Showing posts with label ஆதிபகவன். Show all posts
Showing posts with label ஆதிபகவன். Show all posts
Thursday, October 11, 2012
ஒரு துளி விஷம் காதல் உயிரில் கலக்குதே-ஆதிபகவன்
படம்: ஆதிபகவன்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: ஷரிப் சபரி,ஸ்ரேயா கோஷல்
வரிகள்: சிநேகன்
ஒரு துளி விஷம் காதல் உயிரில் கலக்குதே
அரைநெடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே... மயக்குதே...
வெல்லுதே வெல்லுதே முரண்களை வெல்லுதே
கொள்ளுதே கொள்ளுதே தவணையில் கொள்ளுதே
உன்னை மறுக்க தொலைந்து பார்த்தேன்
அட எந்தன் நெஞ்சம் வர மறுக்குதே
வரைய வரைய அழித்து பார்த்தேன்
அது மீண்டும் உன்னை மனம் வரையுதே
மௌனத்தாலே பாசையிலே ஆசையாலே அவஸ்தையாலே
காதல் தேடி உயிர் உதருதே
(ஒரு துளி)
மரணம் தேடும் போதும் மயக்கம் கொண்டு
ஜீவன் வாழ்வதேன், வாழ்வதேன்
உறவுக்காக ஏங்கி மனுஷ பூவும்
ஒன்று சாவதேன், சாவதேன்
தடை விதிக்காதே மனம் மண்டி இடும் போதும்
உயிர் தூண்டுபடும் போதும் உன்னை மறுக்காதே
மறு முறை இனி பிறப்பதா உன் அருகிலே தனித்து இருப்பதா
காதலை இங்கு மறுப்பதா இல்லை வெறுப்பதா
ஒரு விடைகொடு விடைகொடு இதயத்தில்
இதயத்தில் இடம்கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்
காதல் என்னும் தீயில் கருக கூட - பெண்மை
துணிந்ததே துணிந்ததே
அமில நதியை கூட அமுதம் என்று என்னி
நீந்துதே நீந்துதே
வலி தெரியாதே விழி பதைக்கிற போதும்
உடல் தித்திக்கற போதும் விலை கிடையாதே
உடைகிறேன் நான் உடைகிறேன் - அட
உன் வசம் சரண் அடைகிறேன்
கரைகிறேன் மெல்ல உறைகிறேன்
உன்னில் இணைகிறேன் முடிவேடு முடிவேடு
இதயத்தில்
இதயத்தில் இடம் கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்
(ஒரு துளி)
யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே-ஆதிபகவன்
படம்: ஆதிபகவன்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: மதுஸ்ரீ
வரிகள்: சிநேகன்
யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எது வரை இதன் எல்லை
எனக்கொரு பதில் சொல்வாயடா
உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடி பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா
யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே
உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
உந்தன் அணைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசு தான்
கொஞ்சம் நெருக்கம் கொஞ்சம் இருக்கம்
ரெண்டும் பெண்மை கேட்கம் பரிசு தான்
ஆசை அணைத்தும் உன்னை நோக்கியே போக
ஓசை இன்றியே வார்த்தை அணைத்தும் சாக
தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததாய்
தூரம் குறைகையில் உணர்கிறேன்
எந்தன் அறைகளில் அடை திரைகளை
விட்டு விலகி நான் மலர்கிறேன்
(உனக்கென)
காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே-ஆதிபகவன்
படம்: ஆதிபகவன்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: உதித் நாராயணன்,ஸ்வேதா பண்டிட்
வரிகள்: அறிவுமதி
நிச ரிக ரிக ரிக ரிக ரிச நிச
சம கம மப கரி சநிநி நிச
ரிக ரிக ரிக ரிக ரிகரிச நிச
தச தசசநி ரிக மதமதமம...
மபமபதபப...
காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே
அய்யோ அய்யோ மேகம் போலே கலைந்து கலைந்து போகிறேன்
மெய்யோ பொய்யோ தோனவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன்
விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்
காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே
உயிரே உயிரே ரெண்டானதே... ஓ...
இளமை உடைந்து திண்டாடுதே... ஓ...
பாறை கரைந்து பாலானதே
பார்வை நான்கும் கொண்டாடுதே
வானம் எந்தன் தலைதட்டுதே
வார்த்தை என்னுள் கவிகட்டுதே
நீயும் நானும் கேட்காமல் நாம் ஆனதேன்
மூச்சு காற்றிலே நுழைந்தாயே
பூச்சு போட்டுகள் திறந்தாயே
நீ யாரடா தேடினேன் முகவரிதானே
வாய் கூசுதே உன் பேரை தான் பேசுதே
சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடைதானா
ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடைதானா
ரசித்து கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன்
மின்னல் முதுகில் ஏறியே நானும் கண்டம் தாவினேன்
காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே
நிச ரிக ரிக ரிக ரிக ரிச நிச
சம கம மப கரி சநிநி நிச
ரிக ரிக ரிக ரிக ரிகரிச நிச
தச தசசநி ரிக மதமதமம...
மபமபதபப...
ஐசலாமே ஐசலாம் ஆணும் பெண்ணும் ஐசலாம்-ஆதிபகவன்
படம்: ஆதிபகவன்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: மானசி ஸ்கொட்,ராகுல் நம்பியார்
வரிகள்: சிநேகன்
ஐசலாமே ஐசலாம் ஆணும் பெண்ணும் ஐசலாம்
மோக தீயில் வேகலாம் வா வா வா
இளமை என்னும் தீபோறி ஏரியும் போதே பூ பறி
எந்தன் தேகம் ஸ்ரோபேரி வா வா வா
ஆசை என்னும் தாய் மொழி பேசி பார்க்க அல்வேரி
அசைவா ஆற்றில் நீ குளி இன்பத்தை தேடாத ஆளில்லடா
குழு: இஸ்கலாதே இஸ்கலாதே ஆவோ ஆவோ ஆவோ
இஸ்கலாதே இஸ்கலாதே ஆவோ ஆவோ ஆவோ
மின்சாரம் போல சந்தோஷ்ம் தேடும்
மேல் வீட்டு பூ மெட்டு நான் தானடா
சம்சார தோல்லை என்கிட்ட இல்லை
உன்னோடு வேகாத நீ காட்டுடா
ஹேய் ராத்திரி ஆனா ரங்கோலிடா
எல்லாரும் இங்கே பங்காளிடா
வாலிப காட்டில் தீவாளிடா
வீணா நீ போடாதே பொய் வேளிடா
உள்ளாசம் தேடி உற்சாகம் தேடி
முக்திக்கம் பக்திக்கும் ஊர் கூடடா
உன்னாலே உலகம் சொன்னாலே கலகம்
பொண்ணுக்கும் போதைக்கும் பொய் சொல்லாம்
எல்லாரும் இங்கு பக்தன் இல்லை
உண்மையில் யாரும் புத்தன் இல்லை
ஆசையாசம் தப்பா இல்லை
தப்பில்லை வாழ்க்கையில் உப்பே இல்லை
இஸ்கலாதே இஸ்கலாதே ஆவோ ஆவோ ஆவோ
இஸ்கலாதே இஸ்கலாதே ஆவோ ஆவோ ஆவோ
ஹேய் ஐசலாமே ஐசலாம் வெற்றியாட வா சலாம்
வேறு உலகம் தேடலாம் வா வா வா
ஹேய் காணம் தந்த பூமிடா
தாங்கி பிடிக்கும் சாமிடா
வாழ்ந்து தீர்த்தான் ஞானிடா
சொர்கம் வேரேங்கும் தேடாதேடா
Subscribe to:
Posts (Atom)