Showing posts with label 2010. Show all posts
Showing posts with label 2010. Show all posts

Friday, December 14, 2012

நான் போகிறேன் மேலே மேலே-நாணயம்

படம் :நாணயம்
பாடியவர்: S.P. பால சுப்பிரமணியம், K.S. சித்ரா
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடலாசிரியர் :தாமரை

நான்  போகிறேன்  மேலே  மேலே
பூலோகமே  காலின்  கீழே
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே
பூ  வாளியின்  நீரை  போலே
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம்
அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம்
ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும்
ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும் 

நான்  போகிறேன்  மேலே  மேலே 
பூலோகமே  காலின்  கீழே 
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே 
பூ  வாளியின்  நீரை  போலே 
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே 
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம் 
அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம் 
ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும் 
ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும்

கண்ணாடி  முன்னே  நின்றே 
தனியாக  நான்  பேச 
யாரென்னும்  ஜன்னல்  தாண்டி  பார்த்தால்  ஐயோ 
உள்பக்கம்  தாழ்பாள்  போட்டும் 
அறையினுள்  நீ  வந்தாய் 
கை  நீட்டித்  தொட்டுப்  பார்த்தேன்  காற்றை  ஐயோ 

என்  வீட்டில்  நீயும்  வந்து  சேரும்  காலம்  எக்காலம் 
பூ  மாலை  செய்தேன்  வாடுதே 
என்  மெத்தை  தேடும்  போர்வை  யாவும்  சேலை  ஆகாதோ 
வாராதோ  அன்னாளும்  இன்று ,ஹானான்

என்  தூக்கம்  வேண்டும்  என்றாய் 
தரமாட்டேன்  என்றேனே 
கனவென்னும்  கள்ளச்சாவி  கொண்டே  வந்தாய் 
வார்த்தைகள்  தேடி  தேடி  நான்  பேசி  பார்த்தேனே 
மௌனத்தில்  பேசும்  வித்தை  நீதான்  தந்தாய்

அன்றாட  போகும்  பாதை  யாவும்  இன்று  மாற்றங்கள் 
காணாமல்  போனேன்  பாதியில் 
நீ  வந்து  என்னை  மீட்டி  செல்வாய்  என்று  இங்கேயே 
கால்  நோக  கால்  நோக  நின்றேனே

நான்  போகிறேன்  மேலே  மேலே 
பூலோகமே  காலின்  கீழே 
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே 

பூ  வாளியின்  நீரை  போலே 
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே 
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே

ஆ ....
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம் 
அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம் 
ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும் 
ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும் 

கள்வரே கள்வரே-ராவணன்

படம் : ராவணன்
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஸ்ரேயாகோஷல்
பாடல் வரி : வைரமுத்து

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமறிவீரோ.. அருள்புரிவீரோ..

வாரம் தோறும் அழகின்  பாரம் கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை களைவீரோ உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொல்வேனே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே