Showing posts with label மனம் கொத்தி பறவை. Show all posts
Showing posts with label மனம் கொத்தி பறவை. Show all posts

Wednesday, November 28, 2012

போ போ போ நீ எங்க வேணாம் போ- மனம் கொத்தி பறவை

படம் :  மனம் கொத்தி பறவை
இசை : இமான்
பாடியவர் : விஜய்பிரகாஷ்,சின்மயி
வரிகள் : யுகபாரதி

போ போ போ நீ எங்க வேணாம் போ..
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ..
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ..
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ..
போ போ போ நீ எங்கு வேணாம் போ..
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே...

போ.. போ.. போ.. நீ எங்கு வேணாம் போ..
போ.. போ.. போ.. நீ ஒண்ணும் வேணாம் போ..

தங்கமே என்னிடம் என்ன குற‌ கூறு..
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு...
ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம்..
மாறிடாமலே நடுவயதில் ஊரைக்கோடினோம்..
ஒரு நாள்கூட நீங்காமல் கேலி பேசினோம்..
நமை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம்..
செல்வமே.....

போ.. போ.. போ.. நீ கூடு விட்டுப் போ..
போ.. போ.. போ.. நீ கூறும் கெட்டுப் போ..

கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம்..
சொல்லடி பட்டு நான் நிப்பதென்ன நியாயம்..
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்..
கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன்..
உனை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி..
எனை ஏற்கமால் போனலே போடி உன் விதி..
உன் விதி.....

எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ..
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ..
போ போ போ நீ தாலி கட்டிப் போ..
போ போ போ நா வாழாவெட்டி போ..
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே..
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீ தானே..
பச்சைக்கிளி நீயே.. விட்டுப்பறந்தாயே..
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே..
போ.. போ.. போ..


என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க- மனம் கொத்தி பறவை


படம் : மனம் கொத்தி பறவை
இசை : இமான்
பாடியவர் : விஜய்பிரகாஷ்,சின்மயி
வரிகள் : யுகபாரதி

என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே
பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழ தூறுதே

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே

இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே
வந்தாயே என்னோடு எதனாலே சொல்
முன்ஜென்மமே செய்த முடிவே பதில்
சொல்லும் முன்பு தரிசா கெடன்தேனே
சொன்ன பின்பு வெளஞ்சேனே
கம்பஞ்சுக்கு கரும்பா இனிச்சேனே
கப்பி கல்லு மலர்ந்தேனே
எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி
உன்ன நாய் போல சுத்துது என் முக்தி

என்ன சொல்ல...

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே

இச்சு இச்சு கன்ணதுல கிச்சு கிச்சு நெஞ்சுக்குள்ள
ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கிள்ளுதே
சொன்னாலும் கேக்காம அடம் பண்ணுதே
உண்ண பத்தி எனக்கு தெரியாதா
சொக்க வெச்சு என ஏப்ப
தன்ணீக்குள்ள மெதக்கும் படகானேன்
எப்ப புள்ள கர சேப்ப

உண்ண கண்னாலம் செய்யும்போது கட்டிக்கிட்டு
புள்ள பெப்பேனே போகாத விட்டு

என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே
பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழ தூறுதே

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே.


ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல-மனம் கொத்தி பறவை


படம் : மனம் கொத்தி பறவை
இசை : இமான்
பாடியவர் : சந்தோஷ் ஹரிஹரன்
வரிகள் : யுகபாரதி

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
a
காணாம காண வைச்ச கண்ணுக்குள்ள தீய வைச்ச
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல

பேசாம பேச வச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
பேசாம பேச வச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல

கூவாம கூவ வச்ச கொண்டயில பூவ வச்ச
ஆனா நீ என்ன மட்டும் கூடவே இல்ல
அய்யோ தொலஞ்சு போன ஆள நீயும் தேடவே இல்ல
அய்யோ தொலஞ்சு போன ஆள நீயும் தேடவே இல்ல
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச
ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல
கள்ளி காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல
கள்ளி காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல

தானாக உன்ன வந்து சேரவா புள்ள
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல

கொஞ்சம் நோகாம கண்ண மூடி தூங்கு மாப்புள்ள