா இனிமே லவ் படதுல
நமக்கு விசிலே வருமே

காரக்குடி தாண்டி கட்டும் சேலை வாங்க
நா... போரேன்

சேலை வாங்கி வாந்தா கட்டி விட தானே
நா... வாரேன்

தொட்டா ஏ தொட்டா நீ சேலை கட்டி விட்டா
என் இடுப்புல நிக்காமலே போய்டு

விட்டா ஏ விட்டா நீ என்ன கொஞ்சம் விட்டா
சோலையாக என்ன கட்டுவே...
(Film-u கலர் )

ஹேய் இனிமே அடடா இனிமே லவ் படதுல
நமக்கு விசிலே வருமே ஹேய் ஹேய் ஹேய்

Thursday, October 25, 2012

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல-சிறுத்தை


படம்: சிறுத்தை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: ரஞ்சித்
வரிகள்: நா.முத்துக்குமார்

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

ஃபிரண்ட் எல்லாம் பொறுக்கி புள்ள எச்சக்கல திருட்டு புள்ள
எங்களுக்கு ஊரும் இல்ல பெர்மணெண்டு பெயரும் இல்ல
தட்டி கேட்க ஆளும் இல்ல டாவடிக்க நேரம் இல்ல
சொந்தம்ன்னு யாரும் இல்ல செண்டிமென்டு ஏதும் இல்ல

ராஜா ராஜா நான் ராக்கெட் ராஜா
ஹேய் ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

அஞ்சாம் க்ளாஸு படிக்கும் போது ஆட்டைய போட்டவன்
நான் ஆறாம் க்ளாஸு படிக்கும் போது ப்ளேட் போட்டவன்
ஹெட்மாஸ்டர் பைக்கை திருடி எடைக்கு போட்டவன்
நான் செண்ட்ரல் ஜெயிலில் நூறு தடவை டெண்ட்டு போட்டவன்
ஏமாந்தா ஏமாத்து என் வேல பம்மாத்து
சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய்
வைக்குறதெல்லாம் பாக்கெட்ல கை
பாறாங்கல்லில் கூட நானும் எடுத்துடுவேன் நெய் நெய்

ராஜா ராஜா நான் ராக்கெட் ராஜா
ஹேய் ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

கம்பி எண்ணி கம்பி எண்ணி கணக்கு படிச்சவன்
நான் நாலு வயசில் நம்பியார் போல சுட்டவன்
வஞ்சிக்கோட்டை வாலிபனா வாழ நெனச்சவன்
நான் பிஞ்சுலேயே பழுத்தவன்னு பேரு எடுத்தவன்
என் ரூட்டு தனி ரூட்டு என் வேட்டு அடி வேட்டு
சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய்
வைக்குறதெல்லாம் பாக்கெட்ல கை
பாறாங்கல்லில் கூட நானும் எடுத்துடுவேன் நெய் நெய்

ராஜா ராஜா நான் ராக்கேட் ராஜா
ஹேய் ராஜா ராஜா பிக் பாக்கேட் ராஜா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

Thursday, September 13, 2012

துளி துளி துளி மழையாய் வந்தாளே-பையா


படம்: பையா
இசை: யுவன்ஷங்கர் ராஜா

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
 சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...

சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாய்வேன்..
பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...




அடடா மழைடா அட மழைடா-பையா


படம்: பையா
பாடியவர்கள்: ராஹுல் நம்பியார், சைந்தவி
இசை: யுவன் ஷங்கர் ராஜா

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
(அடடா மழைடா..)

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வச்ச மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே உனக்குள்ள தேடிப் பாரு
மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னைப் போல வேற யாரும் இல்ல
என்னை விட்டா வேற யாரு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்டை கொடுத்தென்னை அனுப்பிவைச்சான்
இந்த கண்ணு போதலையே எதுக்கு இவள படைச்சுவைச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒன்னு என்னை கொன்னு புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே ..
(அடடா மழைடா..)
பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழை கூட சூடாச்சு
இடியை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேண்டாம்
மழையை பூட்டி யாரும் என் மனசை அடைக்க வேண்டாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு




என் காதல் சொல்ல நேரம் இல்லை-பையா


படம்: பையா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தான்வி
இசை: யுவன் ஷங்கர் ராஜா

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
(என் காதல் ..)

காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
(என் காதல் ..)





பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்-பையா


படம்: பையா
பாடியவர்: பென்னி தயால்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப் பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடயம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்னப் பேரோ நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர்த் தாண்டி ஏராளம் பேர்த்தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற செடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எரிகின்றேன்
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்



சுத்துதே சுத்துதே பூமி-பையா


படம்: பையா
பாடியவர்: கார்த்திக், சுனிதா சாரதி
இசை: யுவன் ஷங்கர் ராஜா

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாயத் தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

சிரித்து சிரித்து தான் பேசும் போதிலே
வலைகளை நீ விரித்தாய்
சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு
நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அடக்கொட்டக் கொட்ட
விழித்தே துடிக்கிறேன்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி


இதயம் உருகித்தான் கரைந்துப்போவதைப் பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா கேட்கிறேன்
உனை கேட்கிறேன்
இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்துப்போகுமா
இப்படி ஓர் இரவு
அட இங்கு வந்த நினைவும் மறக்குமா
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
உன் அழகை விண்ணில் நிறுத்து எட்டி எட்டி நிலவு பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் புதைக்கும்